நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் Jeffersonville, Indiana, USA 61-1231M 1புது வருடத்திற்கு முந்தைய நாள், காலை வேளையில், கர்த்தருடைய ஆராதனையில்... சகோதரன் நெவில் அவர்களும் நானும் சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்தோம், மேலும் நாங்கள், நாங்கள் என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். இக்காலையில், நான் அவரை அழைத்து இங்கே நிற்க வைத்து உங்கள் எல்லாருக்கும் பிரசங்கம் பண்ண வைக்க வேண்டும் என்றும், நானோ இன்றிரவில் பிரசங்கிக்கலாம் என்றும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் (அந்த யோசனையை) விட்டு விடும்படியாக நேரிட்டது, நானே இக்காலையிலும் இன்றிரவும் பிரசங்கம் பண்ணும்படியாக, இரண்டு வேளைகளும் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர் ஒரு நல்ல விற்பனையாளராக இருக்கிறார். எனவே நாம் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, நமக்கு ஒரு வகுப்பு உண்டு என்று நான் அவரிடம் கூறினேன், நாம் ஒரு வகுப்பைக் கொண்டிருக்க, இக்காலையில் இங்கே நம்மில் மிகவும் அநேகர் இல்லாதது போலிருக்கிறது. நான் இதைச் செய்வதற்கு முன்பாக, நான் ஒரு சிறு அறிவிப்பைக் கூற விரும்புகிறேன். 22.நம்மோடு சிறிது காலம் தங்கியிருக்கும்படி, நியூயார்க்கிலிருந்து இங்கே வந்துள்ள சிலர் நம்மிடம் உள்ளனர். நான் அந்த ஜனங்களை ஒருபோதும் சந்தித்ததேயில்லை என்று நினைக்கிறேன். அதைக் குறித்து சகோதரன் நெவில் சற்று முன்பு பேசினதாக கூறினார். அவர்கள் - அவர்களுடைய ட்ரெயிலர் வண்டி தீப்பிடித்து, அது அவர்களுடைய வண்டியை (trailer) அழித்து விட்டதாக கடந்த இரவு நான் கேள்விப்பட்டேன். நான் அந்த ஜனங்களைக் காணும்படி வெளியே போனேன், அவர்கள் அன்பினால் நிறைந்த அருமையான கிறிஸ்தவர்களாய் இருப்பதாகத் தோன்றியது. அவர்கள் நம்மெல்லாரையும் போல ஒரு வித ஏழ்மையான ஜனங்களாய் இருக்கிறார்கள், சகோதரன் உட் அவர்களும், நம்மில் இரண்டு அல்லது மூன்று பேர்களும் சந்தித்து அவர்களுக்காக வேறொரு டிரெய்லர் வண்டியை நம்மால் வாங்க முடியுமா என்று பார்க்கப் போவதாக இருந்தார்கள். அவர்கள் மிகவும் இனிமையானவர்களாயிருந்து, அவர்கள் அதற்கான காப்பீட்டைக் கொண்டிருந்ததாகக் கூறினார்கள். அவர்கள் போதுமான அளவு பணமில்லாத நெருக்கடியான நிலையில் இருந்து, அவர்கள் காப்பீட்டை விட்டு விட வேண்டியதாய் இருந்தது. ஆனால், எப்படியும், ஏஜண்ட் காப்பீட்டு பாலிஸியை செலுத்தியிருந்தார், அல்லது அவர்கள் தங்கள் ட்ரெயிலர் வண்டிக்கான தங்கள் காப்பீட்டை திரும்பவும் பெற்றுக் கொண்டனர், அநேகமாக அந்த ட்ரெயிலர் வண்டிக்குப் பதிலாக மீண்டும் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் திங்கள் கிழமை அல்லது செவ்வாய் கிழமை அல்லது அதைப் போன்று ஏதோவொரு நாளில் அதை அறிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன், அல்லது. அது செவ்வாய் கிழமை என்று நம்புகிறேன். எனவே நம்மால் அவர்களுக்கு உதவி செய்யக் கூடுமான யாவற்றையும் செய்யும்படிக்கும், நாம்-நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சகோதர சகோதரிகளாய் இருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்வதற்கும், ஒருவருக்கொருவர் அனுதாப உணர்வு கொள்ளவும், அவர்களுடைய துக்கத்தில் நாமும் பங்கு கொள்ள விரும்புகிறோம். இச்சமயத்தில் அவர்களுக்கு சிறிது உதவி செய்யும்படி, ஒவ்வொருவரும் அவ்விதமான உணர்வைக் கொண்டிருக்கவே விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இது வழக்கத்தை விட சிறிது (மாறானதாக) இருக்கும் என்று நினைக்கிறேன்; நான் ஒருபோதும் என்னுடைய ஜீவியத்தில் காணிக்கை எடுத்ததே கிடையாது, சகோதரன் நெவில் அவர்கள் அதைச் செய்யும்படியாக நான்-நான் அனுமதிக்கப் போகிறேன். எனவே... அது-அது கொன்று போடுகிறது, இல்லையா? அதெல்லாம் சரி தான். சகோதரன் பென், உங்களுக்கு நன்றி. அப்படியே யாரோ ஒருவர், என்ன, அவர்களுக்கு உங்களால் கொடுக்கக்கூடிய உங்களிடமுள்ள கொஞ்சமான ஏதோவொன்று, அது பாராட்டுதலுக்குரியதாக இருக்கும் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். சகோதரன் நெவில் அவர்களே, இங்கு வாருங்கள். எப்படியென்று எனக்குத் தெரியாது. நீர் என்ன நினைத்தாலும் அப்படியே அதைச் செய்யும். ளசகோதரன் நெவில் ஜெபித்து காணிக்கை எடுக்கிறார் - ஆசிரியர்.ன ஆமென். 33.ஒருக்கால் அவர்கள் அதைச் செய்து கொண்டிருந்த நேரத்தில், ஏறக்குறைய இந்தக் காலையில் பேசும்படிக்கு, நான் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்திருந்த சில பழைய மூல வேத வசன உரைகளிலிருந்து (texts) ஏதோவொன்றை தேர்ந்தெடுக்கும்படியான ஒரு சிறு தருணத்தை அது எனக்குக் கொடுக்கும் என்று நினைத்தேன். எல்லா பிரசங்கிமாரும் அதைச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவர்கள் அழைக்கிற இந்த ஜனங்களுடைய பெயரென்ன? எலியட். சகோதரன் மற்றும் சகோதரி எலியட்டும் அவர்களுடைய மகனும் இக்காலையில் இக்கட்டிடத்தில் இருக்கிறார்களா? அவர்கள் (இங்கு) இருப்பார்களானால், நீங்கள் அப்படியே எழுந்து நின்று, அதிகமாக, 'நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்...' என்று ஜனங்களிடம் கூற, கூற விரும்புவீர்களா, ஏன், சரி. சகோதரன் எலியட் அல்லது சகோதரி எலியட், ஜனங்களிடம் கூறும்படி நீங்கள் விரும்புகிற ஒரு வார்த்தை உங்களிடம் இருக்கிறதா? ளசகோதரன் எலியட் தம்முடைய நன்றியைத் தெரிவிக்கிறார் - ஆசிரியர்.ன சகோதரன் எலியட் அவர்களே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையானது. உமக்கு நன்றி. தேவன் உம்மோடும், உம்மோடும் சகோதரி எலியட் அவர்களோடும், உம்முடைய மகனோடும் இருப்பாராக. 4இந்த ஜனங்கள் நியூயார்க்கிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் (இதற்கு முன்பு) இங்கு இருந்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவர்களோடு ஒரு பேட்டியைக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள், அல்லது நான் அவர்களோடு ஜெபித்தேன் என்றோ அல்லது ஏதோவொரு காரியத்தை ஏதோவொரு சமயத்தில் செய்தேன் என்றோ கூறினார்கள். நான் அவர்களை நேற்று சந்திக்கும் வரை அவர்களை எனக்குத் தெரியாது, அவர்கள் இனிமையான கிறிஸ்தவர்களாகவும், மிகவும் அருமையான ஜனங்களாகவும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அவர்கள் மேலே நியூயார்க்கில், ஹட்சன் ரிவர் பள்ளத்தாக்கில் (Hudson River Valley) ஏதோவொரு இடத்தில் வசித்து வந்தார்கள், அவர்கள் ஒருக்கால் ஒரு ஒலிநாடா அல்லது ஏதோவொன்றின் வழியாக செய்தியை விசுவாசித்திருக்கலாம். அவர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, இடம்பெயர்ந்து வந்து, அவர்கள் தங்கள் ஜீவியங்களையும் தங்களுடைய நேரத்தையும் கிறிஸ்துவுக்குக் கொடுத்து வருகிறார்கள். சகோதரன் மற்றும் சகோதரி எலியட் அவர்களே, இது எங்களுடைய சிறு உணர்ச்சி வெளிப்பாடு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படி நாங்கள் விரும்பு கிறோம், நாங்களும் கூட பரதேசிகளாய் இருக்கிறோம். நாம் இந்த உலகத்தில் பரதேசிகளும் அந்நியருமாய் இருக்கிறோம். தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்தக் காரியங்களின் மீதான துரதிஷ்டம் உங்களிடம் வந்து, பிசாசு உங்களைச் சோர்வடையச் செய்ய முயற்சித்து, உங்களை பயமுறுத்தும் போது, நீங்கள் மீண்டும் உங்கள் கால்களைத் திரும்பவும் ஊன்ற உங்களுக்கு ஒத்தாசை செய்வதற்கு எங்களால் கூடுமான யாவற்றிலும் உங்களுக்கு பின்னால் நிற்கும்படி, நாங்கள் 100 சதவீதம் உங்களோடு இருக்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து தொடர்ந்து அணிவகுத்து செல்லுங்கள். தோல்வியடைய வேண்டாம், வேண்டாம், இல்லை. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், ஆனாலும் தேவன் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவர்களை விடுவிப்பார். எனவே இக்காரியங்கள் சம்பவிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பது நமக்கு- நமக்குத் தெரியும், ஆனால் ஒரு ஜெயவீரனைக் காட்டிலும் பெரியவராகிய நம்முடைய இரட்சகரையும் கூட நாம் எதிர்பார்க்கிறோம் என்பதும் நமக்குத் தெரியும், நம்மை மீட்டெடுத்திருக்கிற அவருக்குள் நாமிருக்கிறோம். 55.இப்பொழுது, இன்று ஒருவிதமாக நாள் முழுவதும் இருக்கிறது, மேலும் இன்று காலையில் நான் அங்கே சிந்தித்துக் கொண்டிருந்தேன், ஞாயிறு பள்ளி வகுப்பில் நான் சிறிது நேரம் போதிக்கலாம் என்று நான் சற்று சிந்தித்தேன். இந்தக் காலையில், அதிலிருந்து அதை ஞாயிறு பள்ளி வகுப்பாக நடத்தலாம் என்பது போல நினைத்தேன். கடந்த ஞாயிற்றுக் கிழமை அல்லது கடந்த ஞாயிறு இரவில் நான் என்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியைப் பிரசங்கம் பண்ணினது போல, இன்றிரவு 7:30 மணிக்கு, தேவனுக்குச் சித்தமானால், என்னுடைய-என்னுடையபுது வருட செய்தியைக் கொடுக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு 7:30 மணிக்கு என்னுடைய புது வருட செய்தியை அளிப்பேன். சகோதரன் நெவில் அவர்களும் தமது புது வருட செய்தியைக் கொண்டிருப்பார், நான் இங்கே சகோதரன் ஸ்ட்ரிக்கரையும், சகோதரன் காலின்சையும் காண்கிறேன், ஓ, மற்ற ஊழியக்காரர்களும் சுற்றிலும் இருக்கிறார்கள், ஜார்ஜியா விலிருந்து வந்துள்ள சகோதரன் பாமர் இங்கே மேலே எங்களோடு இருக்கிறார், மேலும்-மேலும் வெவ்வேறான வர்களும் சுற்றிலும் இருக்கிறார்கள். இவர்கள் ஊழியக் காரர்கள், நீங்கள் இன்றிரவு இவர்கள் பேசுவதைக் கேட்பீர்கள். 66.அதன்பிறகு நான் என்னுடைய இருதயத்தில் தென்பட்ட ஏதோவொன்றைக் குறித்து நேற்று சகோதரன் நெவிலை அழைத்தேன். இது புது வருடமாய் இருக்கிறதே என்றும், மேலும் இது முதலாவது, முதலாவது ஞாயிற்றுக் கிழமை போன்று இருப்பதையும் கண்டேன், மற்ற உலகத்தார் செய்வதைப் போன்று பெரும் அளவில் ஒன்றாகக் திரண்டு, உரத்தக் கூவி சத்தமிட்டுக் கொண்டும், அவ்விதம் தொடர்ந்து செய்து கொண்டும் இருப்பதற்குப் பதிலாக, ஏன் இன்றிரவு இராப்போஜனம் எடுக்கக்கூடாது, நாம் நடுஇரவில் இராப்போஜனம் எடுப்போம். பாருங்கள்? பாருங்கள். கர்த்தரை சேவிப்போம். அது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் எண்ணினதாக சகோதரன் நெவில் ஆமோதித்தார். இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால், இரவு 12 மணிக்கு இராப்போஜனம் பரிமாறுவேன். நாம் புது வருடத்தைத் துவங்குவோம், உரக்கக் கத்துவதன் மூலமாகவோ மற்றும் அதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாகவோ அல்ல - அவர்கள் அதைச் செய்ய விரும்பினால் அதெல்லாம் சரிதான் -ஆனால் நாமோ அதை இன்னும் அதிகமாக பயபக்தியோடும் உத்தமத்தோடும் செய்வோம். நமக்கிருக்கிற எல்லாவற்றையும், நம்முடைய வாக்குறுதியையும் (அவருக்குக்) கொடுத்து, கிறிஸ்துவுக்கு உத்தமமான விதத்தில் நாம் இந்த வருடத்தை அணுகுவோம். ஒரு புதிய பக்கத்தை திருப்பி, அல்லது அவ்விதமாக ஏதோவொன்றைத் திருப்பி, ஒரு புது வருடத்தை துவங்குவதல்ல. அந்த காரியத்தை நாம் நம்புவதில்லை. நீங்கள் அடுத்த நாளுக்கு மீண்டும் கடந்து போவதற்கு மாத்திரமே ஒரு புதிய பக்கத்தைத் திருப்புங்கள், ஆகையால் நாம் அப்படியே நம்முடைய ஜீவியங்களை அவரிடம் திருப்பி, இன்று நடுஇரவில் இராப்போஜனம் எடுப்போமாக. எனக்கு நினைவுள்ளபடி, நான் ஒரு ஊழியக்காரனாய் இருந்தது முதற்கொண்டு, இதை செய்வது இதுவே முதல்தடவை என்று நம்புகிறேன். சகோதரன் நெவில் அவர்களே, உமக்கு ஞாபகம் உள்ளதா? ஆனால் இப்பொழுது எங்களுக்காக புதிதான ஏதோவொன்றுள்ளது, இவ்விதமாக வழக்கமாக வருகிற புது வருடத்தில், இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே அதுஅப்படியே-அப்படியே என் மனதில் பட்டது, அது கவனத்தை கவர்ந்திழுக்கும் என்று நினைத்தேன். 77.அதன்பிறகு, இப்பொழுது கொஞ்ச காலத்திற்கு உங்கள் எல்லாரோடும் பேசக் கூடுமானதாயிருக்கிற ஏறக்குறைய கடைசி தடவையாக இது இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் கர்த்தருடைய சேவைக்காக புது வருடத்தில் ஊழியக்களத்திற்குள் பிரவேசிக்கிறேன். நான் ஏறக்குறைய அடுத்த வாரம் புறப்பட்டு செல்வேன், அல்லது வருகின்ற முதல் வாரத்தில் போனிக்ஸிற்குப் புறப்பட்டுப் போகிறேன், தொடர்ந்து ஏறக்குறைய பதினைந்து பதினாறு கூட்டங்கள் அந்தப் பள்ளத்தாக்குகள் முழுவதும் நடத்துவதற்காகப் போகிறேன், பிறகு நேராக மேலே சன்னிசிலோப்பிற்கும், ஸ்காட்ஸ்டேலுக்கும், பிறகு வெளியே அங்குள்ள பள்ளத்தாக்குகளினூடாக சுற்றி எல்லாவிடங் களுக்கும் போகப் போகிறேன். அதன்பிறகு அங்கே நடக்கப் போகிற கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் கன்வென்சன் கூட்டங்கள் எங்களுக்குண்டு, அது ஐந்து நாட்கள் நடக்கும் கன்வென்சன் கூட்டங்களாகும், அவை இந்த கூட்டங்கள் எல்லாவற்றின் முடிவில் நடக்கும். அவர்கள் ஆயத்தம் பண்ணியிருக்கிறார்கள், எனவே என்னால் எல்லா ஸ்தாபனங்களிலும் பேச முடியும், போனிக்ஸிலுள்ள அந்த மரிகோபா பள்ளத்தாக்கின் (Maricopa Valley) பெருநகரப்பகுதி முழுவதிலுமுள்ள அவர்களுடைய ஒவ்வொரு சபைகளிடமும் என்னால் பேச முடியும். அவர்கள் 15ம் தேதி துவங்குகிறார்கள். எனவே நான் இங்கிருந்து ஏறக்குறைய 10 நாட்கள் முன்பே புறப்பட்டு விடுவேன், அது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது... நான் அநேகமாக என்னுடைய நல்நண்பரான சகோதரன் மூர் அவர்களையும், போய்க் கொண்டிருக்கும் அவர்களில் அநேகரையும் காணும்படியாக நிறுத்துவேன். அதன்பிறகு பனியினூடாகவும், மற்றவைகளி னூடாகவும் கடந்து சென்று, குறித்த நேரத்தில் சென்று விடுவேன். அதன்பிறகு நான்... ஜனங்களாகிய உங்களில் அநேகர் ஊழியக்காரர்களாய் இருக்கிறீர்கள். 88.சகோதரன் ராய் பார்டர்ஸ் அவர்கள், அவர் இந்தக் காலையில் இங்கே இருப்பாரானால், அவர் வழக்கமாக அவர்கள் கூட்டங்களுக்காக அழைக்கையில், கூட்டங்களை (சரியான) ஒழுங்கில் வைத்துக் கொள்கிறார். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைகளின் போது, நல்லது, நான் வழக்கமாக வருகிற அடுத்த வருடத்திற்கான பிரயாண திட்டம், அது எங்கிருக்கும் என்பதை தயார் செய்கிறேன், ஆனால் எப்படியோ இந்த வருடத்தில் அதைச் செய்ய வேண்டும் என்று நான் உணரவில்லை. நான் சென்று ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உணருகிறேன்; அதன்பிறகு அங்கிருந்து அடுத்தகூட்டத்திற்கு அவர் என்னை எங்கே வழிநடத்துகிறாரோ, அங்கு போவேன். பிறகு அடுத்த கூட்டத்திலிருந்து, அது எங்கிருந்தாலும், அப்படியே அவர் என்னை வழிநடத்துகிறபடி போவேன். 99.இப்பொழுது இவ்வருடத்தில் ஏதோவொன்று சம்பவிப்பதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அநேக தரிசனங்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அன்றொரு காலையில் மறுபடியுமாக ஒரு மகத்தான தரிசனம் வந்தது. ஏதோவொரு மகத்தான ஒன்று சம்பவிக்கப் போவது போன்று காணப்படுகிறது, எல்லாமே அது தொடர்பான தரிசனங்கள் தான். எனவே நான் அப்படியே தொடர்ந்து அவரை நம்பிக் கொண்டிருக்கிறேன். அவைகளில் சில தரிசனங்களை நான் புரிந்து கொள்ளவும் கூட இல்லை. நாம் தரிசனங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவைகள் அதிகமாக அடையாளப்பூர்வமானவைகளைப் (symbolically) போன்று இருக்கின்றன. நாம் சிலசமயங்களில் அவைகளை அப்படியே சரியாகப் புரிந்து கொள்வதில்லை, ஆனால் எப்படியும் அவைகள் சத்தியமானவை என்பதை நாம் அறிவோம். எனவே, அவைகள் சம்பவிக்கும். நான் அவைகளை எழுதி வைக்கிறேன். 1010.எனவே, நாளை இரவு 7 மணிக்கு தர்மகர்த்தா வாரியத்தினரும், டீக்கன் வாரியத்தினரும் இங்கே கூடாரத்தில் ஒன்றாக சந்தித்து, அவர்கள் இருவரும் இணைந்து ஒரு கூட்டம் நடத்துகிறார்கள் என்று கூட அறிவிக்கப்பட்டது அல்லது அறிவிக்கப் பட வேண்டும் என்று நம்புகிறேன். இப்பொழுது, டீக்கன்மார்கள், அவர்கள் எங்கிருந்தாலும், நான் மறுபடியும் அதை அறிவிப்பு செய்யட்டும். அவர்கள் மற்ற அறைக்குள் இருப்பார்களானால், நாளை இரவு 7 மணிக்கு மேய்ப்பருக்கும்-மேய்ப்பருக்கும், டீக்கன் வாரியத்தினருக்கும், தர்மகர்த்தாக்களுக்கும் இருவருக்குமே ஒரு கூட்டம் இருக்கப் போகிறது என்பதை அவர்கள் இந்த சிறு மைக்கில் நிச்சயமாக கேட்க வேண்டும். அவர்கள் நாளை இரவில் கூட வேண்டும் என்று சற்று முன்பு தான் என்னிடம் கூறப்பட்டது. சகோதரன் நெவில் அவர்கள் தமது டீக்கன் வாரியத்தினரைச் சந்தித்து அவர்களிடம் பேச விரும்புகிறார், மேலும் தர்மகர்த்தாக் களுக்கும் தங்களுடைய வழக்கமான கூடுகிற நேரம் இருக்கிறது, எனவே அவர்கள் நாளை இரவில் ஒன்றாகக் கூடுவார்கள். 1111.இப்பொழுது, இக்காலையில், நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு, இப்பொழுது, ஓ, நாம் எதைக் குறித்தும் துரிதப்பட வேண்டாம். உங்களுக்கு இன்று முழுவதும், இன்றிரவும், நாளைய தினமும் இருக்கிறது. நாம் அப்படியே நம்முடைய நேரத்தை எடுத்துக் கொள்வோம், இந்தக் காரியங்களினூடாக வேகமாக போக வேண்டாம். நிச்சயமாகவே, ஜனங்கள் களைப்படைந்து விடுகிறார்கள் அல்லது முற்றிலுமாக சோர்வடைந்து விடுகிறார்கள் அல்லது வீட்டிற்குப் போக விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன், நீங்களும் அறிவீர்கள், தங்களுடைய... துரிதமாகச் சென்று, தங்கள் உணவை ஆயத்தம் செய்ய வேண்டும், அவர்கள் கணவன் அதற்காக காத்துக் கொண்டிருப்பார். ஏன், அப்படியானால்,அது-அது சரிதான், அப்படியே அமைதியாக நழுவி வெளியே போய் விடுங்கள். தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிற உங்களில் மற்றவர்கள், சரி. நாம்... நீங்கள் நாளைக்கு வேலை செய்ய வேண்டியதில்லை, எனவே இப்பொழுது நாம் அப்படியே நம்முடைய நேரத்தை எடுத்துக்கொள்வோம். அதன் காரணமாகத்தான் நான் அப்படியே ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பிரசங்கம் பண்ணுவதற்குப் பதிலாக ஒரு பாடத்தின் பேரில் எட்டு அல்லது பத்து மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். 1212.அன்றொரு இரவில், ஜார்ஜியாவிலிருந்தும் அலபாமா விலிருந்தும் வந்திருந்த அந்த ஜனங்கள் எல்லாரும் என்னை மிகச் சிறந்த முறையில் உணரும்படி செய்தனர். நான் அலுவலின் காரணமாக வெளியில் இருந்தேன் என்று நம்புகிறேன், பில்லியைத் தவிர எல்லாருமே போய் விட்டிருந்தனர், மேலும் அவன் சொன்னான்... மிக இனிமையான விசுவாசமுள்ள நண்பர்களாகிய சகோதரன் வெஸ்ட்டும் அவர்களும் (நான் அவர்களை இங்கே காணவில்லை, ஆனால் அவர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்), அழைத்து, 'நல்லது, சகோதரன் பிரன்ஹாம் ஞாயிறு காலையில், ஞாயிறு பள்ளியை நடத்தப்போகிறாரா?' என்று கேட்டார். லூயிவில்லில் உறைந்து போகுமளவிற்கு கடுங்குளிர் இருக்கிறது, அவர்கள் உள்ளேயும் வெளியேயும் நெடுங்சாலைகளை மூடி விட்டார்கள் என்றும், சாலைகள் சறுக்கலாய் இருந்தன என்றும் செய்திகள் கூறின. 13.பில்லி, 'நல்லது, அது (ஞாயிறு பள்ளி நடப்பது) சாத்தியமான ஒன்று தான். அவர் அங்கே போகிறார். ஒருக்கால் சகோதரன் நெவில் அவர்களோ அல்லது அவரோ, அவர்களில் ஒருவரோ போகிறார்கள்' என்றான். 14.'நல்லது, அது போதுமான அளவுக்கு நடக்க சாத்தியமானது தான். இதோ நாங்கள் வருகிறோம்!' என்றான். கீழே அலபாமாவிலிருந்து வரும் பாதை முழுவதும் வழுக்கும் சாலைகள் தான் இருந்தன. அவ்விதமான நண்பர்களை கொண்டிருக்க நான்-நான் தகுதியற்றவன். இப்பொழுது அது உண்மை. அவ்விதமான நண்பர்களைக் கொண்டிருக்க எனக்கு-எனக்குத் தகுதியில்லை. அங்கே அதைக் குறித்து ஏதோவொன்றுள்ளது, நான் கூட்டத்தைக் குறித்து அறிவிப்பு செய்வதை அப்படியே வெறுக்கிறேன், இந்தச் செய்தியை விசுவாசித்து வருகிற ஜனங்களை நான் பெற்றிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். 1315.நான்-நான் எப்போதுமே அன்புகூரப்படுவதை வாஞ்சித்திருக்கிறேன். நான் சிறு பையனாய் இருந்தபோது, என்னை யாருமே நேசிக்க மாட்டார்கள். யாருமே என்னோடு பழக மாட்டார்கள். நான் கென்டக்கியில் பிறந்து, இங்கே இந்தியானாவில் இருந்தேன், எனவே நான் இங்கிருந்த இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு ஏழை கென்டக்கியானாயிருந்தேன் (corncracker). என்னைத் தவிர ஏறக்குறைய குடும்பத்தின் எல்லா பையன்களுமே புகைபிடித்தார்கள், குடித்தார்கள் மற்றும் எல்லா காரியங்களையும் செய்தார்கள். நான் ஒரு - நான் குடும்பத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்டவனாயிருந்தேன், பள்ளியிலும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவனாயிருந்தேன், வேலையிலும் நான் புறக்கணிக்கப்பட்ட ஒருவனாயிருந்தேன், நான் போன எல்லாவிடங்களிலுமே நான் புறக்கணிக்கப்பட்ட ஒருவனாயிருந்தேன். அதன்பிறகு, கடைசியாக உண்மை யாகவே என்னை நேசித்த யாரோ ஒருவரை நான் கண்டுபிடித்த போது, அவர் தான் இயேசு, அவர், 'நான் உனக்கு தகப்பன்மார்களையும் தாய்மார்களையும், சகோதரர் களையும், சகோதரிகளையும், நண்பர்களையும் தருவேன்' என்றார். 1416.அதன்பிறகு வினோதமான காரியம் என்னவென்றால், அவருடைய மகத்தான ஞானமுள்ள முன்னறிவு எத்தகையது என்பதும், அவர் வெளியே எவ்விதம் தம்முடையவர் களிடத்தில் காரியங்களைச் செய்கிறார் என்பதும் தான். அந்த அன்பானது அதைக் குறித்த ஒரு வேடிக்கையான ஒரு உணர்வைக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு உணர்வல்ல, ஆனால் ஒரு-ஒரு எதிர்விளைவைக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. அதன்பிறகு நான் ஜனங்கள் மத்தியிலுள்ள (காரியங்களைக்) கவனிக்கிறேன், அவர் தம்முடைய ஊழியக்காரனாய் இருக்கும்படி என்னை அழைத்திருக்கையில், நான் ஜனங்கள் மத்தியிலுள்ள (காரியங்களைக்) கவனித்து, பாவம் மெதுவாக உள்ளே நுழைவதைப் பார்த்து, நான் அப்படியே என்னிடத்திலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் அங்கே அதைச் சுக்குநூறாக கிழித்துப் போட வேண்டியதாயிருக்கிறது, நீங்கள் பாருங்கள், அதை சுக்குநூறாக கிழித்துப் போட வேண்டியதாயிருக்கிறது. அதைச் செய்வது கடினமாகத் தோன்றுகிறது, அதை என்னுடைய வழியில் பார்த்து, ஏன், அக்காரியங்களைக் கூறுவதென்பது கடினமாக தோன்றுகிறது. இருப்பினும், அடிப்படையில், உண்மையான அன்பு தான் அவ்விதமாக நடத்துகிறது. பாருங்கள், உண்மையான அன்பு. 1517.இப்பொழுது, உங்கள் குட்டிப் பையனோ அல்லது சிறு மகளோ கார்கள் ஓடிக் கொண்டிருக்கும் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் சீக்கிரமாகவோ அல்லது பிறகோ காயப்படப் போகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்... இப்பொழுது, அவன், 'ஏன், அப்பா, நான் இங்கே வெளியில் இருக்க விரும்புகிறேன்' என்று சொன்னால், நீங்களோ, 'ஜøனியர், உன்னுடைய குட்டி இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ அப்படியே முன்னால் சென்று, தெருவில் விளையாடு' என்றா கூறுவீர்கள்? அது ஒரு உண்மையான தகப்பனல்ல. நீங்கள் அந்தச் சிறு பையனை சட்டென இழுத்து, அவனுக்கு ஒரு அடி கொடுத்து, அவனை வேகமாக ஓடும்படி செய்து, அவனைக் கடிந்து கொண்டு, வேறு எதையாவது செய்து, அவனைத் தடுத்து நிறுத்தி, அந்தத் தெருவை விட்டு அவனை விலக்கி விடுவீர்கள் - (இல்லாவிட்டால்) அவன் கொல்லப்படுவான். அது சரியா? நல்லது, நீங்கள் சுவிசேஷத் தோடும் அவ்விதம் தான் செய்ய வேண்டும். நீங்கள் ஜனங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, அவர்களைத் தள்ளி, வரிசையில் கொண்டு வர உங்களால் இயன்ற யாவற்றையும் செய்ய முயற்சிக்க வேண்டியுள்ளது. இப்பொழுது, யாவரும் அதை அவ்விதமே புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஏதோவொரு நாளில், இவை எல்லாம் முடிந்த பிறகு, நம்முடைய முகத்திற்கு முன்பாக இருக்கும் திரைகள் அகற்றப்படும் போது, நாம் புரிந்து கொள்வோம் என்று நம்புகிறேன். 16சகோதரன் வே (Brother Way) அவர்களும் கிறிஸ்துமஸ் வெகுமதியாக எனக்குக் கொடுத்த அந்த அருமையான வேதாகமம், இவ்விதமான ஒரு புத்தகத்திற்குப் பதிலாக என்னுடைய குறிப்புகளை தட்டச்சு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வைப்பதற்கு அப்படியே ஒரு நல்ல காரியமாக இருக்கப் போகிறது. எனக்கு எழுத விருப்பமில்லை, ஏனென்றால் நானே சொந்தமாக எழுத முடியவில்லை, அப்படியானால் வேறு யாராகிலும் எப்படி அதைச் செய்யப் போகிறார்கள்? எனக்கு சொந்தமாக ஒரு சுருக்கெழுத்தை (shorthand) வைத்திருந்தேன் என்று நான் அவர்களிடம் கூறினேன், நான் கூறியிருப்பவைகளைப் புரிந்து கொள்ளும்படி, நானே அவைகளை ஆய்ந்து படிக்க வேண்டியுள்ளது. நான்-நான் ஏதோவொரு நாளில் அதை தட்டச்சு செய்து விடுகிறேன். அது பக்கங்களை எளிதாக சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யக் கூடிய வகையில் உள்ள ஒரு வேதாகமம் (loose-leaf Bible), அங்கே உங்களால் அப்படியே இங்கேயிருப்பதைப் போன்று எடுக்க முடியும். இந்தக் காலையில் இங்கே என்னிடம் இரண்டு வேதபாகங்கள் உள்ளன, இரண்டு இடங்களிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அவர் எனக்குக் கொடுத்த இந்த வேதாகமத்தில், நீங்கள் இந்தவிதமாக இதைப் வெளியே இழுத்து, ஆதியாகமத்தி லிருந்தோ, வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திலிருந்தோ, எங்கிருந்தாவது ஒரு தாளை எடுத்து, அவைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்து, அவைகளை அவ்விதமாக அங்கிருந்து வாசிக்க முடியும், பாருங்கள். அதன்பிறகு இங்கே பின்னால் ஒரு சிறு இடம் உள்ளது, பின்னால் அச்சிடாமல் இருக்கிற ஒரு வெறும் தாள் (flyleaf) உள்ளது, அந்தச் செய்தி மற்றும் காரியங்களின் பேரில் எழுதி வைத்திருக்கிற வேதவாக்கியங்கள் எல்லாம் இருக்கும் (இடமாகிய) அந்த பின்பகுதிக்கு அப்படியே உங்களால் போக முடியும். அது அற்புதமாய் இருக்கிறது. எனவே நான் அதைக் கொண்டு அநேக ஆத்துமாக்களைக் கிறிஸ்துவுக்காக ஆதாயம் பண்ண உதவியாயிருப்பேன் என்று நம்புகிறேன். 1719.உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப் பாராக. ஒவ்வொருவரும் எனக்குக் கொடுத்த அருமையான கிறிஸ்துமஸ் வெகுமதிகளுக்காக, நான் மீண்டும் அதைக் கூற விரும்புகிறேன். சபை எனக்கு ஒரு புதிய சூட்டை கொடுத்துள்ளது, ஓ, நான் எவ்வளவாக அதைப் பாராட்டுகிறேன்! கிறிஸ்துமஸிற்காக இரண்டு புதிய சூட்டுகள் எனக்குக் கிடைத்தது. என் சகோதரனே, அங்கே ஜார்ஜி யாவில், மேகன் என்ற இடத்தில் இருக்கும் சிறு சபை - சகோதரன் பால்மர் எனக்கு ஒரு புதிய சூட்டை அனுப்பினார். கூடாரம் எனக்கு ஒரு புதிய சூட்டைக் கொடுத்துள்ளது. அநேக அருமையான காரியங்களை கொடுத்துள்ளனர், கிறிஸ்துமஸ் வெகுமதிகளாக பணத்தையும் கொடுத்துள்ளனர். அது ஒரு கிறிஸ்துமஸ் அன்பளிப்பாயிருந்து, அதில் 'கிறிஸ்துமஸ் அன்பளிப்பு' என்றோ அல்லது ஒரு 'பிறந்த நாள் அன்பளிப்பு' என்றோ ஏதாவது எழுதப்பட்டு இருக்குமானால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வருமான வரியின் பிரிவு எனக்குக் கூறுகிறது; இல்லையென்றால், நான்... செய்ய வேண்டியவனாயிருக்கி றேன், அது-அது கடமையைச் செய்யும்படியாகவே போகிறது, இது சரியாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். மனைவியும் நானும், பிள்ளைகளும் நாங்கள் எல்லாரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் அருமை. நாங்கள் உங்கள் ஒவ்வொருவரிடமும் திரும்பி வந்து ஒரு அன்பளிப்பை உங்களுக்கு திரும்பக் கொடுக்கக் கூடுமா என்று வாஞ்சிக்கிறோம், ஆனால் உங்களால் அதைச் செய்ய முடியாது என்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் அப்படியே... என்னே, என்னால்-என்னால் அதைச் செய்ய முடியவில்லை. என்னால் கூடுமா என்று வாஞ்சிக்கிறேன், ஆனால் என்னால்- என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரனுக்கும் கூட அந்த உணர்வு இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஜனங்கள் அவ்விதமாக எங்களை நேசிப்பதை நாங்கள் உணருகிறோம், நாங்கள் அவர்களைப் பாராட்டுகிறோம். 1820.இப்பொழுது, ஜெபத்திற்காக நம்முடைய தலை களைத் தாழ்த்தி, இன்று காலையில் செய்தியைத் துவங்குதற்காக ஆயத்தமாவோம். ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்திற்குள், நாம் இப்பொழுது, மிகுந்த அக்கறையோடும், அவரைக் குறித்த பயத்தோடும் வருகிறோம், நாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம், 'இப்பொழுது, பிதாவே, இதோ வில்லியம் பிரன்ஹாம் இருக்கிறார், அல்லது ஆர்மன் நெவில் இருக்கிறார்' என்றோ அல்லது நாம் யாராக இருந்தாலும் அதைக் கூறிக் கொண்டு நம்மால் வர முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (அப்படியானால்) நாம் விரைவாக புறக்கணிக்கப்பட்டு விடுவோம். ஆனால் அவர், 'நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அது கொடுக்கப்படும்' என்று கூறின நம்பிக்கை நமக்குண்டு. எனவே என் நாமத்தை பயன்படுத்தி, அவரிடமிருந்து என்னால் எதையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் அவருடைய குமாரனுடைய நாமத்தை பயன்படுத்தும் போது, நான் என்னுடைய விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்பதை நான் அறிவேன், நான் நம்புவது அவரிடத்தில் தான் இருக்கிறது. அவருக்குள் தான் நாம் ஜீவிக்கிறோம், அவருக்குள் தான் நம்முடைய ஜீவன் உள்ளது. தேவனே, அவர் எங்களுக்கு மையமாய் இருக்கிறார் என்ற எல்லா வற்றிற்காகவும், அதுவே எங்களுடைய முழுமையான ஜீவனாகவும், முக்கியமான இயல்பாகவும் இருக்கும் அந்த, எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இந்தக் காலையில் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 1921.இந்தச் சிறு சபைக்காகவும், இதன் மேய்ப்பருக்காவும், தர்மகர்த்தாக்களுக்காகவும், டீக்கன்மார்களுக்காகவும், எல்லா அங்கத்தினர்களுக்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகி றேன். அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவருக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்கள் போக வேண்டுமென்று அவர் வைத்திருக்கிற பாதைகளில், அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவாராக. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், மேலும் நிசாயா காலத்திலும், வியாதியானது பரிசுத்த வான்களைத் தாக்கின நேரத்தில், எப்படியாக முழு சபையும் ஒன்று சேர்ந்து இருந்தனர் என்பதை வாசிக்கிறோம். அவர்கள் ஒரே இருதயத்தோடு தேவனைக் கூப்பிட்டனர், அவர்க ளுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் உபவாசித்து, ஜெபித்தனர், தேவன் அதைக் கேட்டு, ஜெபத்திற்குப் பதிலளித்தார். பிதாவே, இந்தச் சிறிய சபை தாமே ஒருவர் மற்றவரோடும், பரிசுத்த ஆவியோடும், அது அவர்களில் ஒருவரைப் போன்று ஆகும் அளவுக்கு அன்பின் பிணைப்புகளால் அதிகமாக-அதிகமாககட்டப் படுவார்களாக, வருகின்ற இவ்வருடத்தில் எங்கள் மத்தியில் எந்த சச்சரவும் இருக்க வேண்டாம். அங்கே அப்படிப்பட்ட தெய்வீக அன்பு இருப்பதாக, சோர்வுற்ற அநேக யாத்ரீகர்கள் பாதை நெடுகிலும் வந்து இரட்சிக்கப்படும் அளவுக்கு யாவரும் கிறிஸ்துவின் வழியில் நடப்பார்களாக. நீங்கள் இந்தச் சிறு கட்டிடத்தின் வாசல்களுக்குள் நுழையும் போது, தேவனுடைய பிரசன்னம் ஒரு இனிமையான வரவேற்போடு உங்களை சந்திக்கும் என்று அது கூறுவதாக. கர்த்தாவே, எங்கள் மத்தியிலிருந்து வியாதியை எடுத்துப் போடுவீராக. 2022.உம்முடைய வார்த்தையைக் கேட்பதற்கு நாங்கள் பசியுள்ள இருதயங்களைக் கொண்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் இருதயங்கள் உமக்காகத் தொடர்ந்து பசியாயிருப்பதாக. பழங்கால தாவீது, 'மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, என் ஆத்துமா உமக்காக தாகமாயிருக்கிறது' என்று சொன்னது போல. சிறு ஆண்மானைக் (hart) குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது நாம் இன்று அதை அழைக்கிறபடி, மான் (deer), அது காட்டு நாய்களால் கடித்துக் குதறப்பட்டிருக்கும் நேரத்தில், அதன் (சரீரத்தில்) இரத்தம் வழிந்து கொண்டு, அது தன்னுடைய ஜீவனை விட்டுக் கொண்டிருக்கும், அப்போது அது உயிர் வாழ எதிர்பார்க்குமானால், அது தண்ணீரைக் கண்டு பிடித்தாக வேண்டும். அது ஒருவிசை தண்ணீரைக் கண்டுபிடிக்கு மானால், அதன் ஜீவன் திரும்ப வரும். கர்த்தாவே, நாங்களும் அப்படிப்பட்ட தாகமாயிருக்கட்டும், நாங்கள் உயிர்வாழ வேண்டுமானால், நாங்கள் கிறிஸ்துவைக் கொண்டிருந்தாக வேண்டும். எங்களிடம் எதிர்பார்க்கப்படும் சபையாக நாங்கள் ஆக வேண்டுமானால், நாங்கள் கிறிஸ்துவைக் கொண்டிருக்கத்தான் வேண்டும். நாங்கள் ஜீவிக்க அவசிய மான ஜீவியம் செய்ய (வேண்டுமானால்), நாங்கள் கட்டாயம் கிறிஸ்துவைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது நாங்கள் மரித்து விடுவோம். 23.இப்பொழுது, பிதாவே, எங்களை அவரோடு நெருக்கமாகக் கொண்டுவரும்படியான ஆறுதலையும், தொடர்ந்து அடி எடுத்து வைப்பதற்கான படிக்கற்களையும் (stepping - stones ) கண்டடையும்படியாக, நாங்கள் இக்காலையில் உம்முடைய வார்த்தையைத் திறக்கையில், பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை எங்களுக்கு திறந்தருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், உம்முடைய ஊழியக் காரர்களாக நாங்கள் இந்தப் புது வருடத்தை எதிர் கொள்ளும்படி மேலான ஆயத்தத்தோடு இருப்போமாக, நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2124.இப்பொழுது, புது வருடமாய் இருப்பதின் நிமித்தமாக இக்காலையில் நான் இதை சிந்தித்துக் கொண்டிருந்தேன், என்னுடைய புது வருட செய்தியை இன்று இரவு வரைக்கும் நான் ஒதுக்கி வைத்து விட்டு, ஞாயிறு பள்ளிக்கான சில வேதவாக்கியங்களோடு இங்கே திரும்பி வந்து, சிறிது நேரம் பேசும்படியான ஒரு பாடத்தை நடத்துவது ஒருக்கால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன், வேதாகமத்தில் எனக்குத் தெரிந்ததிலேயே மிக முக்கிய பாடங்கள் ஒன்றின் பேரில் பேசுவது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இது நம்முடைய கர்த்தர் பிரசங்கித்த ஒரு முதலாவது உபதேசமாய் உள்ளது, இதுதான் இயேசு பிரசங்கித்த முதலாவது உபதேசமாகும், அது நம்முடைய முதல் வருட போதனையைக் கொடுப்பதற்கு நன்றாக இருக்குமே என்று நினைக்கிறேன். 2225.இப்பொழுது, உங்களில் யாருக்காவது குளிராயுள்ளதா? கொஞ்சம் குளிராக உணருபவர்கள் உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள்? இங்கே மேலே குளிராயிருப்பதாக உணருவதாக நினைத்தேன். டாக் அவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும், இந்த வெப்பமூட்டும் இயந்திரத்தை (furnace) சிறிது இயக்கி விடுங்கள், ஏனெனில் அது இங்கே சுற்றிலும் அசைந்து கொண்டிருப்பதை நான் உணருகிறேன். அங்கே வெளியேயிருக்கும் நீங்களும், ஜனங்களாகிய உங்களில் சிலரும், குறிப்பாக பிள்ளைகளோடு இருப்பவர்களும் மூடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன். 2326.இப்பொழுது நாம் இக்காலையில், எபேசியர் நிரூபத்திற்கு நம்முடைய வேதாகமங்களைத் திருப்புவோம், எபேசியர் 4ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம், நாம் 11ம் வசனம் தொடங்கி வாசிப்போம். எபேசியர் 4ம் அதிகாரம் 11வது வசனம் தொடங்கி வாசிப்போம். அதன்பிறகு நாம் அங்கிருந்து யோவான் 3:1 முதல் 12 வரை திருப்பப் போகிறோம், வேதவாக்கியத்தில் இரண்டு இடங்களில் வாசிப்போம். இப்பொழுது எபேசியர் 4ம் அதிகாரம் 11ம் வசனம் தொடங்கி வாசிப்போம்... அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும்,... சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமு முள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுதும் , அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசை வாய்க் கூட் டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற் கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. 2427.இப்பொழுது, நீங்கள் வீட்டிற்குப் போன பிறகு, ஆய்ந்து படிக்கும்படி ஏதேனும் ஒன்றை உங்களுக்குக் கொடுப்பதற்காக இதை நான் வாசிக்கிறேன். இப்பொழுது மிகவும் பழக்கமான வேதவாக்கியமாகிய யோவான் 3லிருந்து என்னுடைய முக்கிய வேத பாகத்தை வாசிக்கிறேன். (யோவான் 3:1-12) யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப்பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக... பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் . . . ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால்... பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால்... பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிற தென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவ னெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். அதற்கு நிக்கொதேமு சொன்னான் . . . அவருக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக் கிறாயா? மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக் குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை ... உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 2528.இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் முதலாவது உபதேசத்தைக் குறித்து நான் இந்தக் காலையில் பாடம் நடத்த விரும்புகிறேன். இயேசுவின் முதலாவது உபதேசம் என்னவெனில், 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்' என்பதாக இருந்தது. அதுதான் அவருடைய முதலாவது உபதேசமாக இருந்தது. இப்பொழுது, இன்றிரவு என்னுடைய தொண்டை கரகரப்பாயுள்ள காரணத்தினால், ஞாயிறு பள்ளியின் கண்ணோட்டத்தில், நான் பிரசங்கிக்க மாட்டேன், இது ஜனங்களுக்குப் புரியாத புதிராகத் தோன்றுகிற ஏதோவொன்று என்று நான் என்னுடைய இருதயத்தில் எண்ணியுள்ளேன். நாம் அதைக் குறித்து எல்லா நேரமும் அதிகமாகக் கேட்கிறோம், நாம் இந்தக் காலையில் இந்த பாடத்தினூடாக அப்படியே ஆராய்ந்து பார்த்து விட்டு, அதைக் கடந்து சென்றால், நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்' என்பது தான் முதலாவது தொடக்கமாகும். அது மிகவும் ஆழமான ஒன்று. 2629.ஜனங்கள் அதற்கு அநேக வித்தியாசமான அர்த்தங்களைக் கொண்டு பேசுகிறார்கள் என்பதை நாம்-நாம் கண்டு கொள்ளுகிறோம். நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்று ஏறக்குறைய எல்லா சபைகளுமே கூறுகின்றன, ஆனால் ஒவ்வொன்றும், மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதற்கு என்ன அர்த்தம் என்று தங்களுடைய - தங்களுடைய வித்தியாசமான விளக்கங்களை கொண்டிருக்கின்றன. நான் ஒருக்கால் இந்தக் காலையில் மெதோடிஸ்டு சபைக்குப் போகலாம். அவர்கள், 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்' என்று கூறுகிறார்கள். நீங்கள் அதற்கு எப்படி விளக்கம் கொடுப்பீர்கள்? நான் பாப்டிஸ்டு சபைக்குப் போனால், (அவர்களும்), 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்' என்று (கூறுவார்கள்). நீங்கள் அதை எங்ஙனம் விளக்குவீர்கள்? நான் ஒவ்வொரு சபைக்கும் போகும் போதும், அதை நாம் கண்டு கொள்வோம், நாம் இந்த எல்லா தொள்ளாயிரம் வித்தியாசமான ஸ்தாபன சபைகளுக்கும் போவோமானால், அங்கே 900 வித்தியாசமான அர்த்தங்கள் இருக்கும். எனவே, அங்கே அநேக வித்தியாசமான அர்த்தங்கள் இருப்பதைப் பார்க்கும் போது, இன்னும் அது ஒரு வேதாகம உபதேசமாக இருக்குமென்றால், எங்கோ ஓரிடத்தில் ஒரு சத்தியம் இருந்தாக வேண்டும். 2730.அதன்பிறகு, அது 'நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் (ought to)' என்று கூறவில்லை என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ஆனால் 'நீங்கள் நிச்சயமாக (must) மறுபடியும் பிறந்தாக வேண்டும்' என்று தான் கூறுகிறது. இப்பொழுது, நாம் ஆங்கிலத்தில் பேசுகிற ஜனங்களாக இருக்கையில், 'நிச்சயமாக செய்ய வேண்டியது (must) என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று அறிந்திருக்கிறோம்; அதாவது, 'நிச்சயமாக (absolutely) அதை நீங்கள் செய்தே தீர வேண்டும்' என்பதாகும். பாருங்கள், அது கட்டாயம் செய்தாக வெண்டிய ஒன்று! 'நீங்கள் செய்ய வேண்டும் என்றோ, நீங்கள் அதைச் செய்தால் நல்லது' என்றோ அல்ல; ஆனால் 'நீங்கள் நிச்சயமாக மறுபடியும் பிறந்தே தீர வேண்டும்' என்பதாகும். ஓ, இந்தக் காலையில், நாம் அப்படியே அந்த வார்த்தையை எடுத்து, அதன் அர்த்தம் என்னவென்று விளக்குவோம் என்றால், அது எவ்வாறு இருக்கும், அது முற்றிலும் கூடாத காரியமாகும்... அப்படியானால், அது அவ்வளவு முக்கியமானதும், அவ்வளவு பெரிதானதுமான காரியமாக இருக்குமானால், நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை, பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பதோ அல்லது அதைப் பார்ப்பது கூட முற்றிலும் கூடாத காரியமாகும். மறுபடியும் பிறத்தல் என்ற அந்த வார்த்தைக்கு அநேக வித்தியாசமான விளக்கங்கள் (கொடுக்கப்படுகின்றன), நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் அதைத் தேடி, அதற்கு அர்த்தம் என்னவென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 2831.வேதனையுள்ள (இடத்திற்கு) போக விரும்பும் ஒரு நபரும் இங்கே இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருமேயில்லை. உதாரணமாகக் கூறினால், நீங்கள் வெறுமனே இங்கே சபைக்கு வந்து, நல்லது, ஜனங்களோடு கரங்களைக் குலுக்கி, (நீங்கள் அதைச் செய்ய விரும்பின போதிலும்), மேய்ப்பரும், நானும், மற்ற ஊழியக்காரர்களும் வார்த்தையின் பேரில் பேசுவதைக் கேட்கும்படியாக, உங்கள் ஜீவியத்தையும், உங்கள் பணத்தையும் செலவழித்து, பனிக்கட்டி நிறைந்த சாலைகளில், நீங்கள் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் காரோட்டிக் கொண்டு வரமாட்டீர்கள். (நீங்கள் எங்கேயிருந்தாலும், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய எங்களைப் போன்று, மேய்ப்பர்களையும், ஊழியக்காரர் களையும் பெற்றுக் கொள்ளலாம்.), ஆனால் இங்கேயுள்ள இந்த குறிப்பிட்ட இடத்திற்கு உங்களை இழுக்கும்படியாக அங்கே ஏதோவொன்றுள்ளது. ஆகையால், இந்த மந்தை போஷிக்கப்படுகிறதா என்றும் சரியான விதமாய் போஷிக்கப்படுகிறதா என்றும் கவனிப்பது மேய்ப்பர்களாக எங்களுடைய கடமையாயிருக்கிறது, ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுடைய இரத்தத்தை எங்களுடைய கரங்களில் கேட்பார். நியாயத்தீர்ப்பின் நாளிலே, நாங்கள் உங்களுக்காக பதில் கூறுவோம். எனவே, எங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பொறுப்பைப் பார்க்கும் போது, எங்களை நேசித்து, இங்கு வந்து நாங்கள் கூறுவதைக் கேட்கிற ஜனங்களை தேவன் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அப்படியானால், உங்கள் ஆத்துமாக் களைக் கண்காணிக்கும்படியாக நாங்கள் தொடர்ந்து எங்களுடைய நேரங்களை செலவழிக்க வேண்டும். முதலாவதாக சரியல்லாத சிறிய காரியம் எழும்புவதை நாங்கள் பார்க்கும் போது, அந்த நபரிடம் வருவது எங்கள் கடமையாகும், ஏனென்றால் அந்த ஆட்டைக் கண்காணிக்கும் மேய்ப்பர்களாக நாங்கள் இருக்கிறோம். அந்த ஆட்டைக் கொன்று போடுகிற ஒரு களைச் செடியை புசித்துக் கொண்டிருப்பதை நான் கண்டால், அந்த களைச் செடியை விட்டு அந்த ஆட்டைத் துரத்துவது தான் எனக்கு நல்லது; அந்த களைச் செடியை அந்த ஆட்டை விட்டுப் பிடுங்கி விட வேண்டும், அப்போது தான் அது அதனிடம் போக முடியாது, ஏனென்றால் அந்த களைச் செடி அந்த ஆட்டைக் கொன்று போடும். 2932.மேற்கத்திய தேசங்களில், ஒரு-ஒரு மிருகம் புசிக்கக் கூடிய ஒரு காட்டு புதர் செடி இருப்பது வழக்கம். அது விஷத்தன்மையுள்ள லாகா செடி (locoweed) என்று அழைக்கப்படுகிறது. (நீங்கள்) யாராவது அதைக் குறித்து எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை - அது ஒரு விஷத் தன்மையுள்ள லாகா செடி (locoweed) ஆம். ஒரு குதிரையால் அதைப் புசிக்க முடியும், உங்களால் அந்தக் குதிரையோடு எதையும் செய்ய முடியாது. அது அப்படியே ஒரு முரட்டுத்தனமான மிருகமாக ஆகி விடுகிறது. நீங்கள் அந்த குதிரையில் சேணம் கட்ட முடியாது, நீங்கள் அதனோடு எதையுமே செய்ய முடியாது. அந்த செடிக்கு விஷமுள்ள லாகா செடி என்று பெயர். நீங்கள் நிச்சயமாக உங்கள்-உங்கள் பண்ணைக் கால்நடைகளை அந்த விஷச் செடியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். ஒரு குதிரை அதில் ஏதோவொன்றை புசிக்க நேரிட்டால்... அது இதற்குக் காரணமாகும். சரியாகச் சொன்னால், ஒரு குதிரையை இந்த நிலைக்குள் ஆளாக்குகிற, உடல் தசைகள் திடீரென்று இறுகும்போது ஏற்படும் வலிக்கு ஆளாக்குகிற ஏதோ வொன்றை அது புசித்தால், ஏன், உங்களுடைய குதிரையை ஒரு காட்டுப் புதர் செடியை, விஷ செடியை புசிக்க வைக்கிற மிகவும் மோசமான மாட்டுக்காரனாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் கவனிப்பதில்லை என்பதை அது காட்டுகிறது. 33.ஒரு ஆட்டைத் துரத்தியடிப்பது, அல்லது தேவனுக்கு முன்பாக அவனை ஒரு அயோக்கியனாகவும், அவருடைய வார்த்தையை உடைத்துப்போடுகிறவனாகவும், அவருடைய கற்பனைகளை உடைத்துப் போடுகிறவனாகவும் ஆக்கப் போகிற ஏதோவொன்றை அந்த ஆடு புசிக்கிறதை காணும் ஒரு உண்மையான மேய்ப்பருக்கு, கிறிஸ்துவின் உண்மையான ஒரு ஊழியக்காரருக்கு அது கிறிஸ்துவைக் குறித்து மோசமான ஒரு உதாரணமாக இருக்கும். நீங்கள் அதைச் செய்யக் கூடாது. நீங்கள் அதை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 3034.எனவே இங்கே வேதாகமத்தில் நமக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள, 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்...' என்ற இயேசுவின் இந்த மகத்தான உபதேசமானது. அதன் அர்த்தம் என்னவென்றும், தாங்கள் எவ்வாறு ஒரு உண்மை யான கிறிஸ்தவனாக ஆக முடியும் என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் அநேகரின் நிமித்திமாக நான் இக்காலையில் அதைக் குறித்து சிந்திப்பதற்காக, நான் முன்பே கூறியிருந்தபடி, அங்கே அதைக் குறித்து அநேக வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. அப்படியானால் நாம் ஒருக்கால் அந்தப் பாடத்தை அணுகலாம் என்றும், அதை உங்களிடம் எவ்வாறு பேசுவது என்று நான் அறிந்துள்ளபடி, அந்தப் பாடத்தை எவ்வளவு தெளிவாக நடத்த (முடியுமோ) அவ்வளவு தெளிவாக நடத்தலாமே என்றும் நான் நினைத்தேன். அது ஒரு செய்தியைப் (பிரசங்கிக்கும்) விதமாக அல்ல; ஜனங்கள் செய்தியை நிச்சயமாக புரிந்து கொள்ளும் படி, ஞாயிறு பள்ளியைப் போதிக்கும் விதமாக, அதை நடத்தலாம் என்று நினைத்தேன். இப்பொழுது, 'மறுபடியும் பிறத்தல்.' என்பதைக் குறித்து அநேக விளக்கங்கள் உள்ளன. 3135.இப்பொழுது நான் இதைக் கூறிக் கொண் டிருக்கிறேன், இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பது எனக்குத் தெரியும், ஒருக்கால் இந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ளும் மேய்ப்பர்களுக்கு நான் இதைக் கூற விரும்புகிறேன். வழக்கமாக சபை இதைக் குறித்து போதிப்பதிலிருந்து இது ஒருக்கால் சிறிது வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன், நீங்கள் ஆவியினால் பிறந்து, அதன்பிறகு பரிசுத்த ஆவியினால் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள் என்று நான் போதித்து, விசுவாசிப்பது மற்றும் நம்புவது வேதவாக்கியத்தைக் கொண்டு நிரூபிக்க போதுமானதாக இருக்க முடியும். 36.இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவை (உங்கள்) சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பினவர்களாய், வெறுமனே மேலே வந்து, சபைக்கு முன்பாகவும் மற்றவர்களுக்கு முன்பாகவும், ஒரு-ஒரு பாவியாக இருப்பதை ஒப்புக் கொள்வது தான் புதிய பிறப்பு என்று அவர்களில் அநேகர் போதிக்கிறார்கள். தண்ணீர் ஞானஸ்நானம் தான் புதிய பிறப்பு என்று அநேகர் விசுவாசிக்கிறார்கள். நீங்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்படும் போதே நீங்கள்-நீங்கள் ஜலத்தினால் பிறக்கிறீர்கள் என்று அவர்களில் அநேகர் விசுவாசிக்கிறார்கள். அங்கே அதைக் குறித்து அநேக வித்தியாசமானகருத்துக்கள் உள்ளன. ஒ ரு மதக்கோட்பாட்டை (விசுவாச பிரமாணத்தை) மனப்பாடமாக ஓதிக் கொண்டு, ஒரு சபையின் உபதேசத்தில் விசுவாசம் வைத்து, வெறுமனே அதை ஏற்றுக் கொண்டு, 'நான் இன்ன இன்ன பரிசுத்த சபையில் விசுவாசிக்கிறேன், தேவனே மனுஷ இரட்சகர் என்று விசுவாசிக்கிறேன், மேலும் அதைப் போன்ற மற்றவைகளை விசுவாசிக்கிறேன். இன்று முதற்கொண்டு நான்-நான்இச்சபையின் ஒரு அங்கத்தினன் ஆகி, கிறிஸ்தவர்களோடு ஐக்கியம் கொள்கிறேன்' என்று கூறுவதை அவர்களில் ஏராளமானோர், அவர்களில் அநேகர் விசுவாசிக்கின்றனர். அதுதான் மறுபடியும் பிறத்தல் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். 3237.அவர்கள் அந்த விசுவாச பிரமாணத்தை மனப்பாடமாக ஓதுகின்ற போதிலும், நம்மால் அதைக் குறை கூற முடியும் என்பதை நான் நம்புவதில்லை. அவர்களில் சிலர் களங்கமற்றவர்களும் பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கின்றனர், அவர்களில் சிலர் உண்மையாகவே வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டவர்கள் தான், ஆனால் வேதவாக்கியம் சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை. வேத வாக்கியத்தைப் பொருத்துவதிலும் கூட, புதிய பிறப்பானது அதற்கும் அப்பாலுள்ள ஏதோவொன்றாக உள்ளது என்று நம்புகிறேன். நீங்கள் ஒருக்கால் அதை எவ்வளவு நன்றாக அர்த்தப்படுத்தின போதிலும் புதிய பிறப்பானது உங்களுடைய நல்ல நோக்கங்களுக்கும், உங்களுடைய எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் அப்பாலுள்ள ஏதோவொன்றாக உள்ளது என்று நம்புகிறேன். அது அதற்கும் எட்டாத இடத்தில் உள்ளது. 3338.நான் அவமதிக்க வேண்டுமென்று இதைக் கூற விரும்பவில்லை, நான் எந்த ஸ்தாபன சபையை நோக்கியும் கடுமையான எந்த குற்றச்சாட்டுகளையும் வீசியெறியவில்லை, ஆனால் அதில் அநேகமான காரியங்கள் ஒரு-ஒரு-ஒரு யூதனைக் குறித்து எனக்கு நினைப்பூட்டுகின்றன, ஒரு சிறு... அது ஒரு நகைச்சுவையாக (joke) உள்ளது. பிரசங்க பீடத்தில் வைத்து நகைச்சுவைகளை கூற வேண்டும் என்பதை நான் நம்புவதில்லை. இது ஒரு நகைச்சுவைக்கான இடமல்ல. ஆகையால், என்னுடைய சிந்தையிலுள்ள இந்த கூற்றை நான் கூறும் போது, அது ஒரு நகைச்சுவைக்காக அல்ல, ஆனால் நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு தான். ஒரு முறை ஒரு கத்தோலிக்க பாதிரியார் புதிதாக கத்தோலிக்க சபைக்கு மனம்மாறின ஒருவனுடைய வீட்டிற்கு வெள்ளிக் கிழமையன்று போனார். கத்தோலிக்கத்திற்கு மனம்மாறினவன் பன்றி இறைச்சியை பொரித்து (baked) வைத்திருந்தான், அவன் (பாதிரியாரைப்) பார்த்து, 'பாதர், இன்று வெள்ளிக் கிழமை என்று எனக்கு ஞாபகம் வருகையில், எனக்கு வருத்தமாயுள்ளது. ஆனால் நம்முடைய சபையின் மகத்தான உபதேசத்தின்படி, நான் ஒருகாலத்தில் யூதனாயிருந்தேன், நீரோ கொஞ்சம் புனித தண்ணீரை என்மேல் தெளித்து, என்னை ஒரு யூதனிலிருந்து ஒரு கத்தோலிக்கனாக மாற்றினீர் என்று நம்புகிறேன். இப்பொழுது நான் அந்த அதே (புனித) தண்ணீரில் கொஞ்சம் இந்த பன்றி இறைச்சியின் மேல் தெளித்து, இந்த பன்றி இறைச்சியை ஒரு மீனாக ஆக்கி விடுகிறேன்' என்றானாம். இப்பொழுது, அதாவது அவ்வாறு தெளிப்பது அந்த பன்றி இறைச்சியை ஒரு மீனாக ஆக்குவதில்லை என்று கூறுகிறேன். அந்தத் தண்ணீர் எவ்வளவு புனிதத் தன்மை கொண்டது போல பொய்யாய் தோற்றமளித்தாலும் காரியமில்லை, அது அப்பொழுதும் ஒரு பன்றி இறைச்சியாகவே இருக்கும். 3439.நாம் ஒரு விசுவாச பிரமாணத்தைக் கூறிக் கொண்டிருப்பதோ அல்லது ஒரு சபையைச் சேர்ந்து கொள்வதோ சரிதான் என்று நாம் எவ்வளவு தான் நினைக்க முயன்றாலும் காரியமில்லை, நீங்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும் வரையில், நீங்கள் முன்பு இருந்தது போலவே அப்பொழுதும் இருப்பீர்கள். அது உங்களை மாற்றுவதில்லை. உங்களுடைய விசுவாச பிரமாணமோ, சபையை சேர்ந்து கொள்ளுதலோ, அல்லது உங்களுடைய கருத்துக்களை மாற்றுவதோ, அல்லது உங்களுடைய நல்ல நோக்கங்களோ, அவைகள் ஒருக்கால் எவ்வளவு நன்றாக இருக்க முடியுமோ அவ்வளவு நன்றாக இருப்பது போல தோன்றினாலும், அது இன்னும் சரியல்ல. அங்கே ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். புதிய பிறப்பு என்பது ஒரு அனுபவமாக உள்ளது, அது சம்பவிக்கிற ஏதோவொன்றாக உள்ளது. எனவே அதுதான் புதிய பிறப்பைக் கொண்டு வருகிறது என்பதல்ல. இப்பொழுது, வெவ்வேறான சபைகள், அவர்கள், 'நல்லது, நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது அதை விசுவாசியுங்கள், அதெல்லாம் சரிதான்' என்று கூறலாம். ஆனால் அதுவல்ல. 3540.இப்பொழுது, துவங்குவதற்கு அடிப்படையாக, நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதற்கு காரணம் என்னவெனில், நாம் எல்லாருமே பாவத்தில் பிறந்து, துர்க்குணத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்தில் வருகிறோம் என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது. அப்படியானால், துவக்க முதலே நம்முடைய சுபாவம் பாவத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பதை அது நமக்குக் காட்டுகிறது. நாம் துவக்க முதலே நல்லவர்கள் அல்ல. எனவே நம்முடைய புத்தி கூர்மையைக் கொண்டோ, நம்முடைய உத்தமத்தைக் கொண்டோ, அல்லது நாம் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதைக் கொண்டோ, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் கொண்டோ, அல்லது - அல்லது இன்னும் எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டோ, நம்மால் எதையும் உரிமை பாராட்ட முடியாது. நாம் துவக்க முதலே முற்றிலுமாக தவறானவர்களாக இருக்கிறோம். நம்மால் அதைக் குறித்து செய்யக் கூடிய காரியம் எதுவுமே யில்லை. உங்களால் முடியாது... இயேசு, 'கவலைப்படுகிறதி னால் எவன் தன் சரீர அளவோடு - தன் சரீர அளவோடு ஒரு-ஒருஅளவைக் கூட்டுவான்?' என்று கூறினார். நீங்கள் எல்லா கோட்பாடுகளையும் எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் அதைக் குறித்து எல்லா கனவுகளையும் காணலாம், நீங்கள் அதை வாசிக்கலாம், அதை ஆராய்ந்து படிக்கலாம், அதை பரீட்சித்துப் பார்க்கலாம், மற்ற யாவற்றையும் செய்யலாம், நீங்கள் உங்களுக்குத்தானே சிறிதளவும் உதவி செய்யவே முடியாது. எனவே அது அப்படியே அவை எல்லாவற்றையும் வெளியே எறிந்து விடுகிறது (ஒதுக்கித் தள்ளி விடுகிறது). நம்மால் நமக்கு சிறிதளவும் உதவி செய்ய முடியாது என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனென்றால் அது ஏதோவொன்றை அறிந்து கொள்வதால் கிடைக்கும் எண்ணத்திலோ, புத்திசாதுரியத்திலோ வைக்கப் பட்டிருக்குமானால், படிப்பறிவில்லாத ஏழை ஜனங்களாகிய நாம் கைவிடப்பட்டிருப்போம், அப்போது நமக்கு ஒரு வாய்ப்புமே கிடைத்திருக்காது. ஆனால் தேவன் அதை மாற்றி விட்டார், அல்லது, ஆதியிலிருந்தே அவ்விதமாக ஒருபோதும் இருந்ததில்லை. சபைகள் எப்போதுமே அதை குழப்பி விடுகின்றன; தேவனோ அதை எளிமையாக ஆக்குகிறார். எனவே நாம் எல்லாருமே காணக்கூடிய, நாமெல்லாருமே அதைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இடத்திற்கு அதைக் கொண்டு வந்திருக்கிறது. அது விருப்பமுள்ள யாராயிருந்தாலும் அவர்களுக்கானது. 3641.இப்பொழுது, இப்பொழுது, ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இரட்சிக்க முடியாது. இப்பொழுது, யாராவது ஒருவர் எதைக் கூற முயற்சித்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை, எந்த மனிதனும் மற்றொரு மனிதனை இரட்சிக்க முடியாது. அவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அவன் என்ன வேலை செய்தாலும் காரியமில்லை, அவன் ஒரு மேய்ப்பராகவோ, பாதிரியாராகவோ, பிஷப்பாகவோ, கார்டினலாகவோ, அல்லது ஒரு போப்பாகவோ இருக்கட்டும், எந்த மனிதனுடைய ஜீவியத்தையும் இரட்சிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு காரியத்தையும் அவனால் கொண்டிருக்க முடியாது, ஏனென்றால் அவன் தாமே பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாக உலகத்தில் வந்த ஒரு பாவியாக இருக்கிறான். அவன் துவக்க முதலே ஒரு பொய்யனாக இருக்கிறான், அவன் கூறும் ஏதாவது வார்த்தை தேவனுடைய வார்த்தைக்கோ தேவனுடைய திட்டத்திற்கோ முரணாக இருந்தால், அது ஒரு பொய்யாக இருக்கும். 3742.ஆனால் இரட்சிக்கப்படும்படி தேவன் மனிதனுக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். அந்த திட்டத்தோடு மனிதனால் எதையும் சேர்த்துக் கொள்ள முடியாது. அது தேவனுடைய திட்டமாகும். நாம் இந்தக் காலையில், அந்தத் திட்டத்தைக் குறித்து தான் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். தேவனுடைய திட்டம் என்ன? அவர், 'ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும், என்னுடைய வார்த்தையே சத்தியமாகவும் இருப்பதாக' என்று கூறினார். ஆகையால், அதை வேறு ஏதோவொன்றாக செய்யும்படி, ஒரு வாக்கியத்தை மாற்றியமைக்க நாம் தைரியம் கொண்டிருக்கக் கூடாது. நம்முடைய சம்பிரதாயமான மத சடங்குகளும் மற்றவைகளும் எவ்வளவாக வாசிக்கப்பட்டாலும் காரியமில்லை, நாம் அதை மறந்து விட வேண்டும். இதுதான் தேவனுடைய வார்த்தை. வேறு எந்த வழியிலும் செய்யப்பட முடியாது. தேவனுக்கு ஒரு திட்டமுண்டு, அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 3843.முதலாவது காரியமாக, நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரையில், நீங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அதை இருமுறை உரைத்தார். 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் இராஜ்யத்தைக் காண கூட முடியாது.' இப்பொழுது, அதுவும் கூட நிறுத்தக் குறியீடு இடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையானது, அந்த எல்லா வார்த்தைகளையுமே (சேர்த்து) உருவாக்குகிறது; அவர்கள் அதை எழுதி வைக்க வேண்டியிருந்தது என்று அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். அவர்கள், அவர்கள், 'மெய்யாகவே, மெய்யாகவே' என்று கூறும் போது, அது ஒரு-ஒரு-ஒரு பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு (capital) போன்று ஒரு நிறுத்தக்குறியீடாக (punctuation) உள்ளது. 'மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!' அந்த வார்த்தையானது ஒரு இடத்தில் அல்லது அநேக இடங்களில், 'உறுதியாக (absolutely)' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'உறுதியாக, உறுதியாக, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!' அதைக் கூறினது யார்? ஒரு கார்டினலா, பாதிரியாரா, மேய்ப்பரா, சுவிசேஷகரா, போப்பா? தேவன் தாமே அதைக் கூறினார்! இப்பொழுது, அங்கே எந்த சாக்குப்போக்குகளுமே கிடையாது. அவன் சாக்குப்போக்கு சொல்ல எந்த வழியும் இருக்காது, எந்த வழியுமே இருக்காது, வேறெந்த விதத்திலும் சாக்குப்போக்கு கூறவே முடியாது, அவன் எவ்வளவு உயர்ந்தவனாயிருந்தாலும் காரியமில்லை, அவன் எப்படிப்பட்ட பெயரைக் கொண்டிருந்தாலும் காரியமில்லை, அவன் எவ்வளவு பெரியவனாயிருந்தாலும், அல்லது அவன் எவ்வளவு பிரபலமானவனாயிருந்தாலும் காரியமில்லை, அவன் மறுபடியும் பிறக்கும் வரை அவனால் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ள கூட முடியாது. அது ஒரு மகத்தான பாடமாகும். 'மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!' கவனியுங்கள். நீங்கள் சென்று கிரேக்க மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்தால், நீங்கள் அதைக் கண்டு கொள்வீர்கள். உங்கள் கண்களைக் கொண்டு பார்க்காதீர்கள்; உங்கள் இருதயத்தைக் கொண்டு பாருங்கள். புரிகிறதா, நீங்கள் உங்கள் கண்களைக் கொண்டு தேவனுடைய இராஜ்யத்தைக் காண முடியாது, ஏனென்றால் அது ஒரு ஆவிக்குரிய இராஜ்யம். பாருங்கள்? வேறு வார்த்தைகளில் சொன்னால், 'நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை நீங்கள் ஒருபோதும் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ள முடியாது.' அது முழுவதுமாக முடிச்சு அவிழ்க்கப்படாத ஒரு இரகசியமாகவே இருக்கின்றது. நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, இராஜ்யத்தின் திட்டங்களும், அந்த இராஜ்யம் தானே உங்களுக்கு உண்மையானதாக ஆகி விடுகிறது. 3944.ஒரு கான்ட்ராக்டர் ஒரு கட்டிடத்தைக் கட்டுவது போன்று, அவரால் ஒரு வரைபடத்தின் நிழற்பட அச்சை (blueprint - புளு பிரின்ட்) வாசிக்க முடியாவிட்டால், அவருக்கு அந்த புளு பிரின்ட் புரியவில்லை என்றால், அவர் அந்தக் கட்டிடத்தைக் கட்டும்படி முயற்சிக்க வேண்டிய அவசிய மில்லை. அதன்பிறகு அவர் அந்த புளுபிரின்டை புரிந்து கொள்ளும் போது, அந்தக் கட்டிடத்தை எவ்வாறு கட்ட வேண்டும் என்று அவருக்குத் தெரிகிறது. இதுவும் அந்த - அவ்விதமாகத்தான் உள்ளது. தேவனுடைய இராஜ்யத்தைக் கட்டுகிறதைக் குறித்த காரியத்திலும் அதுதான் சம்பவிக்கிறது. நீங்கள் அந்த புளுபிரின்டை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை நீங்கள் அந்த புளுபிரின்டை அறிந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்து, அந்த புளுபிரின்டை மறுதலிக்கும் போது, என்ன சம்பவிக்கிறது? 4045.சமீபத்தில், ஒரு அழகான சிறு பெண்... நாங்கள் வாலிப வயதினர்களாக இருந்த போது, நான் வழக்கமாக அவளுடைய தாயாருடன் போவதுண்டு. அவள் ஒரு கவர்ச்சி வாய்ந்த அழகான பெண்ணாக இருந்தாள். இப்பொழுது அவளுடைய பெயர் ஹஃப் (Huff) என்பதாகும். அவளுடைய திருமணத்திற்கு முன்பு அவளுடைய பெயர் லீ Lee) என்பதாயிருந்தது. நான் வழக்கமாக மில்டவுன் பாப்டிஸ்ட் சபையின் மேய்ப்பராக இருந்த போது, அவர்கள் ஐக்கிய சகோதர சபையைச் (United Brethren Church) சேர்ந்தவர்களாய் இருந்தனர், ஆனால், ஓ, அவர்கள் என்னை (straw tick) மிகவும் அதிகமாக நேசித்தனர். அவள்... நான் வழக்கமாக அவளுடன் போவேன். வெகுநாட்களுக்கு முன்பு, அவர்கள் இங்கேயிருக்கும் சகோதரன் ரைட் அவர்களுக்குப் பின்புறத்தில் மேலே வசித்தனர்... நான் வழக்கமாக மேலே அவர்களுடைய வீட்டிற்குப் போவேன். அந்தச் சிறு பெண் மிக இனிமையான ஒரு சிறு பெண்ணாக இருந்தாள், அவள் எனக்கு ஒரு சிறு பெண் சிநேகிதியாக இருந்தாள். ஐக்கிய சகோதர சபைக்கு விசுவாசமாயிருந்த அருமையான மனிதராகிய சகோதரன் லீ அவர்கள் ஒரு இரவில் தன்னோடு வீட்டிற்கு சென்று, இரவு முழுவதும் தங்கும்படியாக என்னை அழைத்தார். நான், 'சகோதரன் மரியன் அவர்களே, நான்-நான் அதைச் செய்வதற்கு மகிழ்ச்சியாயிருப்பேன்' என்றேன். எனவே ஆராதனை முடிந்த பிறகு, நல்லது, அந்த பெண்ணும் நானும் காரில் ஏறி, நாங்கள் அங்கு சென்றோம். மேலேயுள்ள மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மகத்தான பெரிய பழைய வீட்டை அடைவதற்காக, அந்த மலைப்பகுதியைச் சுற்றிலும் போகும்படி, நான் 12 வாசல்களைத் திறக்க வேண்டியதாயிற்று என்று நம்புகிறேன். நல்லது, நாங்கள் வெளியே முற்றத்தில் உட்கார்ந்து, அவளுடைய தாயாரும் தகப்பனாரும் இளைய சகோதரியும் மேலே வருவதற்காக காத்திருந்தோம். அவர்கள் மேலே வந்த போது, நாங்கள் எல்லாரும் உள்ளே சென்று, அந்த இரவில் ஒரு சிறிய நண்பகல் சாப்பாட்டைப் புசித்தோம். அந்த தாயார் கொஞ்சம் ஆகாரங்களை வெளியே கொண்டு வந்தார்கள், நாங்கள் அவைகளைப் புசித்தோம், தகப்பனாரும் நானும் கீழ்த்தளத்தில் ஒரு மகத்தான பெரிய இறகுகளால் செய்யப்பட்ட மெத்தையில், அதன் கீழே வைக்கோல் நிரப்பப்பட்ட சொரசொரப்பான காட்டன் சாதனத்தால் செய்யப்பட்ட ஒரு படுக்கையில் ஒன்றாக சேர்ந்து உறங்கினோம், உங்களுக்குத் தெரியும், உண்மையாகவே நன்றாக உறங்கினோம். நீங்கள் வைத்திருக்கிற இந்த படுத்துறங்கி ஓய்வெடுப்பதற்கான எந்தப் பழைய மெத்தைகளைக் காட்டிலும் அதுவே சிறந்தது என்று உங்களிடம் கூறுவேன். எனவே நாங்கள்... தாயாரும் இரண்டு பெண் பிள்ளைகளும் மேல்மாடிக்குச் சென்றனர். 4146.நாங்கள் அங்கே அந்த இரவில் படுத்திருக்கும் போது, சகோதரன் லீ ஒரு கனவு கண்டிருந்தார். அவர் எப்போதுமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து என்னோடு தர்க்கித்துக் கொண்டிருப்பார். அவர் அதை விசுவாசிக்கவில்லை. அவர் ஒரு கட்டிட கான்ட்ராக்டர். எனவே அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நான் இப்பொழுது தான் ஒரு கனவு கண்டேன். நான் நியூ ஆல்பனிக்குப் போனதாக கனவு கண்டேன். நான் ஒரு மனிதனுடைய வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தேன், அவன் எனக்கு கட்டிட வரைபடத்தின் புளுபிரின்டைக் (blueprint) கொடுத்தான். ஆனால் அவன் தன்னுடைய ஜன்னல்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வெட்டி, ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆயத்தம் செய்வதை நான் கண்ட போது, நான், 'அது சரியல்ல. அது சரியாக இருக்க முடியாது. அது முரண்பாடாக உள்ளது. இப்பொழுது, அவன்... அது சரியல்ல' என்றேன். எனவே நான் சரியென்று நினைத்த வழியில் அதைக் கட்டினேன். அவன் தன்னுடைய விடுமுறை (முடிந்து) ஃபுளோரிடாவி லிருந்து திரும்பி வந்த போது, நான் ஏறக்குறைய அவனுடைய வீட்டை ஆயத்தப்படுத்தி விட்டிருந்தேன்' என்றார். 47.'அவன் அந்த வீட்டை நோக்கிப் பார்த்து விட்டு, அவன் சென்று கட்டிட வரைபட புளுபிரின்டை எடுத்து அதைப் பார்த்து, 'பதில் சொல்லு, நீ என்னுடைய வீட்டை தவறாகக் கட்டியிருக்கிறாய்!' என்றான்.' 'நான் அவனைப் பார்த்து, 'இல்லை, நான் உன்னுடைய வீட்டைத் தவறாகக் கட்டவில்லையே' என்றேன்.' 'கட்டிடத்தின் இந்த இந்த இடத்தைக் குறித்து என்ன?' 'நல்லது,' அவன், 'அது உண்மையாகவே அங்கே இருக்கக் கூடாது' என்றான். 48.'அவன், 'இதை இடித்துப் போட்டு விடு! நான் உனக்கு சம்பளம் தர வேண்டுமென்று நீ எதிர்பார்த்தால், கட்டிட வரைபட புளுபிரின்டில் இருக்கிறபடி தான் நீ அதைக் கட்ட வேண்டும்' என்றான்.' 49.அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். 50.நான், 'இங்கே வீட்டின் கீழ்புறத்தில் அங்கே ஒரு சிற்றோடை ஓடிக் கொண்டிருக்கிறதே' என்றேன். நாங்கள் அங்கு சென்றோம். அவர், 'நான் அந்நாளில் எதையும் இடித்துப் போட விரும்பவில்லை' என்றார். 51.நான், 'இப்பொழுது அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். புளுபிரின்டில் இருக்கிறபடி அதைக் கட்டுங்கள்!' என்றேன். 4252.எப்படியாக சம்பளம் கொடுக்கப்பட்டது, சமீபத்தில் அவருடைய ஒரு... அதன்பிறகு அவருடைய மகள் ஒரு அருமையான பையனை, அருமையான மனிதனை விவாகம் பண்ணினாள். அவன் இங்கே படகு சார்ந்த வேலைகளில் இயந்திர இயக்க வல்லுநராக (machinist) இருக்கிறான், மேலும் அந்தப் பையனுடைய விரல்கள் இந்த விதமாக துண்டிக்கப்பட்டிருந்தது. அவன் ஒரு அருமையான மனிதன். அவர்களுக்கு ஒரு அன்பான குடும்பம் உண்டு - மூன்று சிறு மகள்கள் அவர்களுக்கிருக்கிறார்கள், மேலும் அவர்களில் ஒருத்தி... அவர்கள் யாவரும் கிறிஸ்தவர்கள் தான், அவர்கள் மூவர் சேர்ந்து பாடும் பாட்டைப் (trio) பாடுவார்கள். நமக்கு இங்கே எப்போதாவது ஒரு கூட்டம் இருக்குமானால், அவர்கள் நமக்காக பாட வருகிறார்கள். அந்தச் சிறு பெண் பிள்ளைகளில் ஒருத்தி பியானோ இசையை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், அவள் வெறுமனே ஒரு சிறு பிள்ளையாய், பதினைந்து, பதினாறு வயதாக இருக்கும் போதே பாரம்பரிய இசையில் (classical music) ஒரு ஆசிரியையாக இருந்தாள். அந்தப் பள்ளிப் பிள்ளைகள் வெவ்வேறு காரியங்களைக் குறித்து அவளைக் கேலி செய்து தொல்லைக் கொடுத்தனர், அவள் ஒரு கிறிஸ்தவளாய் இருப்பதைக் குறித்து அவளை நையாண்டி செய்து தொந்தரவு கொடுத்தனர். அது அவளுக்கு நரம்புக் கோளாறை உண்டாக்கினது. அது அவள் நிலைகுலைந்து போகும் நிலைக்கு அவளை ஆளாக்கினது. அவள் தன்னுடைய சிந்தையை இழந்து போனாள். அவர்கள் அவளை லூயிவில்லில் வைத்திருந்தனர், அவர்கள் அவளை அதற்கடுத்த திங்கட் கிழமையில் பைத்தியக்கார மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் போவதாய் இருந்தனர். மேலும் அவர்கள்... நான் அவளைக் காண மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. நான் அங்கு ஒரு பார்வையாளராகச் சென்று, அந்த தகப்பன் மற்றும் தாயோடு படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்தேன். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே அசைவாடினார். லூயிவில்லிலுள்ள இந்த, நமது சமாதான இராக்கினி மருத்துவ இல்லத்தில் (Our Lady of Peace Sanitarium), அவர்களுக்கு இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கும் போது தான், அங்கு நரம்புக் கோளாறுடைய நோயாளிகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அதன்பிறகு, அவர்கள் இவர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் இவர்களை இந்தியானாவிலுள்ள மாடிசனுக்கு அனுப்பி விடுகின்றனர். அந்தச் சிறு பெண் அந்த வாரத்திலேயே மாடிசனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அவர்கள்-அவள் உதவி செய்யக் கூடிய கட்டத்தை அவள் தாண்டி விட்டாள். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு தரிசனம் எங்களுக்கு முன்பாக வந்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அந்தச் சிறு பெண்ணிடம் உரைத்தது. அந்தத் தாயார் என்னுடைய முழங்காலைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள், அவள் வந்து, கரத்தால் தன்னுடைய கணவனைப் பற்றிப் பிடித்து, 'அது ஒருபோதும் தவறல்ல!' என்று கூறினாள். 53.நான், 'கவலைப்பட வேண்டாம், அவள் சுகமாகி விடுவாள்' என்று கூறி விட்டு, நான் துரிதமாக கட்டிடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றேன். 4354.அந்த இரவு 9 மணிக்கு தொலைபேசி மணி ஒலித்தது; அல்லது அது ஒன்பது மணிக்கு சற்று முன்பு என்று நம்புகிறேன், அந்த இரவில் நான் சபைக்கு வருவதற்கு முன்பாக தொலைபேசி மணி ஒலித்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமையாகும். அந்தத் தகப்பனார் தன்னுடைய இருதயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய், அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, இந்த நல்ல செய்தியை அடக்கி வைத்துக் கொண்டு என்னால் வீட்டிற்குப் போக முடிய வில்லை. அவர், 'மருத்துவர் உள்ளே வந்து, என்னுடைய மகளை பரிசோதித்துப் பார்த்து விட்டு, அவர்,'அவளுக்கு என்ன சம்பவித்தது? அவள் நாளைய தினமே வீட்டிற்குப் போகலாம்' என்றார்' என்று கூறினார். ஒரு சில வாரங்களுக்கு முன்பு தாயார் ஒரு பிணமாகக் கிடந்த போது, அங்கே மூன்று பேர் பாடும் பாடல் பாடப்பட்டது, அந்த சிறு பெண் பிள்ளை எவ்வளவாக இருக்கக் கூடுமோ அவ்வளவு அருமையானவளாக இருந்தாள், அவளும் அவளுடைய காதலனும் இனிமையானவர்கள். ஓ, நான் உங்களுக்குக் கூறுகிறேன், புளுபிரிண்ட்! நாம் எவ்வாறு மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைக் குறித்த திட்டத்தை விளக்கும் ஒன்றாக தேவனுடைய வார்த்தை உள்ளது. 4455.முதலாவது, நாம் நம்மையே பாவிகளாகவும், ஆக்கினைத்தீர்ப்புக்குப் பாத்திரவான்களாகவும் எண்ணி விடுகிறோம். நாம் எல்லாரும் பாவத்தில் பிறந்து, துர்க்குணத்தில் உருவாகிறோம். நம்மிடத்தில் உடையாத நல்ல நிலையிலுள்ள ஒரு பொட்டலமும் கிடையாது. நம்முடைய சிந்தைகள் மோசமானவை, நம்முடைய ஆத்துமாவும் சீரழிந்து கெட்டுப்போகக் கூடியதாயுள்ளது, தொடர்ந்து நம்முடைய எண்ணங்களும் தீமையான கெட்ட எண்ணங்களாகவே உள்ளன, ஒரு மனிதனின் சிந்தையில் அவன் கற்பனை செய்கிற ஒவ்வொரு நினைவுகளும் கெட்ட நினைவுகளாகவே உள்ளன - அவன் ஒரு பாவியாயிருக்கிறான். மேலும் நம்முடைய சரீரமும் கூட பலவீனமாகவே உள்ளது, நம்முடைய ஆவியிலும் நல்லவைகளே கிடையாது, நாம் அப்படியே முழுவதும் கெட்டு சீரழிந்து போயிருக்கிறாம். கெட்டுப் போன ஒரு காரியமானது, கெட்டு சீரழிந்து போன ஒன்றிலிருந்து எவ்வாறு வேறொரு நல்ல காரியத்தைக் கொண்டு வர முடியும்? நான் இதைக் கூறட்டும், யோபு 14வது அதிகாரத்தில், அவன், 'ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷனைப் பார்க்கும் போது, அவன் துக்கமும் சஞ்சலமும் நிறைந்தவ னாயிருக்கிறான், மேலும், அவன் பூவைப் போலப் பூத்து, பட்டுப் போகிறான்' என்றான். மேலும், அந்த தீர்க்கதரிசி தொடர்ந்து பேசிக் கொண்டே போகையில், அவன், 'ஒரு அசுத்தமான காரியத்திலிருந்து யாரால் சுத்தமான ஒரு காரியத்தைக் கொண்டு வர முடியும்? யாராலும் முடியாது!' என்றான். நீங்கள் உங்கள் வாளியை கிணற்றிற்குள் இறக்கி, ஒரு வாளி நிறைய தண்ணீரை வெளியே இழுத்தெடுத்தால், அது கெட்டுப் போனதும், நாற்ற மடிக்கிறதுமாய் இருக்கிறது. நீங்கள் அதில் கவனித்துப் பாருங்கள், அது சேறு நிறைந்ததாய் இருக்கிறது, அந்தத் தண்ணீரில் சிறு புழுக்கள் இருக்கின்றன. உங்கள் வாளியை திரும்பவும் மேலே இழுத்து சுத்தமான வாளியைக் கொண்டு வர எந்த வழியுமே கிடையாது. முழு உலகமும் கெட்டுப் போயுள்ளது. மனிதனுடைய முழு ஆத்துமாவும், மனதும், சரீரமும் பாவத்தினாலே கெட்டுப் போயுள்ளது. அவன் இயற்கையாகவே பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாக உலகத்தில் வருகிறான், எனவே அவனுடைய சொந்த ஆத்துமாவே கறைபட்டு அசுத்தமா யுள்ளது. நல்லது எதுவுமேயில்லை! ஒருவர் மற்றவரை விடுவிக்க முடியாது, ஏனென்றால் அது எல்லாமே தவறானதாய் உள்ளது. நீங்கள் இங்கே கெட்டுப் போன ஒரு வாளி தண்ணீரையும், கெட்டுப் போன வேறொரு வாளி தண்ணீரையும் எடுத்து அவைகளை ஒன்றாக கலக்க முடியாது - அப்படி செய்வீர்களானால், நீங்கள் இன்னும் அதிகமாக கெட்டுப் போன தண்ணீரையே பெற்றுக் கொள்வீர்கள். அதற்கு எந்த சுத்திகரிப்பும் கிடையாது. 4556.ஆனால் தேவனோ மனிதனை இரட்சிக்க முடிவு செய்தார். 'அவரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.' நீங்கள் பாவத்திற்கான தண்டனையில் தான் பிறந்திருக்கிறீர்கள், பாவத்திற்கான தண்டனை மரணமாகும். பாவமே மரணமாயுள்ளது. அதற்கான தண்டனை மிகப்பெரியதாக இருந்தது, நம்மில்யாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை, எனவே இந்த அபராதத்தைச் செலுத்தக் கூடிய யாரோ ஒருவர் அங்கே இருக்க வேண்டியிருந்தது. 57.இந்தக் காலையில், இந்த அறையை விட்டு வெளியேற 100 பில்லியன் டாலர்கள் (1 பில்லியன் என்பது 100 கோடியாகும் - மொழிபெயர்ப்பாளர்.) அபராதம் என இருந்தால் என்னவாக இருக்கும்? நம்மில் யாருமே இந்த அறையை விட்டு வெளியேற முடியாது, ஏனென்றால் நம்மில் யாரிடமும் அவ்வளவு செல்வம் கிடையாது. ஆனால் அப்போது நம் எல்லாருக்கும் அபராதம் செலுத்த போதுமான பணத்தை கொண்டிருக்கும் ஒருவர் உள்ளே வருவாரானால்! 58.அதற்கு ஒருவர் தேவை. நம்மால் அதைச் செய்ய முடியாது. அதற்கு தகுதியுள்ள ஒருவர் தேவை. ஓ, நான் சிறிது நேரம் இங்கே நிறுத்தி விட்டு, திரும்பிச் சென்று ரூத் மற்றும் நகோமியைக் கொண்டு வந்து, எவ்வாறு இனத்தான் மீட்பர் அந்த இழந்து போன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றும், முதலாவது அவர் தகுதியானவராய் இருக்க வேண்டியிருந்தது என்றும், அவர் ஒரு இனத்தானாக இருக்க வேண்டியிருந்தது என்பதையும் காண்பிக்கக் கூடுமானால், நான் அவ்வாறு செய்ய எவ்வளவாய் விரும்புகிறேன். ஆகையால், ஆவியான யேகோவா தேவன் ஒரு மாம்ச ரூபத்தை (form) எடுத்துக் கொண்டதன் மூலமாக நமக்கு நெருங்கின இனத்தான் (ஓண்ய்ச்ர்ப்ந்ள்) ஆனார். அவர் நெருங்கின இனத்தான் ஆனார். அவர் அவ்வாறு இருக்க வேண்டி யிருந்தது. அப்படியானால் அவர் தகுதியானவராய் இருக்க வேண்டியிருந்தது. இம்மானுவேலின் ரத்தநாளத்திலிருந்து வழியும் இரத்தத்தால் நிறைந்த அந்த நீரூற்றை உற்பத்தி செய்கிறவர் அவர் தான். நம்முடைய அக்கிரமங்களை சுமந்து கொண்டவரும் அவர் ஒருவர் தான். 4659.நான் இங்கே எண்ணாகமத்தில் ஒரு அருமையான முன்னடையாளத்தைப் பெற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட என்னுடைய வேதவாக்கியங்களை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். எண்ணாகமத்தில், அதைக் குறித்த அழகான முன்னடையாளம் அங்கே உள்ளது, அது, ஓ, உங்களால் அதைக் காணக் கூடுமானால், அது முற்றிலும் அருமையாக உள்ளது. அதுதான் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பமாகும். இஸ்ரவேலர்கள் எப்படியாக அந்த சர்ப்பத்தினால் மரணத்திற்கேதுவாக கடிபட்டார்கள், மேலும் அங்கே எந்த பரிகாரமும் இல்லாதிருந்தது. பரிகாரம் அல்லது குணமாக்கும்படியான ஒரு மருத்துவரும் அங்கே அவர்கள் மத்தியில் இல்லாதிருந்தது. அவர்கள் மத்தியில் மருத்துவர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள், ஆனால் அந்த பாம்பு கடிக்கு எந்த மருத்துவரும் இல்லை. சற்று முன்பு நான் கூறினபடி, பாவத்தைக் குணமாக்கக் கூடிய எந்த மருத்துவர்களும் நம்மிடையே கிடையாது. அது மரணத்திற்கேதுவான ஒரு கடியாக இருக்கிறது, நாம் எல்லாருமே குற்றவாளிகள் தான், நாமெல்லாருமே அக்கிரமத்தில் உருவானோம். நாமெல்லாருமே குற்றவாளிகள் தான். ஆனால் தேவன் என்ன செய்தார்? அவர்களும் அப்போது குற்றவாளிகளாய் இருந்தனர், அப்போது மரணம் கிரயமாக செலுத்த வேண்டியதாயிருந்தது, மரணத்திற்கான அபராதமாக. ஆனால் ஒரு வெண்கல சர்ப்பத்தை நிமிர்த்தி, அதை ஒரு கம்பத்தில் போட்டு வைத்த மோசேயை தேவன் கொண்டிருந்தார், ஜனங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை, அவர்கள் செலுத்த வேண்டியதாயிருந்த எந்த பணமும் இல்லாதிருந்தது, எதுவுமே இல்லாதிருந்தது, அவர்கள் மனப்பாடமாக ஓத வேண்டியிருந்த எந்த மதக்கோட்பாடுகளும் இல்லாதிருந்தது, அவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டியதாயிருந்த எந்த சபைகளும் இல்லாதிருந்தது, - வெறுமனே 'நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்.' அது எவ்வளவு எளிமையாய் உள்ளது என்பதை காண்கிறீர்களா? நோக்கிப் பார்த்து, பிழைப்பாயாக! ஒரு சபையை சேர்ந்து கொள்ள வேண்டாம். எந்த உணர்ச்சியும் இல்லை, நீங்கள் ஒரு வினோதமான உணர்ச்சியை உணர வேண்டியதில்லை. அப்படியே நோக்கிப் பார்த்து, பிழைத்துக் கொள்! அவ்வளவு தான். அது மிகவும் எளிமையாயுள்ளது. 'உங்களால் பத்துக் கட்டளைகள் எல்லா வற்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடுமானால், நீங்கள் பிழைப்பீர்கள்' என்பதல்ல. 'நீங்கள் சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அறிந்திருந்தால்' என்பதல்ல. வெறுமனே, 'நோக்கிப் பார்த்து பிழைத்துக் கொள்'. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவு தான். அவரை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனும் பிழைத்தான். 4760.இயேசு இங்கே பூமியில் இருந்த போது, அவர் சொன்னார், இங்கே அவர் நிக்கோதேமுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார், அவர், 'சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட்டாக வேண்டும்' என்றார். எனவே கட்டாயமாக உயர்த்தப்பட வேண்டும்! ஏன்? அதே முறையில், அதே காரியத்திற்காக, அதே நோக்கத்திற்காக, அதே கிரியையை செய்வதற்காக (உயர்த்தப்பட வேண்டும்). அந்த சர்ப்பமானது இயேசுவை பிரதிநிதித்துவப்படுத்துவதை ஜனங்கள் காணும் போது, இது அநேக நேரங்களில் அவர்களுக்கு புரியாத புதிராயுள்ளது. இதில் சர்ப்பமானது அதிகமாக இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினது. அந்த சர்ப்பம் மரித்திருந்தது என்பதைக் கவனித்தீர்களா? அங்கே அதில் ஜீவனே இல்லாதிருந்தது. இயேசு மரித்தார். காயீனைப் போன்று, அவன் ஆபேலைக் கொன்ற போது, ஆபேல் தன்னுடைய பலியோடு கூட பலிபீடத்தின் மேல் மரித்தான். ஆபேல் தன்னுடைய பலியை செலுத்தி, தன்னுடைய பாவத்திற்காக அவனுடைய பலியைக் கொன்ற பிறகு, அப்போது அவன் தன்னுடைய பலியோடு கூட அதே பலிபீடத்தின் மேல் மரித்தான். மறுபடியும் பிறக்க வேண்டுமானால், அவர் மரித்தது போன்று, நீங்களும் உங்களுடைய பலியோடு கூட பலிபீடத்தின் மேல் மரித்தாக வேண்டும். அப்போது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள். அந்த சர்ப்பம் தனக்குள் எந்த ஜீவனையும் கொண்டிருக்கவில்லை. 4861.நீங்கள், 'அது ஏன் வெண்கலமாக இருந்தது?' என்று கேட்கலாம். வெண்கலம் நியாயத்தீர்ப்பை, தெய்வீக நியாயத் தீர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டில், பலிகள் சுட்டெரிக்கப்பட்ட இடத்திலிருந்த பலிபீடானது வெண்கலத்தினால் செய்யப்பட்டது என்பதைக் கவனித்தீர்களா? வெண்கலமானது நியாயத்தீர்ப்பபைக் குறித்துப் பேசுகிறது. எலியாவைப் போல, அவனுடைய நாட்களில், அவன் தனது ஜெபத்தை (முடித்த) பிறகு, மழை ஏதாவது வருகிறதா என்று பார்க்க வானத்தை நோக்கிப் பார்க்கும்படி போனான், அவன், 'வானம் வெண்கலத்தைப் போன்று காணப்படுகிறது' என்றான். அது என்னவாக இருந்தது? அது அவிசுவாசமுள்ள ஜனங்களின் மேலுள்ள தெய்வீக நியாயத்தீர்ப்பாகவும், தேவனை விட்டு விட்ட அவிசுவாசமுள்ள தேசத்தின் மேலுள்ள தெய்வீக நியாயத் தீர்ப்பாகவும் இருந்தது. அது தெய்வீக நியாயத்தீர்ப்பாக இருந்தது - அதுதான் வெண்கலம்! மேலும் சர்ப்பம் தாமே அதன் வடிவில், பாவம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டது என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தினது, சர்ப்பமானது ஏதேன் தோட்டத்தில் நியாயந்தீர்க்கப்பட்டது. மேலும் அவன், சர்ப்பமானது நியாயந்தீர்க்கப்பட்டது. 4962.நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும் போது, நீங்கள் அபராதத்தைக் காண்கிறீர்கள். ஒரே நபர், தேவன் தாமே மாம்சமானார். தேவன் பூமிக்கு வந்து, நம் எல்லாருடைய பாவத்தையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, நியாயத்தீர்ப்பும் சர்வவல்லமையுள்ள தேவனின் கோபமும் அவருடைய சரீரத்தின் மேல் ஊற்றப்பட்டது, அது அங்கே சிலுவையில் கிழிக்கப்பட்டது. அதுதான் உண்மையான நியாயத்தீர்ப்பு. அவர் தன்னந்தனியாக தேவனுடைய கோபத்தின் ஆலையை மிதித்தார். அவர் தனியாகவே சாலையில் நடந்து சென்றார். ஒரு தூதனுடைய உதவியோ, ஒரு மனிதனுடைய உதவியோ, அவருடைய சபையின் உதவியோ, அவருடைய தாயாரின் உதவியோ, அவருடைய சகோதரர்களின் உதவியோ, அவருடைய பிதாவின் உதவியோ எதுவுமின்றி அவர் தனியாகவே மரித்தார். அவர் தேவனாலும், மனிதனாலும், இயற்கையாலும் கைவிடப்பட்டார். இயற்கை கூட மரண வேளையில் நமக்கு உதவி செய்ய முடியாது என்பதை நமக்குக் காண்பிக்கும்படியாக அவர் தனியாகவே மரித்தார். அங்கே எந்த நண்பருமில்லை, எந்த பாதிரியாருமில்லை, எந்த போப்புமில்லை, எந்த மேய்ப்பருமில்லை. அதுதான் மரணம். ஆனால் நமக்காக அதை ஏற்றுக் கொண்ட ஒருவர் அங்கே இருந்தார். 5063.அந்த சர்ப்பத்தில் எந்த ஜீவனுமில்லை. அது முற்றிலுமாக கெட்டியானதாயிருந்தது. அதுதான் அபராதமா யிருந்தது. பூமி தாமே தன்னைக் குறித்து வெட்கப்படும் அளவுக்கு அவர் மரித்தார், நட்சத்திரங்கள் வெட்கப்படும் அளவுக்கு அவர் மரித்தார். சூரியன் பிரகாசிக்காமல் இருக்கும் அளவுக்கு அவர் வேதனை அனுபவித்தார், சந்திரன் தன்னுடைய வெளிச்சத்தை நிறுத்தும் அளவுக்கு அவர் வேதனை அனுபவித்தார். பூமியின் மூலப்பொருட்கள் கூட மிகவும் கருமை நிறமாக இருக்கும் அளவுக்கும், அது நடுஇரவாக இருக்கும் மட்டும் அந்தகாரமாய் இருக்கும் அளவுக்கு அவர் வேதனைப்பட்டார், உங்களால் அதை உணரக்கூடிய (அளவுக்கு) அதிக அந்தகாரமாக இருந்தது. அங்கே எதுவுமே இல்லாதிருந்தது, யாருமே அதைப் போன்று ஒருபோதும் வேதனை அனுபவித்ததே கிடையாது, அல்லது யாருமே அதைப் போன்று வேதனைப்படவே முடியாது. எந்த மனிதனும் அதனூடாகப் போகவே முடியாது. ஆனால் அவர் அந்த வேதனையை அனுபவித்தார். தேவன் நம்மெல்லாருடைய அக்கிரமங்களையும் அவர் மேல் சுமத்தி, அவருடைய நியாயத்தீர்ப்புகளை அவர் மேலேயே செலுத்தினார், அவர் எந்த உதவியும் இன்றி தன்னந்தனியாக தேவனுடைய கோபத்தின் ஆலையை மிதித்தார். அவருக்கு ஒத்தாசை செய்ய அங்கே எதுவுமேயில்லாதிருந்தது. தேவன் அபராதத்தை (அவர் மேல்) சுமத்தினார். எல்லாமே அந்த அபராதத்தின் கீழ் இருந்தன, அவருக்கு உதவி செய்யக் கூடியது எதுவுமேயில்லை, ஏனென்றால் நாம் எல்லாருமே குற்றவாளிகளாயிருக்கிறோம். வந்து அவருக்கு உதவி செய்யக் கூடிய பிரதான ஆசாரியன் யாருமில்லை. அவருக்கு உதவி செய்யக் கூடியது எதுவுமேயில்லாதிருந்தது, எந்த போப்போ, எந்த தூதனோ அவருக்கு உதவி செய்ய முடியவில்லை. எல்லாருமே பின்னால் நின்று அதைக் கவனித்தனர். உலக வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததி லேயே மிக முக்கியமான நேரம் அதுவாக இருந்தது. அவரில் ஒரு துளி ஜீவனும் மீதியாக இல்லாமல் போகும் அளவுக்கு அவர் மரித்து, வெண்கல சர்ப்பத்தைப் போலானார், அவர் அப்படியே சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பளிங்கான ஆபரணமாக இருந்தார். 51இப்பொழுது, இந்தப் பிறப்பை அணுகிக் கொண்டிருக்கையில், அங்கே அதற்கு ஒரு அணுகுமுறை இருக்கிறது. இந்தப் பிறப்பை அணுகுவதற்கு, நீங்கள் ஒரு நடைமுறையினூடாகக் கடந்து சென்றாக வேண்டும். ஜீவிக்கிற எதையும் போன்று, மீண்டுமாக ஜீவிக்கிற எதுவுமே முதலில் மரித்தாக வேண்டும். நீங்கள் உங்களுடைய அதே ஆவியை வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய அதே பழக்க வழக்கங்களை வைத்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய அதே எண்ணங்களை உடன் கொண்டிருக்க முடியாது. நீங்கள் மரித்தாக வேண்டும். அவர் மரித்தது போன்று நீங்களும் மரித்தாக வேண்டியிருக்கிறது! ஆபேல் தன்னுடைய ஆட்டுக் குட்டியோடு மரித்தது போன்று, நீங்களும் அவருடைய பலிபீடத்தின் மேல் மரித்தாக வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆட்டுக்குட்டியானவருடன் மரித்தாக வேண்டும். நீங்கள் மரித்தாக வேண்டும். அவருடைய எண்ணங்களுக்கு நீங்கள் பிறக்க வேண்டுமாயின், நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணங்களுக்கு மரித்து விடுங்கள். கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. நீங்கள் அவருடைய சிந்தனைகளையே சிந்தித்தாக வேண்டும். இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, நான் இதை எவ்வாறு கூற வேண்டும் என்று அறிந்துள்ளபடி, நான் இதை அவ்வளவு விவேகத்தோடு கூறட்டும். நீங்கள் அவருடைய எண்ணங்களையே சிந்தித்து விட்டு, உங்களால் எப்படி அவருடைய வார்த்தையை மறுதலிக்க முடியும்? அப்படி செய்து விட்டு, நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளீர்கள் என்று இன்னும் எவ்வாறு உரிமை கோர முடியும்? அந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே சற்று கேட்டுக் கொள்ளுங் கள். உங்களால் அதை எவ்வாறு செய்ய முடிகிறது? உங்களால் அவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மறுபடியும் பிறப்பீர்களானால், நீங்கள் அவருடைய எண்ணங்களைப் பெற்றிருப்பீர்கள். கிறிஸ்துவின் சிந்தை உங்களுக்குள் இருக்குமானால், நீங்கள் ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள். வேதாகமம் அதைத்தான் போதிக்கிறது. சகோதரர் யாராவது விரும்புவீர்களானால், நல்லது, நீங்கள் அந்த சிருஷ்டி என்பதை கண்டறிந்து, அகராதியில் சிருஷ்டி என்ற அந்த வார்த்தையை கவனிப்பீர்களானால், அங்கே சிருஷ்டி என்ற வார்த்தையானது, 'ஒரு புது சிருஷ்டி' என்று அர்த்தப்படுத்தப் பட்டுள்ளது அல்லது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுகொள்வீர்கள்; ஏனென்றால் நீங்கள் இங்கே பூமியில் இனச்சேர்கை விருப்பத்தினால் ஒரு சிருஷ்டியாக, ஒரு மனிதனாகப் பிறக்கிறீர்கள், மேலும் இப்பொழுதோ நீங்கள் ஆவியினால் பிறந்த ஒரு- புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த எண்ணங்கள் மரித்து விடுகின்றன. அவைகள் வெண்கல சர்ப்பத்தைப் போன்று பளிங்காக இருக்கும் அளவுக்கு அல்லது அவர் மரித்து விட்டார் என்று வானங்களும் பூமியும் மற்றும் யாவுமே சாட்சி பகர்ந்த நேரத்தில், அவர் மரித்தது போன்று நீங்கள் அவ்வளவாக மரித்து விடுகிறீர்கள். 5265.அவருடைய இரத்தமும் தண்ணீரும் கூட அவருடைய சரீரத்தில் வேறுபிரிந்து, அவர் அவ்வளவாய் மரித்துப் போகும் அளவுக்கு அவர் மரித்தார். உலகமானது தகர்ந்து போனது (nervous breakdown) என்று நான் கூறும் அளவுக்கு அவருடைய மரணமானது அவ்வளவு பயங்கர மாக இருந்தது. அது அசைக்கப்பட்டது, அந்த மலைகளி லிருந்து பாறைகள் கீழே விழும் அளவுக்கு அது நடுங்கியது. யார் அவ்விதமாக மரிக்க முடியும்? மரித்துக் கொண்டிருக்கிற எந்த போப்பும் அவ்விதம் மரிக்க மாட்டார்கள், மரித்துக் கொண்டிருக்கிற எந்த மேய்ப்பனும் அவ்விதம் மரித்திருக்க மாட்டார்கள். ஆனால் தேவன் மாம்சத்தில் சிலுவையின் மேல் மரித்த போது, தேவனுடைய அதே உரைக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு தான் கன்மலைகளும், மண்ணும், குச்சிகளும், தடிகளும், மரங்களும் பூமியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், நட்சத்திரங்களும், சந்திரனும் இருக்கின்றன என்றும் அறியும்படி செய்வதற்காக பூமியானது தகர்ந்து போனது (nervous breakdown), அவைகளின் சிருஷ்டிகர் மாம்சமானார் என்றும், பாவமானது அவர் மேல் ஊற்றப்பட்டது என்பதையும் அவருடைய அதே உரைக்கப் பட்ட வார்த்தை கண்டது. சந்திரன் தனது ஒளியை நிறுத்தும் அளவுக்கும், சூரியன் தனது ஒளியை நிறுத்தும் அளவுக்கும், பூமியானது அசைக்கப்பட்டு தகர்ந்து போகும் (nervous shaking) அளவுக்கும் தேவ கோபம் அவர் மேல் ஊற்றப்பட்டது, தகர்ந்து போனது. அது நமக்காக ஒரு வருங் காலத்தைக் கொண்டிருக்காவிடில், அது சுக்கு நூறாக வெடித்து சிதறியிருக்கும், யாவுமே அவ்வாறு ஆகியிருக்கும். 5366.இந்த பூமியினுடைய அவரின் மூலப்பொருட்கள், என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதை கவனித்துப் பார்த்து, அந்த நிலைக்கு அவைகளை குலுக்கி (அதிரச்) (shook) செய்யுமானால், அது எனக்கும் உங்களுக்கும் என்ன செய்ய வேண்டும்? தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் நோக்கிப் பார்க்கும் போது, அது நம்முடைய ஆத்துமாக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அதெல்லாமே உங்களுக்காகவும் எனக்காகவும் தான். அது நமக்கு என்ன செய்ய வேண்டும்? (அப்படியானால்) தொடர்ந்து பாவத்தில் இருப்பீர்களா? தேவன் அதை அனுமதிக்கவே மாட்டார். ஆனால் பாவங்களை விட்டு விலகும்படிக்கு, பாவத்திற்கு மரித்து விடுங்கள். பாவமானது அவருக்கு என்ன செய்தது என்பதை நீங்கள் காணவில்லையா? பாவமானது அவரைக் கொன்று போட்டது. அவர் பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார், அவர் உங்களுக்கும் எனக்கும் தேவனுடைய நீதியைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். எனவே தேவனுடைய நீதி நம்மிடம் வரும்போது, பாவமானது நம்முடைய சாவுக்குரிய ஜீவன்களில் மரித்து விடுகிறது. ஓ, உங்களுக்கு அது புரிகிறது என்று நம்புகிறேன். 5467.ஆம், மறுபடியும் பிறக்க வேண்டுமானால், நீங்கள் நிச்சயமாக மரணத்தின் செயல்பாடு (shook) வழியாக போயாக வேண்டும், ஒவ்வொன்றுமே அவ்விதம் செய்கிறது. நீங்கள் ஒரு சோள தானியத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த சோளமானது மறுபடியும் ஜீவிக்க வேண்டும் என்று எப்பொழுதாவது எதிர்பார்க்குமானால், அது முதலில் மரித்தாக வேண்டும். ஒரு கோதுமை தானியமும் தான் மீண்டும் ஜீவிக்க வேண்டும் என்று எப்பொழுதாவது எதிர்பார்க்குமானால், அது முற்றிலும் கூடாத காரியம்... அந்த சோளமோ, அந்தக் கோதுமையோ, அந்த மலரோ, அந்த மரமோ, அந்தப் புல்லோ, அந்தக் காய்கறியோ, மறுபடியும் ஜீவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொன்றும் முதலில் மரித்தாக வேண்டும். அப்படியானால் நீங்கள் எப்படி அதிலிருந்து தப்பிக்கப் போகிறீர்கள்? நீங்கள் முதலில் மரித்தாக வேண்டும். நீங்கள் மரித்தே ஆக வேண்டும். எவ்வாறு மரிப்பது? உங்களுக்கு நீங்களே மரிக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மரித்து விடுங்கள், அப்போதுதான் உங்களால் மறுபடியும் பிறக்க முடியும். நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் மரிக்கவில்லை என்றால், உங்களால் மறுபடியும் ஜீவிக்க முடியவே முடியாது. 5568.கவனியுங்கள், ஒவ்வொரு நாளும் ஏதோவொன்று மரிக்க வேண்டியிருக்கிறது என்றும் அப்போது தான் உங்களால் ஜீவிக்க முடியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது, நமது மத்தியில் இருக்கிற ஏழாம் நாள் ஆசரிப்புக்காரராகிய (Seventh-day Adventists) உங்களிடம் தான், அநேக ஜனங்கள், ' சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு அணிலையும் சுடுவதில்லை. நான் ஒரமானையோ அல்லது ஒரு முயலையோ, மீனையோ கொல்வதில்லை, ஏனென்றால் நாம் உயிரினங்களைக் கொல்ல வேண்டும் என்று நான் நம்புவதில்லை' என்று கூறலாம். என்னுடைய சகோதரனே, நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளும் மற்றும் காரியங்களும் கூட உயிருள்ளது என்று உனக்குத் தெரியுமா? நீங்கள் அதைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜீவியத்தில் உங்களால் உயிர்வாழக்கூடிய ஒரே வழி என்னவென்றால், ஏதோவொன்று மரிக்க வேண்டியிருக்கிறது, அப்போது அதனுடைய மரித்த ஜீவனின் மூலமாக உங்களால் உயிர்வாழ முடியும். இப்பொழுது, ஏதோவொன்று மரிக்க வேண்டியிருந்து, அப்பொழுது தான் நிலையற்ற விதமாக உயிர்வாழும்படிக்கு இங்கே பூமியின் மேலுள்ள அதனுடைய சாவுக்குரிய ஜீவனின் மூலமாக உங்களால் உயிர்வாழ முடியும் என்று இருக்குமானால், ஏதோவொன்று மரிக்க வேண்டாமா? அப்பொழுது தானே அதனுடைய ஜீவனின் மூலமாக உங்களால் நித்தியமாக ஜீவிக்க முடியும்? அந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அவ்வாறு மரித்தவர் கிறிஸ்து தான், ஏனென்றால் முடிவற்ற ஜீவனைக் கொண்டவர் (immortality) வேறு எவரும் இல்லை. குமாரன் மட்டுமே முடிவற்ற ஜீவனை (immortality) உடையவரா யிருக்கிறார். வெறுமனே அவரை ஏற்றுக்கொள்வதன் மூலமாக அவர் தம்மைத்தாமே உங்களுக்குக் கொடுக்கிறார். இப்பொழுது, அது நிச்சயம் மரித்தாக வேண்டும். 5669.இப்பொழுது, அது மரித்தாக வேண்டும். இப்பொழுது, இந்தப் புது வருடத்தில், ஒரு புதிய பக்கத்தைத் திருப்புவதாக அதற்கு அர்த்தமல்ல. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நான் இங்கே நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறேன். நான் இந்த சபையின் ஒரு அங்கத்தினனாக இருந்து வருகிறேன். இந்தப் புதிய வருடத்தில், ஒரு புதிய பக்கத்திற்குத் திருப்பி, புதிதாகத் தொடங்கப் போகிறேன்' என்று கூறலாம். அதற்கு அது அர்த்தமல்ல. 'ஒரு புதிய பக்கத்தைத் திருப்புவது' அல்ல, ஆனால் உண்மையில் மரித்து, மறுபடியும் பிறப்பதாகும். புரிகிறதா? நீங்கள் அவருடைய சமூகத்தில் நிற்கும்போது, நீங்கள் மிகவும் குற்ற உணர்வு கொண்டாக வேண்டும், நீங்கள் மெதோடிஸ்டுகளின் வழியில் போனாலும் அல்லது பாப்டிஸ்டு களின் வழியில் போனாலும், அல்லது நீங்கள் எந்த வழியில் போனாலும், நீங்கள் அதிக குற்ற உணர்வைக் கொண்டிருக்க வேண்டும், நீங்கள்... என்ற அளவுக்கு மிகவும் குற்ற உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அது உங்களைக் கொன்று போடும். அது சரியே. அது-அதுஉங்களைக் கொன்று போடும். அப்போது உங்களுடைய உலகப்பிரகார மான ஜீவியம் சரியாக அங்கேயே மரித்து விடும். உங்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கை சரியாக அங்கேயே மரித்துப்போகும் அளவுக்கு நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தில் உங்களை நீங்களே மிகவும் குற்றவாளிகளாக எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பாவ கேள்வி உங்களுக்கு முடிந்து விடுகிறது. நீங்கள் அவ்விதமாகக் காணப்படும்போது, நீங்கள் பிழைப்பது நிச்சயம், ஏனென்றால் நீங்கள் மரித்து விடுகிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிழைக்கக் கூடிய ஒரே வழி என்னவென்றால்... ஆக இருப்பது தான், முதலாவது மரித்து விடுங்கள், அப்போதுதான் நீங்கள் மறுபடியும் பிழைக்க முடியும். 70.இப்பொழுது, நான் எதற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறதா?, உங்களுக்குப் புரியவில்லையா? பிறப்பு என்றால், புதிய பிறப்பு என்றால் என்ன என்று. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமானால், முதலாவது நீங்கள் மரிக்க வேண்டும். நீங்கள் இன்னும் உலகத்தின் காரியங்களை உங்களுக்குள் பெற்றிருந்தால், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல. நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதாக உரிமை கோரிக்கொண்டு, இன்னும் உங்கள் மேல் உலகத்தின் காரியங்களை எவ்வாறு பற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? புரிகிறதா? உங்களால் எவ்வாறு அதைச் செய்ய முடியும்? 5771.அன்றொரு நாள், வாலிப கிறிஸ்தவன், ஒரு கூட்டம் ஜனங்கள்... அவர்கள் (கிறிஸ்தவர்கள்) அல்ல என்று நான் சொல்லவில்லை. ஆனால் சில காட்சிகளைப் பார்க்கும் போது, கிறிஸ்தவ பெண்களும், கிறிஸ்தவ மனிதர்களும், அவர்கள் எல்லாரும் அன்புக்குரியவர்கள் தான், அவர்கள் ஒருவர் மற்றவர்களை சுற்றி இருந்து கொண்டு, குளியல் உடைகளை உடுத்துக்கொண்டு, நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? அது அப்படியே... அவர்கள், 'அது உண்மையான அன்பு' என்று கூறினார்கள். அது மிகவும் அருவருப்பான அசுத்தம்! அது அன்பு அல்ல. அன்பு என்பது அதிலிருந்து வித்தியாசமாக வெளிப்படுத்தப்படுகிறது. 5872.நம்முடைய ஆத்துமாக்கள் தேவனுடைய நியாயத் தீர்ப்பாகிய அவருடைய வெண்கல பலிபீடத்தின் மேல் விசுவாசத்தினாலே வைக்கப்படும் போது, நம்முடைய பலியானது பட்சித்துப் போடப்படுகிறது. இப்பொழுது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எலியா, அந்த வெண்கல வானங்களின் கீழே, பலிபீடத்தின் மேல் தேவனுடைய பலியை வைத்தான், அப்போது அந்த பலியானது பட்சித்துப் போடப்பட்டது. பாகாலினால் தன்னுடைய பலியை பட்சித்துப் போட முடியவில்லை. நான் இதைக் கூற விரும்பவில்லை, ஆனால் நான் இதை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் ஒரு சபைக்குப் போய், அவர்களுடைய மதக்கோட்பாடுகளையும் அவர்களுடைய ஞானஸ்நான சடங்குகளையும் ஏற்றுக்கொண்டு, அந்த பலியை அங்கே அதன்மேல் வைத்திருப்பதாக உங்களுக்கு நீங்களே எண்ணிக்கொள்ளும் போது, நீங்கள் எழுந்து நடுக்கம் கொள்ளவோ, அந்நிய பாஷைகளில் பேசவோ, தரை எங்கும் ஓடவோ செய்யலாம், அல்லது நீங்கள் எழுந்து அழுது கொண்டிருக்கலாம். ஆனால், அந்த பலியானது தேவனாலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமானால், அது பட்சித்துப் போடப்பட்டு விட்டது, அப்பொழுது உலகமானது உங்களுக்கு மரித்ததாக இருக்கிறது. நீங்கள் போய் விட்டீர்கள், நாம் நமக்கு நாமே மரித்து, அடக்கம் பண்ணப்பட்டிருப்பதாக (buried) எண்ணிக் கொள்கிறோம். நாம் மரித்து விட்டோம்... நாம் கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டு விட்டோம். கிறிஸ்து வுக்குள் மறைக்கப்பட்டிருத்தல்! அப்படியில்லாவிட்டால், அப்படியானால் - நாம் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்ட பிறகு, நாம் பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். 5973.நான் இப்பொழுது என்ன குறிப்பிடுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் மரித்து விடுகிறீர்கள். நம்முடைய ஆத்துமாக்கள் அவருடைய தெய்வீக நியாயத்தீர்ப்பின் மேல் வைக்கப்படுகிறது. அதுதான் வெண்கலமாக உள்ளது. நம்முடைய ஆத்துமாக்கள் ஒரு தெய்வீக நியாயத்தீர்ப்பி னுடைய பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் போது, அந்த தண்டனை என்னவாக இருந்தது? அது மரணமாக இருந்தது. நீங்கள் உங்களைத்தானே, பாவியின் மேல் மரணத்தை அறிவித்திருந்த தேவனுடைய பலிபீடத்தின் மேல் வைக்கப் பட்டு, அந்த பலியை தேவன் ஏற்றுக்கொண்டிருப்பாரானால், அப்போது, நீங்கள் எப்படி அங்கிருந்து உயிரடைந்து (raise), பாவத்தில் ஜீவிக்க முடியும்? இப்பொழுது அது தெளிவாகி விட்டதா? நீங்கள் மரித்து விடுகிறீர்கள்! நீங்கள் உண்மையில் பட்சித்துப் போடப்பட்டு, நீங்கள் செயலற்று உணர்விழந்து போய் விட்டீர்கள். நீங்கள் உள்ளே நின்று கொண்டிருக்கும் வெறும் இந்த சாயலைத் தவிர உங்களிடம் வேறு எதுவும் மீதியாக விடப்படவில்லை, அது வெண்கல சர்ப்பத்தைப் போன்று இருக்கிறது, அவர்கள் கிறிஸ்துவை மரணமடைந்தவ ராகவும், சிலுவையை விட்டு உணர்ச்சியற்றவராகவும் எடுத்த போது, கிறிஸ்து இருந்தது போல அது இருக்கிறது. நீங்கள் மரித்து விட்டீர்கள்! காரணம் என்ன? நீங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பலிபீடத்தின் மேல் இருக்கிறீர்கள். அவருடைய நியாயத்தீர்ப்பு என்னவாக இருக்கிறது? நியாயாதிபதி அவருடைய தீர்ப்பை வழங்கின போது, அவருடைய தண்டனை தீர்ப்பு என்னவாக இருக்கிறது? அது மரணமாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய ஆத்துமாவை அவருடைய நியாயத்தீர்ப்பின் பலிபீடத்தின் மேல் வைக்கும் போது, அது உங்களுக்கு மரணமாக இருக்கிறது. இப்பொழுது அது உங்களுக்குப் புரிகிறதா? 6074.ஓ, நீங்கள் அங்கிருந்து எழுந்து, எதையாவது செய்யலாம், நீங்கள் ஆவியில் நடனமாடலாம், நீங்கள் ஒரு - யாரும் அழுவது போன்று அழலாம், நீங்கள் தரையில் மேலும் கீழும் ஓடலாம், நீங்கள் ஒவ்வொரு சபையையும் சேர்ந்து கொள்ளலாம், நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் செய்யலாம், (நான் இப்பொழுது பெந்தெகோஸ்தேயினரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்), நீங்கள் வெளியே திரும்பிச் சென்று, ஒரு மனிதனுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தலாம், ஒரு மனிதனுடைய வீட்டை உடைத்துப் போடலாம், ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் அவ்விதம் செய்யலாம். நீங்கள் சரியாக திரும்பிப் போய் விடுவீர்கள், சரியானதையும் காரியங்களையும் செய்யும்படியாக வார்த்தை உங்களிடம் எவ்வளவு தான் வந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். ஸ்திரீகளே, நீங்கள் ஒருபோதும் உங்களுடைய தலைமயிரை வளர விடவே மாட்டீர்கள், அல்லது அதை. நீங்கள் ஒருக்காலும் சரியான விதமாக உடையுடுத்தவே மாட்டீர்கள். நீங்கள் இன்னும் சரியாக உலகத்தைப் போன்றே இருப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் இன்னும் உலகத்திற்கு மரிக்கவில்லை, நீங்கள் அதனோடு வாழ்ந்து வருகிறீர்கள். 75.மனிதர்களாகிய உங்களில் சிலர் குடிப்பதையோ, புகைபிடிப்பதையோ ஒருபோதும் விடவே மாட்டீர்கள். நீங்கள் ஒழுக்கக்கேடாக உடையுடுத்துகிற மிக மோசமான ஸ்திரீகளை நீங்கள் தெருவில் பார்க்கும் போது, அவர்களைப் பார்த்து இச்சிப்பதை ஒருபோதும் விட்டு விடவே மாட்டீர்கள், உங்களுடைய முதுகைத் திருப்புவதற்குப் பதிலாக, கூடவே நடந்து போகிறீர்கள். நீங்கள் இன்னும் அதேவிதமாகவே தொடர்ந்து இச்சிப்பீர்கள். அதற்குக் காரணம் என்ன? நீங்கள் இன்னும் உலகத்தோடு ஜீவிக்கிறீர்கள். ஆனால் அந்த பலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் போது, நீங்கள் மரித்து விட்டீர்கள் . அது சரியே . நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று கேட்கிறதா? நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறதா? 616.இப்பொழுது, உங்களுடைய ஆத்துமா அந்த தேவனுடைய வெண்கல நியாயத்தீர்ப்பின் பலிபீடத்தின் மேல் வைக்கப்பட்டு விட்டது, அப்படியானால் தேவன் இந்த பலியை (sac-) ஏற்றுக் கொள்கிறார்... இப்பொழுது, நீங்கள் இன்னும் அதை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்பதை அது காண்பிக்கிறது, அது... நீங்கள் இன்னும் இந்த உலகத்திலேயே ஜீவித்துக் கொண்டிருப்பீர்களானால், தேவன் ஒருக்காலும் இதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது, ஜனங்களா கிய நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எப்படியாக அதிக காலம் காத்திருக்க வேண்டும், உங்களுக்குத் தேவையானது இதோ இருக்கிறது. தேவன் அந்தப் பலியை ஏற்றுக்கொள்ளும் மட்டுமாக, அது அங்கேயுள்ள அவருடைய நியாயத்தீர்ப்புகளின் மேல் வைக்கப்படும் மட்டுமாக, அவருடைய நியாயத்தீர்ப்பானது உண்மையில் உங்களுடைய புலன்களை கொன்று போடும் மட்டுமாக! நீங்கள் நிச்சயமாக, 'நல்லது, நான் ஒரு புதிய பக்கத்தைத்திருப்பப் போகிறேன்' என்று கூறலாம். அதுவல்ல அது. 'நல்லது, நான் வழக்கமாக புகைப்பிடிக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் புகைப்பிடிப்பதை விடப்போகிறேன்.' அது இன்னுமாக அதுவல்ல. தேவன் தம்முடைய வெண்கல பலிபீடத்தின் மேலுள்ள அந்த பலியை ஏற்றுக்கொள்ளும் மட்டுமாக, அவருடைய பலிபீடமானது நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பு என்னவாக இருக்கிறது? மரணம். அதுதான் தண்டனையாக இருக்கிறது. 77.'பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்,' அதில் எஞ்சியிருப்பது அதுதான். நீங்கள் என்ன செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. 78.இயேசு, 'அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து,'கர்த்தாவே, நான் இதைச் செய்யவில்லையா, நான் அதைச் செய்யவில்லையா?' என்பார்கள். அதற்கு அவர், 'அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று சொல்லுவார்' என்றார். புரிகிறதா? 6279.அந்தப்பலியானது அக்கினியின் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது அவ்விதமாக மேலே போய், புகையும் மேலே போகும் போது, நீங்கள் உன்னதங்களுக்குள் உங்கள் பலியோடு கூட எழும்புகிறீர்கள், அப்போது நீங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து முத்திரை போடப்படுகிறீர்கள். நம்முடைய ஆத்துமாவோ அவருடைய பலிபீடத்தின் மேல் இருக்கிறது. 80.அப்படியானால் நீங்கள் என்ன செய்தீர்கள், நீங்கள் மரித்து விட்ட பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அதன்பிறகு நீங்கள் புதிதாக கர்ப்பந்தரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் புதிதாக கர்ப்பந்தரிக்கப்பட்டு விடுகிறீர்கள். நீங்கள் முதலில் அக்கிரமத்தில் கர்ப்பந்தரிக்கப்பட்டீர்கள். இப்பொழுதோ நீங்கள் புதிதான ஏதோவொன்றுக்குள் கர்ப்பந்தரிக்கப்படுகிறீர்கள். அது என்ன? அது ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது. ஆமென். ஓ, அது இப்பொழுது இதை மாற்றி விடுகிறது, இல்லையா? இப்பொழுது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்த பிறகு, நாம் போராட்டத்தினூடாக இருக்கிறோம். இப்பொழுது என்ன சம்பவிக்கிறது? நீங்கள் ஜீவனுள்ள வார்த்தையில் புதிதாக கர்ப்பந்தரிக்கப்படுகிறீர்கள். அது என்னவாக இருக்கிறது? வார்த்தையானது உங்களுக்குள் ஜீவனாக ஆகிவிடுகிறது. நீங்கள் காரியங்களை வித்தியாசமாக காணத் தொடங்குகிறீர்கள். ஒருகாலத்தில் உங்களால் அதை எங்கே காண முடியாமல் இருந்ததோ, இப்பொழுது நீங்கள் அதைக் காண்கிறீர்கள். இப்பொழுது ஏதோவொன்று வித்தியாசமாகி விடுகிறது. அது எல்லா வேதவாக்கியங்களையும் ஒன்றாக இணைய செய்து விடுகிறது. அது எல்லாவற்றையும் அப்படியே சரியாக அழகுபட பொருத்தி விடுகிறது. அப்படியானால், இப்பொழுது-இப்பொழுதுஏதோவொன்று சம்பவிக்கத் தொடங்குகிறது. இப்பொழுது, நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணங்களுக்கு மரித்து, இப்பொழுது நீங்கள் கர்ப்பந்தரிக்கப்பட்டு விட்டீர்கள், ஏனென்றால் நாம் வார்த்தையாகிய தண்ணீரின் மூலமாக கழுவப்பட்டு விடுகிறோம். அது சரிதானா? 6381.ஒரு குழந்தை பிறந்தவுடனே நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? அதைக் கழுவி விடுவீர்கள். அது சரிதானே? ஒரு மனிதன் தனக்குத்தானே மரித்து, அவன் தேவனால் பிறந்தவுடனே, அவன் வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்படுகிறான். ஆமென். அது, 'இயேசுவின் நாமம்' என்று கூறுமானால், நீங்களும் 'இயேசுவின் நாமம்' என்று கூறுவீர்கள்; அது, 'நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்' என்று கூறுமானால், நீங்களும் அதே காரியத்தைக் கூறுகிறீர்கள். தேவன் எப்போதும் எதைக் கூறினாலும், நீங்கள் அந்த வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்படுகிறீர்கள். ஆமென். 82.இப்பொழுது, நீங்கள் ஜீவனுக்காக ஆயத்தமாயிருக்கி றீர்கள். நீங்கள்... க்கு ஆயத்தமாயிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் துவங்குகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் புதிதாகப் பிறந்து, தேவனுடைய குடும்பத்தில் ஒரு புதிய பெற்றோரோடு பிறக்கிறீர்கள். ஆம், ஐயா. உங்களுடைய உபாத்தியாயர்கள் (பயிற்சி ஆசான்கள்) (tutors) வழக்கமாக... இப்பொழுது உங்களுக்கு உபாத்தியாயர்கள் உண்டு, அதுதான் இப்பொழுது இருக்கிறது, உங்களுக்கு ஒரு புதிய பெற்றோர்கள் இருக்கிறார்கள். பெற்றோரைக் கொண்டிராமல் உங்களால் பிறக்க முடியாது. எனவே நீங்கள் ஒரு சபையின் சகோதரத்துவத்தில் பிறப்பீர்களானால், நீங்கள் அதைத்தான் பெற்றிருப்பீர்கள். நீங்கள் ஒரு மதக்கோட்பாட்டில் பிறந்திருப்பீர்களானால், அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தேவனில் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் அவருடைய வார்த்தையில் கர்ப்பந்தரிக்கப்படுவீர்களானால், உங்களுக்கு ஒரு புதிய பெற்றோர் உண்டு, அதுதான் தேவன், அவர் உங்களோடு, உங்கள் மத்தியில் தம்முடைய வார்த்தையை அறியச் செய்ய ஆயத்தமாகிறார், உங்கள் வழியாக அதைப் பேசுகிறார். ஓ, ஒரு புதிய பெற்றோர், அந்த பெற்றோர் தேவனாக இருக்கிறார். இப்பொழுது தாம் ஏற்கனவே உரைத்திருந்த தம்முடைய வார்த்தையை எடுத்து, அதை உங்களுக்குள் வைத்து, அதை ஜீவனுக்கு வரும்படி செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார், பாருங்கள்? இப்பொழுது நீங்கள் உங்களுடைய பயிற்சியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது பயிற்சிக்குள், சிறு பிள்ளைக்குரிய பயிற்சிக்குள் போக ஆயத்தமாகிறீர்கள். அதுதான் கடினமான பாகமாகும், நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, வார்த்தையானது உங்களைச் சுற்றிலும் வெட்டி, உங்களுக்கு வேறு ஏதோவொன்றைக் காண்பிக்கும். 'ஏன்... அவர்கள் அதை விசுவாசிக்கிறார்களே.' அவர்கள் என்ன விசுவாசித்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதோ தேவன் கூறினது இருக்கிறது! நீங்கள் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் சரியாகிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் நேராகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு புதிய பெற்றோர் இருக்கிறார். 6483.எனவே, நீங்கள் சரியாக மறுபடியும் பிறந்து, ஒரு புதிய பெற்றோர் உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஒரு புதிய சுபாவத்தைப் பெற்றிருப்பீர்கள். பழைய சுபாவம் மரித்து விட்டது, நீங்கள் ஒரு புதிய சுபாவத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் ஒருகாலத்தில் ஒரு வழியில் போய்க் கொண்டிருந்தீர்கள், இப்பொழுதோ நீங்கள் வேறொரு வழியில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருகாலத்தில் இந்தவழியில் கீழாக போய்க் கொண்டிருந்தீர்கள், இப்பொழுதோ நீங்கள் இந்த வழியில் மேல்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது உங்களுடைய நேசம் பரத்திலுள்ள காரியங்களின் மேல் வைக்கப்படுகிறது. ஒரு புதிய நேசம்! அதற்கு மேலும் உலகத்தின் காரியங்களை நீங்கள் நேசிக்க மாட்டீர்கள், தேவனைக் குறித்த உங்களுடைய நேசம். அப்பொழுது மனிதன் என்ன கூறினாலும், நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் எப்படியாக உங்களைப் பார்த்து, நகைத்து, நீங்கள் 'பழைய மாடல்' என்று கூறலாம், அல்லது அதைப் போன்று எதையும் கூறலாம், நீங்கள் கவலைப்படவே மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் பரத்திலிருந்து பிறந்திருக்கிறீர்கள், உங்களுடைய நேசங்கள் பரத்திலுள்ள காரியங்கள் மேல் வைக்கப்படுகிறது-வைக்கப்படுகிறது. தேவன் உங்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை, நீங்களும் அவரைக் குறித்து வெட்கப்படுவதில்லை. அது சரியே. எனவே நீங்கள்... சரியாக இங்கேயுள்ள எபிரெயர் 11வது அதிகாரத்தை வாசியுங்கள். நான் அதை எழுதி வைத்திருக்கிறேன். அந்நாளில் ஜனங்கள் எப்படியாக இருந்தனர் என்று. அவர்கள் எப்படியாக செம்மறியாட்டுத் தோல்களைப் போர்த்துக் கொண்டு திரிந்து, வனாந்தரங்களிலே இருந்தார்கள், மேலும் குறைவையும் (மிக வறுமையையும் - destitute) மற்ற ஒவ்வொன்றையும் அனுபவித்தார்கள், உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்க வில்லை. பாருங்கள்? அதை வாசித்துப் பாருங்கள், அது உங்களுக்கு நன்றாக இருக்கும். ஜனங்களுடைய சுபாவம் மாறின போது, என்ன நடக்கிறது என்பதை உங்களால் அங்கே காண முடியும். 6584.இப்பொழுது, அப்படியானால், சகோதரன் பிரன்ஹாமே, நீர் எவ்விதமான ஒரு சுபாவத்தைப் பெற்றிருக்கிறீர்? அவருடைய சுபாவத்தை. நான் என்னுடைய தகப்பனாரின் சுபாவத்தைக் கொண்டிருந்தால், என்னுடைய அப்பா செய்த காரியங்களையே செய்வேன். ஆனால் இப்பொழுதோ நான் மறுபடியும் பிறந்து விட்டேன், அது என்னுடைய தகப்பனார் யார் என்பதைப் பொறுத்தது. நீங்கள் வெறுமனே சபையில் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் ஒரு சபை தகப்பாரை பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் விரும்பினால் அவரை, 'அப்பா, (ஃபாதர்)' என்று அழைக்கலாம். நீங்கள் விரும்புகிற எதுவாகவும் அவரை அழைக்கலாம், ஏனென்றால் அவர் தான் உங்கள் தகப்பன். ஆனால் உங்கள் பிதா தேவனாக இருந்து, நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருப்பீர்களானால், தேவனுடைய சம்பந்தப்பட்ட அந்தக் காரியங்களையே நீங்கள் தேடுவீர்கள். அது சரியே. அப்போது நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறீர்கள். உங்களுடைய சுபாவம் தேவனுடைய சுபாவமாக இருக்கிறது. அப்போது, சிலர், ஓ, நீங்கள் அவர்கள் கூறுவதைக் கேட்கலாம், அவர்களில் சிலர், 'ஓ, அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டன என்று எங்கள் சபை நம்புகிறது' என்று கூறலாம். தேவனுடைய அதே சுபாவம் உங்களுக்குள் இருக்கும் போது, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று உங்களால் எப்படி நம்ப முடியும்? அவர் முழுவதும் அற்புதமாக இருக்கும் போது? அவருடைய சுபாவமே அற்புதமாக உள்ளது, அவருடைய இயற்கையான பண்பே அற்புதமாக உள்ளது, அவருடைய முழுவதும் அற்புதமாகவே இருக்கிறார். அப்படியானால் நீங்களும் அற்புதத்தைத் தவிர வேறு எதாகவும் எப்படி இருக்க முடியும்? உங்களுடைய புதிய பிறப்பே அற்புதமாக உள்ளது. உங்களுடைய புதிய ஜீவனும் அற்புதமாகவே இருக்கிறது. உங்கள் சுபாவமும் கூட ஒரு அற்புதமாகவே உள்ளது. நீங்கள் திரும்பிப் பார்த்து, 'அந்தக் காரியங்கள் மரித்து விட்டன. இதுவே சரியாக உள்ளது' என்று எப்படியாக கூற முடியும். பாருங்கள்? நீங்கள் ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள், புதிய சிருஷ்டி. நிச்சயமாக. 6685.[ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] அந்தப்பறவை குஞ்சுகள் பிறந்த போது, அவைகளில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே கோழிக்குஞ்சுகளாக இருந்தன. அந்த ஒன்று ஒரு கழுகாக இருந்தது. அது ஒரு வினோதமான சிறு பறவையாக இருந்தது. அது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது, ஆனால், நீங்கள் பாருங்கள், அது வேறொரு வகை இனத்தில் பிறந்திருந்தது. அந்த ஆண் உயிரணுவும் (sperm) முட்டையும் வித்தியாசமாக இருந்தது, அது ஒரு வித்தியாசமான பறவையை உண்டாக்கினது. நிச்சயமாகவே அது விசித்திரமான பறவையாக தோற்றமளித்தது, அது மற்ற பறவைகளுக்கு வேடிக்கையாக நடந்து கொண்டது, ஆனால் அதுவோ - அது இயல்பாக மத்திரமே நடந்து கொண்டிருந்தது, ஏனென்றால் அதுவால் அதைக் காட்டிலும் மேலாக நடந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அது- அது ஒரு கழுகாக இருந்தது. அதனுடைய - அதனுடைய சுபாவமே கழுகாக இருந்தது, எனவே அதனால் இருக்க முடிந்தது எல்லாம் அவ்வளவு தான், அது ஒரு கழுகாக இருந்தது. ஆனால் வெளியே இந்த ஸ்தாபனங்களில் அவர்களில் அநேகர் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையில் கழுகுகள் தான், ஆனால் அவர்கள் அந்த சேற்றிலும் உலகத்தின் காரியங்களிலும் சோம்பித்திரிவதைக் காணும் போது, அது சரியாகத் தோன்றவில்லை. பாருங்கள், அதுதான் அவர்களுடைய அலுவல், போய் அவர்களின் பிறகே சென்று, அவர்களைக் கொண்டு வாருங்கள். 6786.ஒருநாள் வயதான தாய் கழுகு அருகாமையில் (பறந்து) வந்தது, அதற்கு மேலும் அந்தப் பெட்டைக் கோழியால் அந்தக் கழுகுக் குஞ்சை தரையிலேயே வைத்திருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் எவ்வளவு தான் கொக்கரித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவள் எவ்வளவு தான் நன்றாக, 'தேனே, இங்கே வா. நான் இங்கே ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தேன், வா' என்று கூறினாலும் அது காரியமில்லை. ஓ, என்னே! அதனுடைய (கழுகுக் குஞ்சுடைய) நேசம் பரத்திலுள்ள காரியங்களின் மேலேயே இருந்தது, அது அதைச் சந்திக்கவே போனது. அதற்கு மேலும் அதற்கு ஸ்தாபனங்கள் எதுவும் கிடையாது. அந்தக் கழுகுக் குஞ்சை அதனிடமிருந்து வெளியே அழைக்க முடியாது. 87.தேவனால் பிறந்த ஒரு மனிதனை, அந்த அழுகிப்போன பாவ குழப்பத்திற்குள் திரும்பவும் அழைக்க இனிமேல் உங்களால் முடியாது. அவன் மரித்தவனா யிருக்கிறான், அவன் மறுபடியும் பிறந்திருக்கிறான். அவன் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறான். அவன் கழுகின் சுபாவத்தைப் பெற்றிருக்கிறான். அவன் ஆகாயத்தை அடைந்து, உயரப் பறக்க வேண்டியவனாயிருக்கிறான். அவன் தன்னுடைய தாய், தன்னுடைய பெற்றோர் இருக்கும் இடமாகிய அங்கே மேலே எழும்பிச் செல்ல வேண்டிய வனாயிருக்கிறான். 88.அந்தவிதமாகத்தான் நீங்கள்... விசுவாசிக்கிற ஒரு மனிதன், 'ஓ, வந்து எங்கள் சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது, அது மதவெறித்தனம். நாள்...' என்று தூண்டுகிறான். 6889.இப்பொழுது, அந்தச் சிறு கழுகு ஒருக்கால் அங்கே வெளியே நின்று கொண்டிருந்து, அந்தத்தாய் சத்தமாக கூப்பிடுவதைக் கேட்டிருக்குமானால், அது சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்து, 'அங்கேயிருப்பது என்ன?' என்று கூறியிருக்கலாம். இங்கேயும், ஒருக்கால் அவள் இந்தச் சிறிய கழுகிடம், 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்ற இதைப் போன்ற ஏதோ வொன்றை சத்தமிட்டிருக்கலாம். 90.இந்தத் தாய் (கோழியோ), 'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, கிளக், கிளக், கிளக், கிளக். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது! அது மதவெறித்தனம்!' என்றது. ஓ, என்னே! 91.ஏன், இனிமேல் உன்னால் அவனைப் பிடித்து வைத்திருக்க முடியாது. அவன், 'அம்மா, நான் எப்படி அங்கே மேலே வருவது?' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 92.'தேனே, அப்படியே உன்னுடைய செட்டைகளை அடித்துப் பற. நீ செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான். நீ ஒரு கழுகு. அப்படியே விசுவாசத்தைக் கொண்டு நட.' 'அம்மா, அது எப்படி இருக்கப் போகிறது?' 93.'எனக்குத் தெரியாது, அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிரு.' இதோ அது வருகிறது. அது முதலாவது சில தடவைகள் தன்னுடைய சிறகுகளை அடித்த போது, அது ஒரு வேலிக்கம்பத்தின் மேல் வந்து அமர்ந்தது. அது எப்படியும் அவ்வளவு உயரத்துக்கு வந்து விட்டது. அவள், 'அப்படியே வேகமாக வா, நான் உன்னைப் பிடித்துக் கொள்வேன்' என்றாள். அதுதான் அது. 6994.ஒரு புதிய சுபாவம், ஒரு புதிய ஜீவன், ஒரு புது சிருஷ்டி, அது உங்களுடைய பிதாவின் சுபாவமாக உள்ளது. அப்போது அவர் கூறியிருக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசித்து, அதை நேசிப்பீர்கள். ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும், இந்த வார்த்தைக்கு முரணாகவும் உள்ளது. இது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. பாருங்கள்? வேதாகமம் சரியாக உள்ளது. சபை என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, வேதாகமம் உங்களுக்கு இன்னும் சரியாக உள்ளது, ஏனென்றால் உங்களுடைய சுபாவம் மாற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது, உங்களுக்கு ஒரு-ஒரு சபை பிதா இருக்கு மானால், நீங்கள் அந்த சபை பிதாவை விசுவாசிப்பீர்கள். ஆனால் தேவனாகிய பிதாவானவர் உங்களுக்கு இருப்பாரானால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பீர்கள். நீங்கள் சபையில் ஒரு பிதாவைப் பெற்றிருப்பீர்களானால், நீங்கள் அதையே விசுவாசிப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் அவனுடைய சுபாவத்தை உடையவர் களாயிருக்கிறீர்கள், அது உங்களுடைய பிதாவாக இருக்கிறது. ஆனால் உங்களுடைய பிதா தேவனாக இருக்குமானால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பீர்கள். நீங்கள் ஒரு சபையாக இருப்பீர்கள் என்றால், நீங்கள் - நீங்கள் அவனுடைய வார்த்தையை விசுவாசிப்பீர்கள், நீங்கள் சபையின் வார்த்தையைத் தான் விசுவாசிப்பீர்கள், சபையானது என்ன கூறுகிறதோ அதுவாகத்தான் நீங்கள் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பீர்கள் என்றால், நீங்கள் வார்த்தை என்ன கூறுகிறதோ அதையே விசுவாசிப்பீர்கள், ஏனென்றால் தேவனே உங்கள் பிதாவாக இருக்கிறார்; உலகமோ அல்லது சபைக் கோட்பாடுகளோ அல்ல. 7095.எனக்கு நினைவூட்டி விடுங்கள். ஒருநாள் அவர்கள், ஒரு-ஒருமுற்றத்தில், சில கோழிக்குஞ்சுகளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த ஒரு வாத்து அவர்களிடம் இருந்ததாக அவர்கள் கூறினார்கள். உங்களுக்குத் தெரியும், அந்த வாத்தானது அந்தக் கோழிக்குஞ்சுகளுக்கு ஒரு வேடிக்கையான சிறு பறவையாக இருந்தது. உங்களுக்குத் தெரியும், அது ஒருவிதத்தில் கீழ்ப்பாகத்தை விட மேல்பாகம் அதிக கனமாகவும் (top-heavy), பெரிய அலகை உடையதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் கீழ்ப்பாகத்தை விட மேல்பாகம் அதிக கனமாகவும், ஏதோவொரு நோக்கத்திற்காக அங்கே அந்த அலகையும் அது-அது கொண்டிருந்தது. கிறிஸ்தவன் சிலசமயங்களில் அவ்விதமாகத்தான் சற்று கொஞ்சம் மதவெறியைக் கொண்டவனாகக் காணப்படுகிறான் என்று நினைக்கிறேன், ஆனால்-ஆனால் அது ஒரு நோக்கத்திற்காகவே அங்கே இருக்கிறது. பாருங்கள்? எனவே, அவன், அது (வாத்து) அந்த கோழிக்குஞ்சுகளோடு இங்குமங்கும் ஓடித்திரியும் காலம் வரையில், அது வேடிக்கையாகவே தோற்றமளித்தது. அது... வான்கோழிகளும் காரியங்களும், அவைகள்-அவைகள்-அவைகள் சின்னஞ்சிறிய குட்டையான அலகைக் (bill) கொண்டிருந்தன, அவைகள், அவைகள் கொண்டிருந்த அந்தக் காரியங்கள், அவைகள் அந்த வாத்தைப் போன்று சிருஷ்டிக்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் அந்தத் தாய் (கோழி) அதை (வாத்தை) வெளியே பின்புறத்தில் வழிநடத்திக் கொண்டிருந்தது, ஒரு கூட்டம் கோழிக்குஞ்சுகளோடு அதையும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அது ஒருவிதத்தில் எப்போதுமே பின்புறத்தில் தான் இருந்தது, அது உங்களுக்குத் தெரியும். அது அவைகளைப் போன்று பேசக் கூட இல்லை. அதனுடைய பாஷை வித்தியாசமாக இருந்தது. அவைகள் ஒன்று மற்றொன்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 7196.கிறிஸ்தவன் மறுபடியும் பிறக்கும் போது, அவனோடும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது, பாருங்கள். அது ஒரு வித்தியாசமான முட்டையிலிருந்து வெளியே வருகிறது, அவ்வளவு தான். பாருங்கள்? ஒருக்கால் அது பெற்றிருந்தது... இங்கே வெளியிலுள்ள இந்த ஸ்தாபன சபைகளில் அவைகளில் அநேகம் உள்ளன என்று நம்புகிறேன், அவைகள் உண்மையான வாத்துக்கள் ஆகும், ஆனால் அவைகளுக்கு ஒரு பெட்டைக்கோழி தலைவி இருந்தாள். அது சரியே. எனவே அவைகளுக்கு அது புரியாது. அது முரட்டுத்தனமாக தொனிக்கிறது. அந்த விதமாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம், ஆனால் ஒரு முக்கிய விஷயத்தைப் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 97.ஒரு நாள் அந்தத் தானியக்களஞ்சியத்தின் பின்புறமாக சற்று அதிக தூரமாக அவள் அவனை வெளியே வழிநடத்திச் சென்றாள். அந்தத் தானியக் களஞ்சியத்தின் பின்புறத்தில் அங்கே கொஞ்சம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நீரூற்று, சிற்றோடை வெளியே ஓடிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் குறித்து என்ன என்று அது (அந்த வாத்து) வியந்தபடி ஒன்றாக கூட சேர்ந்து அங்கே போய்க் கொண்டிருந்தது, அது உங்களுக்குத் தெரியும், அந்தப் பெட்டைக் கோழியோடு கூட சேர்ந்து அதைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஏன், அவைகள் புசித்துக் கொண்டிருந்த ஆகாரம் கூட அதற்குப் பிடிக்க வில்லை, அதற்கு அது சரியாகத் தோன்றவில்லை. அவைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்தப் பழைய காரியங்கள், அது சரியாகத் தோன்றவில்லை. இப்படியிருக்க சற்று கழிந்து, அது ஒன்றை முகர (catch a breath) நேர்ந்தது. 'அது சற்றே சரியான வாசனையாக உள்ளதே. அது எங்கிருந்து வந்தது?' ஓ, அந்தச் சிறு பரலோக வாசனை, உம்ம்ம்! புத்துணர்ச்சி யூட்டுகிற ஏதோவொன்றின் வாசனையை சற்று முகர்ந்து பாருங்கள், உங்களை ஈர்த்துக் கொள்ளும் ஒரு செய்தி, அது உங்களை உணர்ச்சியூட்டி உயிர்ப்பிக்கிறது, அப்போது வார்த்தை தாமே நங்கூரமிடப்படுவதை நீங்கள் உணருவீர்கள். உம்ம்ம், பரலோக இன்பவேளை! அது (வாத்து), ஓ, 'எப்படியும் வேறொன்று அங்கேயிருக்கிறது, நான் முகர்ந்த அந்த வாசனை என்னுடைய சுபாவத்துக்கு பொருந்துகிறது' என்று நினைத்தது. அது மறுபடியுமாக அதை முகர்ந்து பார்த்தது. 'அது எங்கோ ஓரிடத்தில் உள்ளது. இப்பொழுது, உங்களால் அதை என்னிடம் கூற முடியாது; அது எங்கோ ஓரிடத்தில் உள்ளது. எனக்கு சொந்தமான ஏதோவொன்று எங்கேயோ உள்ளது என்பது எனக்குத் தெரியும்' இந்த மதக் கோட்பாட்டுக்கு நான் சொந்தமல்ல. பாருங்கள்? நான் என்ன கூறக் கருதுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? அது தண்ணீரை முகர்ந்தது, அதனுடைய சுபாவமானது ஒரு வாத்தாக இருந்தது, எனவே ஒரு வாத்தும் தண்ணீரும் ஒருமிக்க ஒன்றாகவே போகிறது. அவ்விதமாகத்தான் ஒரு விசுவாசியும் தேவனும் ஒன்றாகவே போகிறார்கள். அது அதனுடைய வேறொரு பெரிய மெல்ல இழுக்கும் காற்றை நேரடியாக முகர்ந்தது, அது இன்னும் வலுவானதாக வருகிறது. சற்று கழிந்து, காற்று வீசத் துவங்கினது. பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, அது உங்களுக்குத் தெரியும். அது (காற்று) வீசத் துவங்கி, தூரத்திலிருந்த அந்தத் தண்ணீரி லிருந்து வந்த தென்றல் காற்று அந்த வாத்தை அடைந்தது. அதனால் அதற்கு மேலும் நின்று கொண்டிருக்க முடியவில்லை. கீழே இருந்த அந்தக் குன்றை நோக்கி அது போனது, அது அப்படியே தள்ளாடி, தள்ளாடி, தள்ளாடி, தள்ளாடிச் சென்றது, உங்களுக்குத் தெரியும், அது, 'ஹாங்க்-ஹாங்க், ஹாங்க்ஹாங்க்,- ஹாங்க்ஹாங்க்- ' என்று கூச்சலிட்ட படி போய்க் கொண்டிருந்தது. அந்தச் சிறிய கொம்பு போன்று கடினமான வாயை மேலே உயர்த்தியபடி, அது போய்க் கொண்டிருந்தது, உங்களுக்குத் தெரியும். அது தண்ணீரை முகர்ந்து விட்டது! 98.அந்த வயதான பெட்டைக்கோழி, 'மதவெறியனே, இங்கே திரும்பி வந்து விடு!' என்றது. அதனால் எந்த நன்மையுமே இல்லை; அது தண்ணீரை முகர்ந்து விட்டது. அது தண்ணீருக்குப் போகிற தன்னுடைய பாதையில் இருந்தது. 7299.'இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து பாயும் இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு, அங்கு பாவிகள் அந்த (இரத்த) வெள்ளத்தில் மூழ்கும்போது, தங்கள் பாவக் கறைகள் எல்லாவற்றையும் போக்கிக் கொள்கின்றனர்.' ஒரு உண்ûமான கிறிஸ்தவன் இந்த உலகத்தோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டான். அவர்கள் இங்கே சுற்றிலும் ஏனோதானோவென்று வியந்து கொண்டே வாழ விரும்ப மாட்டார்கள், அவர்கள் எங்கேயிருக்கிறார்கள், அவர்கள் இன்று மெதோடிஸ்டாகவும், நாளை அவர்கள் பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகோஸ்தேகாரர்களாகவும் மேலும் அதுபோன்ற மற்றவைகளாகவும் இருக்கிறார்கள். ஓ, சகோதரனே, அது பரிதாபகரமானது! ஒரு உண்மை கிறிஸ்தவன் ஆவியில் புத்துணர்ச்சியைப் பெற்றிருக்க விரும்புவான், அவன் தன்னுடைய ஜீவியத்தில் தேவனுடைய புத்துணர்ச்சியையும், அவனை ஒரு புது சிருஷ்டியாக ஆக்குகிற ஏதோவொன்றையும் பெற்றிருக்க விரும்புவான். அந்த வெளிச்செல்லும் வழியை அவன் அடைய முடிந்த உடனே, அவன் பனிபடர்ந்த அந்த இடத்தை நோக்கியோ அல்லது அதைப் பெற்றுக்கொள்ளும்படியான வேறு எதையாவது நோக்கித் துரிதமாக போய் விடுவான். அவன் (அதை நோக்கித்) தூரமாகப் போய் விடுவான், ஏனென்றால் அவன் துவக்கத்திலேயே ஒரு வாத்தாக இருக்கிறான். ஆமாம். ஒரு மதக் கோட்பாடாக அல்ல, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 73100.நீங்கள் இன்னும் உலக காரியங்களை நேசித்தால், நீங்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டீர்கள், உங்களுடைய பலி இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை, உங்களுடைய சுபாவமும் மாற்றப்பட்டிருக்கவில்லை. மறுபடியும் பிறத்தல் என்பதற்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுது உங்களுக்குத் தெரிகிறதா? பாருங்கள், உங்களுடைய சுபாவம் மாற்றப் பட்டிருக்கிறது, நீங்கள் ஒரு புது சிருஷ்டியாக ஆகி விடுகிறீர்கள். நீங்கள் முதலில் மரித்தாக வேண்டும், பிறகு தான் நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள். இது நான் முடிக்க வேண்டிய நேரம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அப்படியே ஒரு சில நிமிடங்களை எனக்குத் தாருங்கள், நான் மிகவும் சீக்கிரமாக இந்தச் செய்திகளைத் தாண்டிச் சென்று விடுகிறேன், பாருங்கள், பாருங்கள். நீங்கள் இன்னும் உலகத்தை நேசித்து, நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதாக உரிமைகோரிக் கொண்டிருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் காரியமில்லை... நீங்கள் ஒருக்கால் அழுதிருக்கலாம், உங்களினூடாக ஒரு மிதமான குளிர் உணர்வு (chills) பாய்ந்து சென்றிருக்கலாம். அவைகள் எல்லாம் சரிதான், அதற்கு எதிராக எனக்கு எதுவுமில்லை. கிறிஸ்தவர்கள் அழுகிறார்கள், மேலும் அவர்களினுடாக ஒரு குளிரான உணர்வு பாய்ந்து செல்கிறது. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நான் அந்நிய பாஷையில் பேசினேன்...' என்று கூறலாம். அது நிச்சயமாக அருமையானது தான், அது நிச்சயமாக மிகவும் நல்லது தான். 74101.கொஞ்ச காலத்திற்கு முன்பு, தான் கண்டிருந்த ஒரு தரிசனம் அல்லது ஒரு சொப்பனத்தோடு என்னிடம் வந்திருந்த ஒரு சிறு பெண்மணியை நான் சரியாக இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன், அதற்கான வியாக்கியானம் என்னிடம் இருந்தது. அவள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கவில்லை என்று அந்தச் சிறு பெந்தெகோஸ்தே பிரசங்கியாரின் மனைவியிடம் சென்று கூறுவதென்பது இன்னுமாக ஒருவிதத்தில் கடினமாகவே உள்ளது, உ-ஊ, ஆனால் அவள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அப்போது அவள் அதைப் பெற்றுக்கொண்டாள், பாருங்கள். 102.ஆமாம், அது வித்தியாசமாய் இருக்கிறது, பாருங்கள். ஆமாம், அது அந்நிய பாஷைகளில் பேசுவதல்ல, அது ஆவியில் நடனமாடுவதல்ல. நீங்கள் அதை வைக்கக் கூடிய அந்தக் காரியங்கள் எதுவுமல்ல. அது ஒரு மரணமும், ஒரு பிறப்புமாக உள்ளது, ஒரு மாற்றப்பட்ட சுபாவமாய் உள்ளது, ஒரு மாற்றப்பட்ட குணாதிசயமாய் உள்ளது. பழையவைகள் மரித்துவிட்டன, புதியவைகள் புதிதாய் உள்ளன; உலகமானது மரித்து விட்டது, தேவன் புதிதாக இருக்கிறார். அப்பொழுது தேவனே உங்கள் ஜீவனாக இருக்கிறார், உலகமானது உங்களுக்கு மரித்துப் போய் விட்டது. இப்பொழுது அது உங்களுக்குப் புரிகிறதா? சரி. 75103.இப்பொழுது, கவனியுங்கள். நான் இங்கே சற்று நிறுத்தப் போகிறேன், உங்களுக்குத் தெரியும், அந்த முட்செடிகளை வழியை விட்டு விலக்கிப் போடுகிறேன். தாங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள் என்று உரிமை கோரின பிறகும், தேவனுடைய வார்த்தையையும் அவருடைய போதகங்களையும் பின்பற்றாமல் இருக்கும் ஸ்திரீகளே மனிதர்களே, அங்கே ஏதோ தவறுண்டு. நான் சற்று நேரம் ஸ்திரீகளிடம் பேசப் போகிறேன். தேவனுடைய வார்த்தையானது கத்தரிக்கப்பட்ட தலைமயிரைக் குறித்தும், குட்டை உடைகளை அணிவதைக் குறித்தும், தளர்த்தியான சட்டைகளை (slacks) அணிவதைக் குறித்தும், ஒழுக்கக் கேடாக உடையுடுத்துவதைக் குறித்தும், கடிந்து கொள்கிறது என்பதை அறிந்து கொண்டும், உங்களுடைய தலைமயிரை நீளமாக வளர விடவும், ஒரு கிறிஸ்தவளைப் போன்று தோற்றமளிக்கிற உடைகளை அணிவதையும் அனுமதிக்கும் படிக்கு போதுமான கண்ணியம் இல்லாமலிருக்கும் ஒரு பெண்ணாக நீ இருப்பாயென்றால், நீ வஞ்சிக்கப்பட்டிருக்கி றாய். நீ எதன் வழியாக வந்திருக்கிறாய் என்று எனக்குக் கவலையில்லை. நீ ஒருக்கால் உலர்ந்த பசுத்தோலின் மேல் பட்டாணியைக் கொட்டுவதைப் போன்று அந்நிய பாஷைகளில் பேசியிருக்கலாம். நீங்கள் நிச்சயமாக அதைக் கொண்டிருக்கலாம், நீங்கள் ஒருக்கால் முழு கட்டிடத்தையும் குலுக்கும் அளவுக்கு ஆவியில் நடனமாடியிருக்கலாம். அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. உலக சிநேகம் இன்னும் உங்களுக்குள் இருக்கிறது என்பதைத் தான் அது காண்பிக்கிறது. தேவன் அதைக் கடிந்து கொள்ளும் போது! அவர், 'அதுவல்ல. ஒரு பெண் தன்னுடைய தலைமயிரை நீளமாக வைத்திருக்க வேண்டும். மனிதர்கள் குட்டையான தலைமயிரைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுபாவம் தானே உங்களுக்குப் போதிக்கிறதே, ஏùன்றால் தேவன் மனிதனுக்கு மேலாக இருக்கிறார், மனிதன் ஸ்திரீக்கு மேலாக இருக்கிறான்' என்றார். ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமயிரைக் கத்தரித்துப் போடுவாளானால், அவள் தன்னுடைய தலையை அவமதிக்கிறாள், அவளுடைய தலை அவளுடைய புருஷனாயிருக்கிறான். ஒரு மனிதன் தன்னுடைய தலைமயிரை வளர விடுவான் என்றால், அவன் தன்னுடைய தலையாகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். புரிகிறதா? 'உங்கள் ஸ்திரீகள் தகுதியான (modest - சாதாரண, அடக்கமுள்ள) வஸ்திரத்தினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளக்கடவர்கள்,' அவர்கள் சீமாட்டிகளைப் போன்று மாசில்லாதவர்களாய் இருக்கக் கடவர்கள். பாருங்கள்? 76104.அப்படியானால் அதைச் செய்யும்படி பொதுவான கண்ணியமும் இல்லாமல், நாம் 'தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நான் அந்நிய பாஷைகளில் பேசினேன். அல்லேலூயா! தேவனுக்கு மகிமை!' என்று கூறலாம். அங்கே உள்ளேயிருக்கும் அந்த ஆவி தவறாயுள்ளது என்பதையே அது காட்டுகிறது. அது வார்த்தையின் சுபாவமாக இருக்குமானால், அது ஒவ்வொரு தடவையும் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும். வார்த்தை மாம்சமாகியிருக்கிறது, வார்த்தை தேவனாக இருந்தது, வார்த்தை தேவனாக இருக்கிறது; அந்த வார்த்தைகள் தான் உங்களுக்குள் இருந்து, உங்களை தேவனுடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் அவருடைய பிள்ளைகளாகவும் ஆக்கி, அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறது. 105.'நான் கர்த்தராகிய இயேசுவின் அந்தப் பழைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவதை நம்ப மாட்டேன். அல்லேலூயா! நீர் அதை எவ்வளவு தான் விளக்கிக் கூற முயற்சித்தாலும் எனக்குக் கவலையில்லை, நான் என்னுடைய மேய்ப்பரையே நம்புகிறேன்.' அப்படியே தொடர்ந்து போங்கள், அதுதான் உங்கள் பிதா. ஆனால் தேவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் தேவனுடைய வார்த்தையோடு வரிசைப்படுத்திக் கொள்வீர்கள். 106.பிரசங்கியே! 'அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து,'கர்த்தாவே, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?' அது பிரசங்கிமார்கள். 'நான் அநேக வல்லமை மிக்க கிரியைகளைச் செய்தேன் அல்லவா?' அது ஊழியக்களத்திலுள்ள சுவிசேஷகர்கள். என்று கூறுவார்கள். அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்,' முறைகேடாகப் பிறந்த பிள்ளைகள். அது சரியே. 77107.நீங்கள் தேவனால் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டு, உலகத்தின் காரியங்களிலிருந்து வேறுபிரித்துக் கொண்டு, தேவனை விசுவாசிப்பீர்கள். அப்பொழுது நீங்கள் மரித்து விடுகிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த நினைவுகளுக்கும், உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கும் மரித்து விடுகிறீர்கள், தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் மரித்து விடுகிறீர்கள்; அது உங்களுக்குள் ஜீவிக்கிறது, அது உங்கள் மூலமாக திரும்ப கிரியை செய்து, அது தேவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கிறது. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நான் உல...க்கு மரித்து விட்டேன். நான் உலகத்துக்கு மரித்து விட்டேன்' என்று கூறலாம். அப்படி யானால் தேவனுடைய வார்த்தையை (ஏன்) மறுதலிக்கிறீர்கள்? 108.இயேசு, 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையா ளங்கள் பின்தொடரும்' என்றார். இப்பொழுது, 'மறுபடியும் 61-1231ங வஞம ஙமநப ஆஉ ஆஞதச அஎஅஐச 81 பிறத்தல்' என்றால் என்ன அர்த்தம் என்பதற்கு வருகிறோம். பாருங்கள்? 78109.இன்னும் கோபத்தையும், இழிவான காரியங்களை யும் வைத்துக்கொண்டு திமிர்பிடித்தவர்களாயும் இருக்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களைக் குறித்து எதையாவது கூறினால், நீங்கள் சண்டையிட ஆயத்தமாகி விடுகிறீர்கள். அப்படியா னால் நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறீர்களா? இல்லை. தேவனுடைய ஆவி அவ்விதம் செய்யாது. இல்லை. தேவனுடைய ஆவி தாழ்மையும், சாந்த குணமும், இனிமையும், நீடிய பொறுமையும் உள்ளதாகும். அது தேவனாக இருக்கிறது, அன்பு செய்தல், இரக்கமுடைவர்களா யிருத்தல், மன்னித்தல், அதுதான் தேவனுடைய ஆவியாகும். ஓ, ஆமாம். 110.ஆனால் அவர்களோ அந்த ஸ்தாபனத்தையே பிடித்துக்கொண்டும், அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டும், சகல விதமான கிரியைகளையும் செய்து கொண்டும் இருப்பார்கள். அவர்கள் அதைச் செய்வார்கள் என்று இயேசு கூறியுள்ளார். 'தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருப்பார்கள்.' ஸ்தாபனத்தைப் பிடித்துக் கொள்வார்கள், ஏனென்றால் அதுதான் அவர்களுடைய பிதாவாக இருக்கிறது. அவர்கள் அந்த ஸ்தாபன பிதாவினிடத்தில் பிறந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் தேவனாலே பிறந்திருப்பீர்களானால், இதுதான் உங்கள் பிதா, அவர் வார்த்தையாக இருக்கிறார், வார்த்தை. நீங்கள் எத்தனை உணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும், அது காரியமில்லை, நீங்கள் உலகத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் பிழைக்கும் மட்டுமாக நீங்கள் இன்னும் சாத்தானின் ஒரு பிள்ளையாகவே இருக்கிறீர்கள். கவனியுங்கள், இப்பொழுது துரிதமாக. 79111.ஒரு ஆத்துமா, அது நல்லதாக இருந்தாலும், அல்லது கெட்டதாக இருந்தாலும், மரணமானது அதை மாற்றுவதில்லை. 'ஒரு ஆத்துமா என்றால் என்ன?' என்பதற்கு விளக்கம் கூற நான் விரும்பின இந்த ஒன்றின் பேரில் நான் இங்கே எழுதி வைத்துள்ள அநேக வேதவாக்கியங்களை நான் வைத்திருக்கிறேன். ஒரு ஆத்துமா என்பது என்ன? அது நீங்களாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஆத்துமாவாக இருக்கிறீர்கள். உங்களுடைய உள்ளே இருக்கும் பாகம். நீங்கள் மரிக்கும் போது, அந்த ஆத்துமா என்ன தோற்றத்தில் உள்ளதோ, அதேவிதமாகத்தான் அது போகிறது. அது போய் சேரும் இடத்திற்கு அது போகிறது. உங்களால் அதை மேலே இழுத்துச் செல்ல முடியாது, அதற்காக நீங்கள் எவ்வளவு தான் செய்திருந்தாலும், அது காரியமில்லை, அந்த ஆத்துமா இங்கேயே மாற்றப்பட்டிருக்க வேண்டும், மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, பரிசுத்த ஆவியைக் குறித்து என்ன?' என்று கேட்கலாம். 112.சேவைக்காக பரிசுத்த ஆவியானவர் உங்களை அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணுகிறார், ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கேதுவாக விசுவாசிக்கிறீர்கள். 'என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு.' புரிகிறதா? அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியினாலே, வரங்களை வெளிப்படுத்து வதற்காகவும், மற்றவைகளுக்காகவும் அந்தச் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கென்று விசுவாசிக்கிறீர்கள். விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு. நீங்கள் விசுவாசிக்கும் போது, நீங்கள் மரிக்கும் போது, நீங்கள் பிறந்து, புதிதாக உருவாக்கப்பட்டு, ஒரு புதிய சிருஷ்டியாகிறீர்கள். சரி. 80113.அந்த ஆத்துமா, அது நல்ல ஆத்துமாவாக இருந்தாலும், அல்லது கெட்ட ஆத்துமாவாக இருந்தாலும், மரணத்திற்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. மரணமானது வெறுமனே அதை அதனுடைய சேரு மிடத்திற்கு எடுத்துச் செல்கிறது. உங்களுக்கு அது கேட்கிறதா? நீங்கள் இன்னும் உலகத்தையும் உலக சிநேகத்தையும் அதில் வைத்திருப்பீர்களானால், அதுவும் உங்களோடு கூட மரித்து விடும், ஏனென்றால் உலகம் நிச்சயம் மரித்தாக வேண்டும். தேவன் உலகத்தை, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்திருக்கிறார், அதுதான் உலக ஒழுங்கு. தேவன் அதை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்திருக்கி றார், அது மரித்தாக வேண்டும். அந்த உலகமானது உங்களுக்குள் இருக்குமானால், நீங்கள் அந்த உலகத்தோடு கூட மரித்துப் போவீர்கள். என்னே, அது எப்படி எந்த விதத்தில் தெளிவாக இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. பாருங்கள்? அது நல்லதாக இருந்து, தேவனாலே பிறந்திருக்குமானால், அது தேவனிடத்திற்குப் போயாக வேண்டும். அது உலகத்தை உடையதாக இருக்கு மானால், அது தொடர்ந்து உலகத்தோடு கூட அழிந்து போய் விடும். அது தேவனுடையதாக இருக்குமானால், அது தேவனோடு கூட ஜீவிக்கும், கல்வி கற்றவர்களாக இருந்தாலும், கல்வி கல்லாதவர்களாக இருந்தாலும். கற்றவர்களோ அல்லது கல்லாதவர்களோ, உலகம் இன்னும் அங்கே இருக்குமானால், அது மரித்தே ஆக வேண்டும். உலகமானது உங்கள் ஆத்துமாவில் இருந்து, உங்கள் வாஞ்சைகள் உலகக் காரியங்களைக் குறித்தவைகளாக இருக்குமானால், நீங்கள் உலகத்தோடு கூட அழிந்து போவீர்கள். அது தெளிவாக உள்ளது, இல்லையா? அப்படியே இருக்க வேண்டும். அப்போது நீங்கள் மரித்துப் போன உலகத்தின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். உலகமானது மரித்து விடுகையில், நீங்களும் உலகத்தோடு கூட மரித்து விடுகிறீர்கள். 81114.ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் கிறிஸ்துவோடு கூட ஜீவிக்கிறீர்கள், உங்களுடைய நேசம் பரத்திலுள்ள காரியங்களின் மேலேயே உள்ளது, உலகத்திலுள்ளவைகளின் மேலல்ல. ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக ஆகிறீர்கள், அவரோடு நித்தியமாக இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, மரணமானது உங்களைத் தொட முடியாது. நீங்கள் நித்தியமாக இருக்கிறீர்கள். நீங்கள் காலத்தின் ஒரு சிருஷ்டியிலிருந்து, ஒரு நித்திய சிருஷ்டியாக மாற்றப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள். நான் 'நித்தியம்' என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். நித்திய மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு. நீங்கள் உலகத்தி னுடையவர்களாக இருந்தால், நீங்கள் அதனோடு இங்கேயே மரிக்கிறீர்கள். நீங்கள் அன்புகூர்ந்தால், 'உலகத்திலோ உலகத்தில் உள்ளவைகளின் மீதோ நீங்கள் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு ஏற்கனவே உங்களுக்குள் இல்லாதது தான் அதற்குக் காரணம்' என்று வேதாகமம் யோவானில் கூறுகிறது. உங்களால் உலகத்தை நேசிக்க முடியாது. 'தேவனையும் உலகப்பொருளையும் (mammon) நேசிக்க உங்களால் கூடாது' என்று இயேசு கூறினார். உலகப்பொருள்(mammon) என்பது 'உலகமாக' இருக்கிறது. உலகத்தையும் தேவனையும் நீங்கள் ஒரே நேரத்தில் நேசிக்க முடியாது. 'என்னை நேசிக்கிறவன் என்று சொல்லுகிறவனாயிருந்தும், நான் சொல்லுவதின்படி செய்கிறதில்லை' அதாவது, 'அப்படிப்பட்டவன் ஒரு பொய்யனாய் இருக்கிறான், சத்தியம் இன்னும் அவனிடத்திலில்லை' என்று வேதாகமம் (கூறுகிறது). அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன. 82115.ஓ, பிரன்ஹாம் கூடாரமே, சகல நல்ல ஜனங்களே, நாம் விவரப் பட்டியலை (inventory) எடுத்துக் கொள்வோம்! இது புது வருடமாக இருக்கிறது. நாம் தொடங்கி, ஏதோவொன்றைச் செய்வோம், உலகக் காரியங்களை நம்மை விட்டு வெளியேற்றுவோம். அது இன்னும் அங்கே உள்ளே இருக்குமானால், அதைத் தூர எறிந்து விடுவோம். ஆம், ஐயா. சரி, இன்றைய ஜனங்கள்... நான் துரிதப்பட வேண்டியுள்ளது. 83116.இன்றைய ஜனங்கள் எல்லாவிதமான ஆவிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் சென்று ஒரு சபையின் ஆவியைப் பெற்றுக் கொள்கிறார்கள், அப்போது அவர்கள், 'தேவனுடைய ஆவிகள், மறுபடியும் பிறந்திருக்கிறோம்' என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் ஆவிகளையும் கூட பெற்றுக் கொண்டு, தேவனுடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது என்பதை மறுதலிக்கி றார்கள். தேவனுடைய ஆவியானவர் தம்முடைய சொந்த வார்த்தையே மறுதலித்துக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கத்தோலிக்க ஜனங்களே, ரோமன் கத்தோலிக்கர்களே, உங்களிடம் தான், நான் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறந்திருக்கிறீர்கள் என்று உண்மையில் கூறிக் கொண்டு, வேதாகமத்திற்கு முரணான அந்தக் கோட்பாடுகளை(dogmas) ஏற்றுக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுதலித்துக்கொண்டு, நீங்கள்... தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறது என்று கூற முடியுமா? இந்த வேதாகமத்தை எழுதின ஆவியானவரே அதை மறுதலிப்பாரா? அது நான் ஏதோவொன்றைக் கூறிக் கொண்டு, எழுந்து நின்று, அதற்கு விரோதமாக பொய் பேசுவதாக இருக்கும். 'தேவனால் பொய் பேச முடியாது, ஏனென்றால் அவர் சகல சத்தியத்தின் உண்மையான நீரூற்றாயிருக்கிறார்' என்று வேதாகமம் கூறும் போது, தேவன் ஏதோவொன்றைக் கூறிக் கொண்டு, பிறகு திரும்பி, அதைக் குறித்து பொய் பேசுவாரா? 84117.'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்' பட்டப்பெயர் களில் (titles) ஞானஸ்நானம் கொடுக்கும் மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, இப்பொழுது வித்தியாசத்தை அறிந்து கொண்டீர்களா? உங்களிடம் உங்கள் வேதாகமம் உள்ளது. வெறுமனே கரத்தைக் குலுக்குவதின் மூலமாக ஒரு சபையைச் சேர்ந்து கொள்பவனே? உங்கள் கடிதத்தை ஒருவரிடமிருந்து வேறொருவரிடத்திற்கு எடுத்துச் சென்று, நீங்கள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள் என்று உரிமை கோருபவனே? உங்களால் எவ்வாறு அதைச் செய்ய முடிகிறது, அதன்பிறகு நீங்கள் தேவனுடைய வார்த்தையின் முகத்தில் நோக்கிப் பார்த்து, உங்களை நீங்களே ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ள உங்களால் எப்படி முடிகிறது? நீங்கள் சபைக்கு மரித்திருக்கும் போது, நீங்கள் மதக்கோட்பாட்டுக்கு மரித்திருக்கும் போது, நீங்கள் உலகத்துக்கு மரித்திருக்கும் போது, நீங்கள் தேவனைத் தவிர வேறு எல்லாவற்றிற்கும் மரித்திருக்கிறீர்கள், தேவன் வார்த்தையாய் இருக்கிறாரே! காரியங்கள் அவ்விதமாகத்தான் உள்ளன. நாம் பார்க்கலாம். அவர்கள் ஒவ்வொரு விதமான ஆவியையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஓ, அவர்கள் சபையின் ஆவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எல்லாவிதமான ஆவிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 85118.தீர்க்கதரிசிகளே! தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. இப்பொழுது, முடிக்கையில், நான் வெறுமனே இன்னும் இரண்டு வியாக்கியானங்களை ( comme n ts) இங்கே வைத்திருக்கிறேன், அல்லது அவ்விதமானவைகளை வைத்திருக்கிறேன், நான் கடந்து செல்ல விரும்புகிறேன், அதன்பிறகு நான் நிறுத்தப் போகிறேன். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. எது தீர்க்கதரிசி களிடம் வருகிறது? சபையினுடைய வார்த்தையா தீர்க்கதரிசியிடம் வந்தது? ளசபையார், 'இல்லை' என்கின்றனர் -ஆசிரியர்.ன சமயக் கோட்பாடுகளின் வார்த்தையா தீர்க்கதரிசியிடம் வந்தது? ['இல்லை'] கர்த்தருடைய வார்த்தை தான் தீர்க்கதரிசிகளிடம் வந்தது! அது என்னவாக இருந்தது? தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தினான். பாருங்கள்? அதுதான் தீர்க்கதரிசிகள், உண்மையான தீர்க்கதரிசிகள். இப்பொழுது, நாம் கள்ளத் தீர்க்கதரிசகளைப் பெற்றிருக்கிறோம், நாம் சற்று நேரத்தில் அவர்களிடம் வருவோம். ஆனால் உண்மையான தீர்க்கதரிசி, உண்மையான வார்த்தை உண்மையான தீர்க்கதரிசியிடம் தான் வந்தது. வேறு எவரிடமும் அது இருக்க முடியாது. இப்பொழுது, ஒரு சமயக் கோட்பாடு தீர்க்கதரிசியிடம் வரவில்லை, ஒரு ஸ்தாபனம் தீர்க்கதரிசியிடம் வரவில்லை. இல்லை. ஆனால் கர்த்தருடைய வார்த்தை தான் தீர்க்கதரிசியிடம் வந்தது. அவன் அதை ஜனங்களுக்கு வெளிப்படுத்தினான். உண்மையான தீர்க்கதரிசி உண்மையான வார்த்தையைக் கொண்டிருந்தான். 86119.ஒரு உண்மையான தீர்க்கதரிசியை எப்படி பரிசோதிப்பது? அவன் உண்மையான வார்த்தையைப் பெற்றிருக்கும் போது. அப்படியானால் அது ஒரு உண்மையான வார்த்தையாக இல்லை என்றால், அது தவறான ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வார்த்தையிலிருந்து வித்தியாசமான ஏதோவொன்றை அது கூறுமானால், இந்த வார்த்தை தேவனுடைய வார்த்தையாக உள்ளது, ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வார்த்தையும் பொய்யாகவும் தேவனுடைய வார்த்தையே உண்மையாகவும் இருக்கக் கடவது. அந்த வார்த்தையானது தீர்க்கதரிசியிடமிருந்து வருமென்றால், அது தேவனுடைய வார்த்தையாக இருக்குமென்றால், அப்படியானால் அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கிறான், ஏனென்றால் வார்த்தையானது தீர்க்கதரிசிகளிடம் வருகிறது, உண்மையான தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. நாம் எப்போதுமே கள்ளத் தீர்க்கதரிகளைக் கொண்டிருந்தோம். உண்மையான தீர்க்கதரிசிகள், உண்மையான வார்த்தை. கள்ளத் தீர்க்கதரிசிகளோ, தவறான வார்த்தையோ, 'எங்களுடைய மதக்கோட்பாடுகள், எங்களுடைய ஸ்தாபனங் கள், இதைசேர்ந்து கொள்ளுங்கள், இதைக் கூறுங்கள், இதைவிசுவாசியுங்கள், இதைச் செய்யுங்கள்' என்று (கூறுகிறார்கள்). 87120.ஆனால் உண்மையான வார்த்தையானது உண்மையான தீர்க்கதரிசியிடமே வருகிறது, உண்மையான வார்த்தையை அவன் உங்களுக்குக் கூறுகிறான். நீங்கள் அந்த உண்மையான வார்த்தையைப் பின்பற்றுகிறீர்கள், அப்பொழுது நீங்கள் வார்த்தையின் ஒரு உண்மையான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள், ஏனென்றால் வார்த்தையானது உங்களுக்குள்ளே மாம்சமாகி விட்டது, நீங்கள் தேவனுடைய குமாரனாக ஆகி விட்டீர்கள், தேவனுடைய வார்த்தையானது சரியாக தேவனை விட்டு சுழன்று உங்களுக்குள் வந்து விடுகிறது, ஏனென்றால் நீங்கள் அவருடைய சுபாவமாய் இருக்கிறீர்கள், அவருடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறது, அப்பொழுது நீங்கள் தேவனுடைய கிரியைகளைச் செய்வீர்கள். அல்லேலூயா! வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஓ, என்னே! 88121.கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யான வார்த்தைகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? தவறான உணர்வு கிளர்ச்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். தவறாக இருக்கும்படி, கள்ளத்தீர்க்கதரிசிகள் உண்மையான வார்த்தையில் போதுமானவற்றை வைத்திருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள் அதைச் செய்யவில்லை, ஆனால் வேதாகமம் கூறுகிறது... அதன் பேரிலான வேதவாக்கியத்தை நீங்கள் எழுதி வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா, அது 2 தீமோத்தேயு 3ம் அதிகாரம், பாருங்கள். உண்மையான வார்த்தையைப் பொய்யாக்கும்படியாக, கள்ளத்தீர்க்கதரிசிகள் உண்மையான வார்த்தையில் போதுமானவற்றை கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் 'தேவபக்தியின் வேஷத்தைத் தரித்திருக்கிறார்கள்' என்பதாக வேதாகமம் கூறுகிறது. தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருக்க வேண்டுமானால், அவர்கள் அதில் சிலவற்றை சத்தியமாகக் கொண்டிருக்க வேண்டியதாய் உள்ளது. 'தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்.' எதின் பெலனை? உங்களை நேராக்குவதற்கும், வித்தியாசமாக இருப்பதற்கும், தேவனை சேவிக்கவும் செய்து, நடனங்களுக்கும் உலகத்தின் காரியங்களுக்கும் போகாமல் இருக்கச் செய்வதற்கு - உங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக் கூடாது என்று வேதாகமம் அதைக் கண்டிக்கிறது. கள்ளத்தீர்க்கதரிசிகளோ, 'அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை' என்று கூறுவது போன்று அது இருக்கிறது. 89122.சமீபத்தில் யாரோ ஒருவர் (நான் இதற்கு முன்பு அதை இங்கே மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்று நம்புகிறேன், எனக்குத் தெரியவில்லை), 'உலகத்திலுள்ள அந்த பெண்களையும் மனிதர்களையும் நீர் ஏன் தனியே விட்டு விடக் கூடாது. ஏன், அங்கே, அந்த ஜனங்கள் உம்மை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்களே' என்று என்னிடம் கூறினார். நான், 'நான் தீர்க்கதரிசி இல்லை' என்றேன். 123.'ஆனால் நீர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்று ஜனங்கள் நம்புகிறார்கள். தரிசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்றோ, தேவனுடைய கிரியைகளை அவ்விதமாக செய்வது எப்படி? என்று நீர் ஏன் போதிக்கக் கூடாது?' 124.நான், 'அவர்கள் தங்களுடைய அஆஇ-களையே அறியாமல் இருக்கும் போது, நான் எப்படி அவர்களுக்கு அல்ஜிப்ராவைக் கற்றுக்கொடுக்க முடியும்?' என்றேன். பாருங்கள்? புரிகிறதா? நீங்கள் மழலையர் பள்ளியிலிருந்து ஒரு குழந்தையை எடுத்து, இன்றைக்கே அவனுக்கு எவ்வாறு கல்லூரி கல்வியைப் புகட்டவும், ஸ்கொயர் ரூட் (square root)- ஐ கணக்கிடவும் கற்றுக்கொடுக்க முடியும்? அஆஇ என்றால் என்ன அர்த்தம் என்பதே அவனுக்குத் தெரியாதிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு அதைச் செய்ய முடியும்? அஆஇ என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? எப்போதும் கிறிஸ்துவை விசுவாசியுங்கள் (Always Believe Christ). அது சரியே. சபையை விசுவாசிக்க வேண்டாம், அவர்களுடைய சமயக்கோட்பாட்டை விசுவாசிக்க வேண்டாம், அவர்களுடைய உபதேசங்களையும் விசுவாசிக்க வேண்டாம். கிறிஸ்துவையே விசுவாசியுங்கள்! ஏன்? ' அவரை அறிவதென்பது, அவரை அறிவது தான் ஜீவனாகும்.' அது சரிதானா? அவருடைய சமயக்கோட்பாட்டை அறிவது அல்ல, அதுவல்ல... அவரிடம் எந்த சமயக்கோட்பாடுகளும் கிடையாது. அவருடைய வார்த்தையை அறிவது கூட இல்லை. அவருடைய வார்த்தையை அறிவதற்கு அல்ல; நீங்கள் அவரை அறிந்திருக்க வேண்டும், நீங்கள் அவரை புது பிறப்பில் உங்கள் இரட்சகராக அறிந்திருக்க வேண்டும். இயேசு நிக்கோதேமுவிடம், 'பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் உங்களால் விசுவாசிக்க முடியா விட்டால், பரம காரியங்களை எப்படி உங்களால் விசுவாசிக்க முடியும்?' என்று கூறினது போல. அவர்கள் பூமிக்கடுத்த காரியங்களைக் கூட விசுவாசிக்காமல் இருக்கும் போது, ஆவிக்குள்ளாக பிரவேசிக்கும் ஆவிக்குரிய காரியங்களை நீங்கள் எப்படி விசுவாசிக்கப் போகிறீர்கள்? தரிசனங்களையும் அவ்விதமான காரியங்களையும் எப்படி அறிந்து காணப் போகிறீர்கள்? அவ்விதமான முறைமையில் ஒரு பள்ளியை நிறுவும்படியாக. வஸ்திரங்களைச் சரியாக உடுத்துவதைக் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. தங்களுடைய புகைப்பிடித்தலை, தங்களுடைய பொய் பேசுதலை விட்டு விடுவதையும், தங்களுடைய கோபத்தை விட்டு விடுவதையும், அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும், இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்வதை விட்டு விடுவதை யும், அல்லது இச்சிப்பதை விட்டு விடுவதையும் கூட அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அந்தக் காரியங்கள் எல்லாமே இன்னும் அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் படியாக அவர்கள் வைத்திருக்கும் போது, ஆவிக்குள்ளா தலைப் பற்றி எவ்வாறு உங்களால் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்? ஆம். ஓ, என்னே. 90125.கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யான வார்த்தை களையும், மதக்கோட்காடுகளையும், ஸ்தாபனங்களையும் உணர்ச்சிகளையும் கொண்டிருக்கிறார்கள். 'ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால். எலியாவின் வஸ்திரத்தை அணிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமா? தேவனுக்கு மகிமை! நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், உங்களுடைய மனதை வெறுமையாக்கி, ஒரு காரியத்தையும் குறித்து சிந்திக்காமல், 'ஓ, என்னை நிறைத்தருளும், என்னை நிறையும், என்னை நிறைத்தருளும்' என்று கூறுங்கள்.' அப்போது பிசாசு நிச்சயமாக உங்களை நிறைப்பான். அப்படியானால் நீங்கள் அதன்பேரில் சார்ந்திருப்பீர்களா? 'ஓஓஓஓ, அது என்மேல் முழுவதுமாக பாய்ந்து செல்கிறது, சகோதரன் பிரன்ஹாமே. நான் அதை உணர்ந்தேன். ஓஓஓஓ, தேவனுக்கு மகிமை, அல்லேலூயா. அவ்விதமாக மேலும் கீழும் குதித்துக் கொண்டிருக்கிறேன், ஓ, நான் அதைப் பெற்றுக் கொண்டேன்!' நீங்கள் ஜீவிப்பது போன்று ஜீவித்துக்கொண்டா? 126.' அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அவர்களை அறிவீர்கள்.' புரிகிறதா? பாருங்கள், உணர்ச்சியின் மூலமாக அல்ல. 127.'ஓ, சகோதரனே, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், அப்படியே பீடத்தில் முழங்கால்படியிட்டு, 'நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவது மட்டுமாக, மகிமை, மகிமை, மகிமை, மகிமை, மகிமை' என்று கூறிக்கொண்டேயிருங்கள்.' உ-ஊ, (பின்னர்) வெளியே திரும்பிச் சென்று, எந்தவிதமான வாழ்க்கையையும் வாழ்வீர்களா, பொய் பேசி, திருடுவீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதைக் குறித்து அவர்கள் உங்களிடம் கூறும்போது, 'அது மதவெறித்தனம், என்னுடைய சபை வித்தியாசமாக போதிக்கிறது!' என்று (கூறுகிறீர்கள்). அப்படியானால் நீங்கள் மறுபடியும் பிறந்து விட்டீர்கள் என்றும், வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டு விட்டீர்கள் என்றும் கூறுகிறீர் களா? எங்கேயோ ஏதோ தவறாயுள்ளது. புரிகிறதா? 91128.நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் அது இங்கே எழுதப்பட்டுள்ள விதமாக அப்படியே அதை விசுவாசிப் பீர்கள். நமக்குத் தேவையில்லை... நமக்கு வேண்டாம்... வேதாகமம், 'அது சுயதோற்றமான பொருளையுடையதா யிராது' என்று கூறுகிறது. தேவனே அதை வியாக்கியானிக் கிறார், இந்தவிதமாகத்தான் அது உள்ளது. அவர்... வார்த்தை, அவருடைய வார்த்தை இதோ உள்ளது... 2ல் வேதாகமம் கூறவில்லை. அங்கே 2 பேதுருவில், 'வேதாகமம் சுயதோற்ற மான பொருளையுடையதாயிராது' என்று (எழுதப்பட்டுள்ளது) என்று நம்புகிறேன். நிச்சயமாக. இல்லை, சுயதோற்றமாக அல்ல. அது அதை அர்த்தப்படுத்தும் விதமாகவே அது எழுதப்பட்டுள்ளது, சரியாக அதே விதமாக. அது இங்கே எழுதப்பட்டுள்ள விதமாக அப்படியே அதை விசுவாசி யுங்கள், அப்பொழுது அது அதே முடிவுகளைக் கொண்டு வரும். 92129.இப்பொழுது கள்ளப் போதகர்கள் தவறான பிறப்பு களைக் கொண்டு வருவார்கள். உண்மையான தீர்க்கதரிசிகள் வார்த்தையைக் கொண்டு வருவார்கள், கிறிஸ்துவாகிய வார்த்தையினால் வரும் பிறப்பைக் கொண்டு வருவார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகள் தவறான பிறப்பைக் கொண்டு வருவார் கள், அவர்கள் சபைகளின் மூலமாக வரும் பிறப்பையும், மதக்கோட்பாடுகளின் மூலமாக வரும் பிறப்பையும் ஸ்தாபனங்களின் மூலமாக பிறக்கும் பிறப்பையும் கொண்டு வருவார்கள். உங்களுக்கு அவசியமானது இதோ இருக்கிறது, பெந்தெகோஸ்தே சகோதரனே, தவறான உணர்ச்-... அல்லது உணர்ச்சிகளைக் கொண்டு, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டான் என்று அவனிடம் கூறுகிறீர்கள், ஏனென்றால் அவன் அந்நிய பாஷைகளில் பேசுகிறவன். பிசாசுகளும் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்; பென்சில்கள் கீழே வைக்கப்பட்டு அறியப்படாத பாஷைகளில் எழுதும். அது ஒரு காரியத்தையும் அர்த்தப்படுத்துவதில்லை. பாருங்கள், அது ஒரு ஜீவனாக இருக்க வேண்டியுள்ளது, அவர்களுடைய கனியினாலே அவர்களை அறிவீர்கள். 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் அந்நிய பாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறீரா?' ஆம், ஐயா. 'சத்தமிடுவதில் உமக்கு விசுவாசம் உண்டா?' ஆம், ஐயா. ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு நான் அதை விசுவாசிக்கிறேன். நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். ஆனால் அதை ஆதரிக்க அங்கே ஜீவன் இல்லை என்றால்! 93130.அங்கேயுள்ள திணித்து வைக்கப்பட்ட சட்டையை விட்டு வெளியே வந்து, 'தேவனுக்கு மகிமை, அல்லேலூயா,' அப்படியானால் அது கிறிஸ்து என்று என்னிடம் கூறுகிறீர்களா? கிறிஸ்து தாழ்மையுள்ளவராகவும், சாந்த குணமுள்ளவராகவும், கனிவானவராகவும் இருந்தார். ஒரு பட்டணத்திற்குள் சென்று, என்னே, நீங்கள் அப்படியே தோள்களை விட்டு துடைத்து அகற்ற(brushed off) வேண்டியிருக்கிறது, உங்களுக்குத் தெரியும், எல்லாமே அப்படியே சரியாக இருக்க வேண்டியிருக்கிறது, உங்களுடைய சூட்டில் ஒரு சுருக்கமும் இல்லாதிருக்க வேண்டியுள்ளது, நீங்கள் மிகச்சிறந்ததைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது அல்லது நீங்கள் வரவும்கூட மாட்டீர்கள், அதிக பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டியுள்ளது; உங்களால் ஒரு கூட்டத்தையும் கொண்டிருக்க முடியாது. ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, என்னே! எல்லா ஸ்தாபனங்களும், அவர்கள் உங்கள் முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களில் ஒருவருமே அவருடைய முதுகில் தட்டிக் கொடுக்கவில்லை, அவர் வார்த்தையாக இருந்தார். அது சரியே. 94131.கள்ளத் (தீர்க்கதரிசிகள்) தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொள்ளும் பொருட்டு, உண்மையானவற்றிலும் போதுமானவற்றை வைத்திருப்பார்கள். மேலும் கவனியுங்கள், இப்பொழுது நான் ஒரு காரியத்தை இங்கே கூறிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவ்விதமான தவறான எண்ணங்கள், தவறான எண்ணம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும், மில்லியன் (பத்து இலட்சம்) கணக்கான ஜனங்களை தவறான பிறப்புக்கு வழிநடத்துவது. கள்ளப் போதகர்கள் ஒரு உணர்ச்சியை நம்பும்படிக்கு ஜனங்களை வழிநடத்துகிறார்கள், 'நீங்கள் திடீர் எழுச்சியைக் கொண்டிருந்த காரணத்தினால், நீங்கள் அதைப் பெற்று விட்டீர்கள். ஓ, உங்கள் மேல் பாய்ந்தோடுகிற மிகவும் வினோதமான ஒரு உணர்ச்சியை நீங்கள் பெற்றிருந்த காரணத்தினாலும், நீங்கள்-நீங்கள் உங்கள் முன்னால் வெளிச்சங்களைக் கண்ட காரணத்தினாலும், குருடாகி தள்ளாடிக் கொண்டிருந்த காரணத்தினாலும், எலியாவின் மேலங்கி (Elijah's jacket) உங்கள் மேல் உடுத்தப்பட்டு விட்டது. அது சரிதான், நீங்கள் அதைப் பெற்று விட்டீர்கள். ஓ, நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? நீ வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனாக இருக்கிறாய்.' நீங்கள் உங்களைத்தானே எங்கே காண்கிறீர்கள்? தோற்கடிக்கப்பட்டவர்களாகவே உங்களைக் காண்கிறீர்கள். அது சரியே. 'தேவனுக்கு மகிமை, நான் ஒரு இரவில் போனேன், நான் ஒரு சொப்பனம் கண்டிருந்தேன்!' ஓ, ஆம், உ-ஊ.பாருங்கள்? 'ஓ, நான் இதை, அதைக் கண்டேன்.' ஆமாம், உ-ஊ. 'நீர், சொப்பனங்களில் உமக்கு நம்பிக்கை இல்லையா?' ஆம், ஐயா, எனக்கு நிச்சயமாகவே நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த சொப்பனம் தேவனுடைய வார்த்தையை ஆதரிக்காவிட்டால், அது தவறாக இருக்கிறது. சத்தியம் இதோ இருக்கிறது, இதிலேயே தரித்திருங்கள். ஆம், ஐயா. மில்லியன் கணக்கானவர்களை தவறான பிறப்புக்கு வழிநடத்துகிறார்கள், சற்று சிந்தித்துப் பாருங்கள்! 95132.என்னிடம் ஒரு துண்டு தாள் இருந்தது, நான் என்னோடு அதைக் கொண்டு வரப் போகிறதாயிருந்தேன், எல்லா கிரேக்க வைதீக மற்றும் வைதீக சபைகளின் மதரீதியான பிதா 22-ம் போப் ஜானோடு பேசியிருக்கிறார், அவர், 'நாம் ஒருக்கால் அதை நம்முடைய தலைமுறையில் காணாமல் இருக்கலாம், ஆனால் மகத்தான சகோதரத்துவ மானது புரட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்கம் இரண்டிலும் வெளிப்பட்டுத் தோன்றி ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது' என்றார். 133.நான், 'தேவனுக்கு துதி உண்டாவதாக!' என்று நினைத்தேன். யாரோ ஒருவர் அதை ஒரு செய்தித்தாளி லிருந்து கத்தரித்து, அவ்விதம் எனக்கு எழுதியிருந்தார். அது சகோதரன் நார்மன் அல்லது யாரோ ஒருவர் என்று நம்புகிறேன், அவர் 'சகோதரன் பிரன்ஹாமே, நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது' என்றார். இன்றைய நாளை நோக்கிப் பாருங்கள், போர் துறை அமைச்சர், மேலும், ஓ, அனேக வித்தியாசமான அலுவலகங்களும் ஜனாதிபதியும் இந்த தேசம் எல்லாமே கத்தோலிக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கவனியுங்கள்! 96134.நீங்கள், 'நல்லது, அவர்கள் கிறிஸ்தவர்கள்' என்று கூறலாம். கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமானால், கிறிஸ்துவைப் போல இருந்து, அவருடைய ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். அது சரிதானா? இதோ ஒரு மூர்க்கத்தனமான ஒன்று இருக்கிறது, முரட்டுத்தனமான ஏதோவொன்று, ஆனால் நான் அதைக் கூற விரும்புகிறேன். நீங்கள் ஒரு பன்றியை ஒரு செம்மறியாடு என்று அழைப்பீர்களானால், அது அந்தப் பன்றியை செம்மறியாடாக ஆக்கி விடுமா? ஏன், நீங்கள், 'பன்றிக்குட்டியே, நீ ஒரு பன்றிக் குட்டியாக இருப்பதைக் குறித்து நான் அப்படியே சலிப்படைந்துள்ளேன். ஒரு ஆட்டுக்குட்டி தான் எனக்குப் பிடிக்கும், எனவே நான் இங்கே வெளியே உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், நான் உன்னை முழுவதுமாக தேய்த்துக் கழுவப் போகிறேன், நான் உன்னுடைய பற்களையும் கழுவப் போகிறேன், நான் உன்னுடைய தலைமயிரையும் வாரப் போகிறேன், நான்-நான் உன்னை ஒரு சிறு ஆட்டுக்குட்டியாக ஆக்கப்போகிறேன். நான் உன்னுடைய கழுத்தைச் சுற்றிலும் ஒரு சிறிய இளஞ்சிவப்பான நாடாவினால் (ரிப்பன்) கட்டப் போகிறேன், நீஒரு பன்றிக்குட்டியாக (piggy) இருப்பதற்குப் பதிலாக ஒரு சிறு ஆட்டுக்குட்டியாக (lambsie) இருக்கப் போகிறாய்' என்று கூறலாம். நீங்கள் வந்து, 'ஆட்டுக்குட்டியே, ஆட்டுக்குட்டியே, ஆட்டுக்குட்டியே' எனலாம். அதுவோ அப்பொழுதும், 'ஓய்ங், ஓய்ங்' என்று போய் விடும். நீங்கள் அதை பன்றிகளை அடைத்து வைக்கும் ஒரு இடத்தில் அவிழ்த்து விட்டுப் பாருங்கள், அதற்குக் கிடைக்கக்கூடிய சேறு எல்லாவற்றையும் அது சாப்பிட்டு விடும். சரி! அவன் மேல் தெளிப்பதல்ல, அதைத் தண்ணீரில் வைப்பதல்ல; அது ஒரு மரணமாகவும் ஒரு பிறப்பாகவும் உள்ளது! ஆம், ஐயா. 'மணப்புற்களைத் (alfalfa) தவிர வேறொன்றையும் சாப்பிட நான் உனக்குக் கொடுக்கப்போவதில்லை, நான் உனக்கு ஆடுகளுக்கான ஆகாரத்தைப் புசிக்கக் கொடுக்கப் போகி றேன்' என்று கூறலாம். இன்னும் அதற்கு மணப்புற்களைப் புசிக்கக் கொடுங்கள், அவன் அப்பொழுதும் பன்றியாகத்தான் இருக்கிறான். அவ்வளவு தான். அது சரிதானா? நிச்சயமாக அது சரியே. ஏன், நிச்சயமாக, அது ஒரு பன்றியாக இருக்கிறது, ஏனென்றால் அதனுடைய சுபாவமே ஒரு பன்றியாக இருக்கிறது. 97135.நீங்கள் உலகத்திலோ உலகத்தில் உள்ளவைகளின் மீதோ அன்பு கூர்ந்தால், நீங்கள் இன்னும் ஒரு பன்றியாகவே இருக்கிறீர்கள். அது சரியே. உங்களுடைய ஆத்துமாவை மறுரூபப்படுத்த (transform) தேவனுடைய வல்லமை தான் அவசியமாயிருக்கிறது. பன்றி மரித்துப் போகட்டும், உங்களுடைய பன்றிக்குரிய பழக்க வழக்கங்களை பலிபீடத்தின் மேல் வைத்து விடுங்கள், உங்களைத்தானே அங்கே கிடத்துங்கள், தேவனுடைய பலியானது... அல்லது நியாயத்தீர்ப்பின் அக்கினி இறங்கி வந்து, ஒரு பன்றியாக இருக்கும் உங்களைப் பட்சித்து (consume), உங்களை ஒரு ஆட்டுக்குட்டியாக மறுபடியும் பிறக்கச் செய்யட்டும். அதன்பிறகு நீங்கள் எந்த சேற்றையும் சாப்பிட மாட்டீர்கள், உங்களால் அது முடியாது, உங்களுடைய சுவையுணவுக் கலைகள் (gastronomics) அதை ஜீரணமாக்காது. (அவ்வாறு அதைப் புசிப்பீர்களானால்) நீங்கள் சரியாக இல்லை. நீங்கள் அதைச் செய்யவே மாட்டீர்கள், அது நிச்சயமாக ஒரு—ஒருபன்றியை... என்று சொல்லும்படி செய்யாது, அல்லது அது ஒரு ஆட்டுக்குட்டி என்று சொல்லும்படி அது அதை ஒரு ஆட்டுக்குட்டியாக ஆக்கி விடாது. 98136.எனவே சில மதக்கோட்காடுகளைக் கொண்டோ அல்லது கொஞ்ம் உணர்ச்சியைக் கொண்டோ ஒரு நபர், ஒரு கிறிஸ்தவன் என்று அழைக்கப்படலாம்! நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, தேவனுக்கு மகிமை, நான் அந்த இரவில் இராமுழுவதும் ஆவியில் நடனமாடினேன். நான் அந்நிய பாஷைகளில் பேசினேன், ஓ, என்னே, சகோதரன் பிரன்ஹாமே!' என்று கூறலாம். நான் இப்பொழுது பெந்தெகோஸ்தேயினரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். 'நான்-நான்-நான் ஆவியில் நடனமாடினேன். ஓ, நான் உணர்ச்சிகளையும், அவ்விதமான ஒவ்வொன்றையும் கொண்டிருந்தேன். ஆனால் நான் இப்பொழுது உம்மிடம் கூறுகிறேன், அங்கே இயேசுவின் நாமம் என்ற காரியத்தைக் குறித்து நீர் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.' பன்றிக்குட்டியே, அப்படியே தொடர்ந்து போ. நீ இன்னும் ஒரு பன்றியாயிருக்கிறாய், அவ்வளவு தான். 137.'என் ஆடுகள் என் வார்த்தைக்குச் செவி கொடுக்கும்!' நான், 'ஆனால், சகோதரனே, கவனியுங்கள், வேதாகமத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானத்தை எப்பொழுதாவது அவர்கள் கொடுத் திருக்கும் ஒரு இடத்தை எனக்குக் கண்டுபிடித்து (காட்டுங் கள்)' என்று கூறுகிறேன். 138.'அது என்ன செய்கிறது என்பது எனக்குக் கவலை யில்லை, அல்லேலூயா, அந்தப் பழைய இயேசு மாத்திரம் காரியத்தில் எதுவும் எனக்கு வேண்டாம்.' இயேசு மாத்திரம் என்ற காரியத்தைக் குறித்து எதையாகிலும் சொன்னது யார்? நான் வேதாகமத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். இயேசு மாத்திரம் என்பது மதக்கோட்பாடுகள் கொண்ட ஒரு கூட்டம், அது ஒரு ஸ்தாபனங்களின் கூட்டமாகும். ஒருவர் மற்றவரை வேறு ஏதோவென்று அழைக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் இருவருமே அதற்குள் இருக்கிறார்கள். 139.ஆனால் நான் சம்பூரணமுள்ள, உண்மையான, நூறு சதவீத கிறிஸ்தவர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக் கிறேன், அவர்கள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள், பரலோகத்தின் பனித்துளிகள் அவர்களுடைய ஜீவியத்தில் உள்ளன. அதைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு மெதோ டிஸ்டாக இருந்து, அதைப் பெற்றிருப்பீர்களானால், ஆமென்! நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், வார்த்தையை நோக்கிச் சுட்டிக் காட்டுவது தான், அந்த வாத்து தண்ணீரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது போல, நீங்களும் அதைப் பின்தொடருவீர்கள். புரிகிறதா? அது அப்படியே சரியாக உள்ளது. பாருங்கள். அது சரியே. 99140.இன்றைய ஜனங்கள் குறுக்கு வழிகளை விரும்புகி றார்கள். அவர்கள்... ஐ விரும்புவதில்லை. 'தேவனுக்கு மகிமை!' என்பதை நீங்கள் அப்படியே ஒரு நிமிடத்தில் பெற்றுக்கொள்வதாகஅவர்கள்-அவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள். அது என்ன? அவர்கள் செய்கிற இது என்னவாக இருக்கிறது? இன்றிரவு அவர்கள் ஒரு - அவர்கள் அதோ அங்கே வெளியே இருக்கிறார்கள்... நான் பெயர்களை அழைக்கக்கூடிய குறிப்பிட்ட ஜனங்களைப் போன்று அவர்கள் பெற்றிருக்கிற இந்த நபர்களில் சிலரைப் போன்று, ஆனால் நான் அதைச் செய்ய விரும்புவதில்லை, ஏனென்றால் இது ஒலிநாடாவில் உள்ளது, ஆனால் அவர்கள் இன்றிரவு ஒரு கிட்டாரோடு (ஆறு நரம்புள்ள இசைக்கருவி - மொழிபெயர்ப்பாளர்.) ஒரு இரவு விடுதியில் இருந்து, அதை இசைத்து விட்டு, நாளை காலையில் அவர்கள் எங்கோ ஓரிடத்திலுள்ள சபையில் நின்று கொண்டு, அந்த அதே கிட்டாரை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அசுத்தம்!... வேதாகமம், ஏசாயா 20ம் அதிகாரத்தில், 'போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. நாய் தான் கக்கினதற்குப் போவது போலவும், ஒரு பன்றி அதனுடைய சேற்றில் புரளப் போவது போலவும், அவ்வண்ணமே அவர்களும் செய்கிறார்கள்' என்று கூறுகிறது. ஏன்? அவர்கள் இன்னும் நாய்களாகவும் பன்றிகளாகவும் தான் இருக்கிறார்கள்! அதுதான் அவர்களை சேற்றில் புரளும்படி திரும்பிப் போகவும், கக்கினதற்குத் திரும்பிப் போகவும் செய்கிறது. நீங்கள் இன்னும்... அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை. அவர்கள் மறுபடியும் பிறந்திருப்பார்களானால், அவர்கள் புது சிருஷ்டிகளாயிருக்கிறார்கள். 100141.என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் ஒரு வயதான காகத்தைப் பெற்றிருக்கிறீர்கள், அது... ஆக்குவ தில்லை. நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும், நீங்கள் ஒரு புறாவுக்கு இருப்பதைப் போன்று மஞ்சள் கலந்த பச்சையாக (olive) அதற்கு வர்ணந்தீட்ட முடிந்தாலும், ஒரு புறாவைப் போன்று சாம்பல் நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ, அதை முழுவதுமாக வர்ணம் தீட்டினாலும், அது உள்ளிலே இன்னும் ஒரு காகமாகவே இருக்கிறது. பாருங்கள்? அது இன்னுமாக துர்நாற்றமாக இருக்கிறது, அதேவிதமாகவே ஒரு வயதான பருந்து, தோட்டி இருக்கிறது, அது பூமியிலுள்ள மரித்த காரியங்களைத் தின்னுகிறது. அது சரியே. ஆனால் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா, ஒரு புறாவினால் குளிக்க வேண்டியது கூட இல்லை. ஓ, அல்லேலூயா! ஒரு புறாவின் சரீரம், அது ஒரு புறாவாக இருக்கும் காரணத்தினால், அதனுடைய சிறகினூடாக வருகிற எண்ணையை அது பெற்றிருக்கிறது, அது அதனை எல்லா நேரமும் அப்படியே சுத்தமாக வைத்திருக்கிறது, ஏனென்றால் அது உள்ளிலிருந்து வெளியே வருகிறது. ஓ! ஏன்? பருந்தானது, 'நானும் கூட (சுத்தமாக இருக்கிறேன்)! சகோதரனே, நான் கொஞ்சம் பரிசுத்த தண்ணீரை அவைகள் மேல் வைத்திருக்கிறேன், அது அதைச் சரிப்படுத்திவிட்டது' என்று கூறலாம். இல்லை, அது அதைச் சரிப்படுத்தவில்லை. அது உள்ளிலிருந்து வெளியே வருகிறது, வெளியேயிருந்து உள்ளே அல்ல. அது ஒரு பிறப்பாக இருக்கிறது. 'தேவனுக்கு ஸ்தோத்திரம், நீங்கள் சபைக்குப் போவது போலவே நானும் போகிறேன். அல்லேலூயா, உங்களுடைய சபையைப் போன்றே என்னுடைய சபையும் நல்லது தான். அல்லேலூயா, நாங்கள் நீதிமான்கள்...' சரி, பருந்தே. பாருங்கள், அது சரிதான். பாருங்கள்? ஆனால் ஒரு புறாவுக்கு உள்ளிலிருந்து எண்ணெய் பூசப்படுகிறது. அவ்விதமாக மற்ற எந்த பறவையிலும் இல்லாத ஒரு-ஒரு குறிப்பிட்ட சுரப்பி ஒரு புறாவுக்கு இருக்கிறது, புறாவுக்கோ அல்லது மாடப்புறா வுக்கோ அது இருக்கிறது. அது... லிருந்து தன்னைத் தானே எண்ணைய் பூசிக் கொள்கிறது. வெளியே, அது எல்லா நேரமும் தன்னைத்தானே சுத்தமாக வைத்துக் கொள்கிறது. அது தன்னைத்தானே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய தில்லை, அதற்குள்ளிருக்கும் ஏதோவொன்று அதை சுத்தமாக வைத்திருக்கிறது. ஓ, சகோதரி வே அவர்களே, அல்லேலூயா! அதற்குள்ளிருக்கும் ஏதோவொன்று அதைச் சுத்தமாக வைத்திருக்கிறது. 101142.'எனக்குத் தெரியும், நான் சென்ற வாரம் சபையைச் சேர்ந்து கொண்டேன். நான், நான் நிச்சயமாக உன்னோடு அந்த மதுவைக் குடிக்க விரும்புகிறேன், ஆனால், ஊ! உம், அந்தச் சுருட்டு மிகவும் நன்றாக மணக்கிறது! ஓ, சகோதரியே, நான் பழைய மாதிரியான ஒருவன் என்று எனக்குத் தெரியும், நான் இப்பொழுது என்னுடைய தலைமயிரை நீளமாக வளர விட வேண்டியிருக்கிறதே. அது மிக மோசமாக இல்லையா? நான் வழக்கமாக அணியும் அந்த அழகான சிறு உடைகள் உங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவரும், 'வியூ-வியூ' என்று போகிறார்கள், நான் இப்பொழுது அதை அகற்ற வேண்டி யிருக்கிறதே. நான் சென்ற வாரம் சபையைச் சேர்ந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்' என்று கூறலாம். நீங்கள் பரிதாபகரமான பாதகனாயிருக்கிறீர்கள்! இந்த உலகத்திலுள்ள எல்லா புனித தண்ணீருமே உங்களைச் சுத்தமாக்க முடியாது. 143.ஆனால், சகோதரனே, நீங்கள் உங்களுக்குள்ளே ஏதோவொன்றைப் பெற்றிருக்கும் போது, அது எல்லா நேரமும் அதை கழுவி விடுகிறது. நீங்கள் அப்படியே தரித்து நிற்கிறீர்கள், அதுவே கழுவி விடுகிறது. 102144.நீங்கள் ஒரு செம்மறியாட்டிடம், 'நீ உற்பத்தி செய்தாக வேண்டும்' என்று கூற வேண்டியதில்லை. இன்றைய பெந்தெகோஸ்தே ஜனங்களோடுள்ள காரியம் அதுதான். எல்லா கிறிஸ்தவர்களோடுமுள்ள (Christiandom) காரியமும் அதுதான், அது ஏதோவொன்றை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாக உள்ளது. ஒரு செம்மறியாட்டிடம் கம்பளியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கேட்கப்படுவதில்லை; அது கம்பளியை பிறப்பிக்கிறது. நீங்கள் ஆவியின் கனிகளை பிறப்பிக்கிறீர்கள். நீங்கள், 'தேவனுக்கு மகிமை, நான் முகத்தில் கருமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது, நான் இதைச் செய்ய வேண்டும், நான் உணர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும், நான் ஆவியில் நடனமாட வேண்டும், அப்போது நான் அதைப் பெற்றுக் கொண்டேன்' என்று கூற வேண்டாம். இல்லை, இல்லை, உ-ஊ.அப்படியே மறுபடியும் பிறந்து விடுங்கள், அதுதாமே உண்மையில் இடத்தை எடுத்துக்கொள்கிறது. நீங்கள், 'நான் இரவு முழுவதும் படிக்க வேண்டுமா, நான் இதைச் செய்ய வேண்டுமா, நான் அதைச் செய்ய வேண்டுமா, நான் இதைச் சேர்ந்து கொள்ள வேண்டுமா, நான் இந்த மதக்கோட்பாட்டை உண்டாக்க வேண்டுமா, நான் இந்த நோன்புகளைச் செய்ய (இருக்க) வேண்டுமா?' என்று கேட்க வேண்டியதில்லை. இல்லை, இல்லை. அப்படியே மரித்து விடுங்கள், அவ்வளவு தான். பாருங்கள்? மறுபடியும் பிறவுங்கள், அது உள்ளிலிருந்து வந்து, வெளியிலுள்ளதை அக்கறை எடுத்துக் கொள்கிறது. பாருங்கள்? கொஞ்சம் தண்ணீரை தெளித்து, அவர்களைக் கழுவுதல், அப்படியே ஒரு பன்றியை ஆட்டுக்குட்டியாக மாற்றுவதைப் போன்று, உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் உள்ளே அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கு மானால், அது இனிமேலும் ஒரு பன்றியாக இருக்காது. பாருங்கள்? அவை கரடுமுரடான கருத்துக்கள் தான்; ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும் 104.நான் கல்வி கற்றவனல்ல, நான் அப்படியே அதைச் செய்ய வேண்டியதாயுள்ளது. 103145.உங்களுக்குத் தெரியும், அது, நான் அன்றொரு நாள் சிந்தித்துக்கொண்டு, யோவான் ஸ்நானகனுடைய ஜீவியத்தை வாசித்துக் கொண்டிருந்தேன், அவன் என்ன சொன்னான் என்பதை, அவன் அவர்களை என்னவென்று அழைத்தான், 'விரியன் பாம்புக் குட்டிகளே!' என்று அழைத்தான். ஏன்? அவன் வனாந்தரத்தில் வளர்க்கப்பட்டிருந் தான். பாருங்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். உங்கள் கால்களை வேகமாக தரையில் மிதித்தால், அவைகள் மறைவிடத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளும். 'விரியன் பாம்புக் குட்டிகளே.' மேலும், 'கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைத்திருக்கிறது.' மரம், விரியன் பாம்புகள், கோடாரிகள், அவனுக்குத் தெரிந்ததன் பேரிலேயே அவன் பேசினான். அவ்விதமாகத்தான் நீங்கள் தேவனைக் கற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் அறிந்திருக்கிறதன் மூலமாகவே. நீங்கள் ஒரு பன்றியையும் ஒரு ஆட்டுக்குட்டியையும் காண்கிறீர்கள், அங்கே எதுவுமேயில்லை. உங்களால் உருவாக்க முடியாது... நீங்கள் ஒருக்கால் அந்தச் சிறு வயதான பன்றியைக் கழுவலாம், நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொன்றையும் செய்யலாம், அது அப்பொழுதும் ஒரு பன்றியாகவே இருக்கும். அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கக் கூடும் முன்பே அது மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். 104146.குறுக்குவழிகள்! இன்றிரவு அவர்கள் இன்று இங்கே வெளியே இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து போகிறார் கள், ஓ, என்னே, நாளை அவர்கள் பிரசங்கம் பண்ண விரும்புகிறார்கள். பெந்தெகோஸ்தே ஜனங்களும் கூட அதைச் செய்ய அவர்களை அனுமதித்துக் கொண்டிருக் கிறார்கள். ஆமாம். அவர்கள் பரலோகம் (செல்ல) ஒரு குறுக்கு வழியையே விரும்புகிறார்கள், 'அல்லேலூயா, நான் செய்ய வேண்டியது எல்லாம் இங்கே முழங்கால்படியிட்டு, அப்படியே எதையுமே சிந்திக்காமல், 'அல்லேலூயா, அல்லேலூயா, நான் எலியாவின் வஸ்திரத்தை உடுத்திக் கொண்டேன். நான் பிசாசுகளைத் துரத்தும்படிக்கு நாளைக்கு வெளியே (போகப்) போகிறேன். அல்லேலூயா, அல்லேலூயா, நான் அதைப் பெற்று விட்டேன்!' என்று கூறுவதுதான். தேவனுக்கு துதி உண்டாவதாக, இதோ நான் போகிறேன்!' என்று (கூறுகிறார்கள்). அவர்கள் பரலோகத்திற்கு குறுக்கு வழியையே விரும்புகிறார்கள், அவர்கள் உலகப் பிரகாரமாக எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் அதில் எதையுமே எடுக்க முடியாது. அங்கே எந்த குறுக்கு வழிகளும் கிடையாது. நீங்கள் கல்வாரியின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் வெண்கல பலிபீடத்தின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் வெண்கல சர்ப்பத்தின் வழியில் வருகிறீர்கள். நீங்கள் மரிக்கிறீர்கள்! நீங்கள் உண்மையில் மரிக்கிறீர்கள். ஓ தேவனே, நான் ஏன் இதைச் சரியாகக் கூற முடியவில்லை? நீங்கள் மரித்து விடுங்கள்! உண்மையில் உங்களுக்கு நீங்களே மரித்து விடுங்கள். நீங்கள் உலக காரியங்களுக்கு மரித்து புதிதாக பிறக்கிறீர்கள். ஆமென். உலகம் இல்லை, உலக காரியங்கள் மரித்துப் போய் விட்டன. அங்கே எந்த குறுக்கு வழிகளும் கிடையாது. பாருங்கள்? அவர்கள் மிக விரைவாக வர விரும்புகிறார்கள், அவர்கள் வளர விரும்புவ தில்லை. நாம் கர்த்தருக்குள் வளருகிறோம். அதற்கு வளர்ச்சியும் அனுபவமும் அவசியமாயுள்ளது. 105147.இப்பொழுது மேற்கு கடற்கரையிலுள்ள ஜனங்கள் இவ்வாறு கூறுகிறார்கள், 'ஓ, நாங்கள் அழிவில்லாத ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் உனக்குத் தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம், நீ சரியாக அங்கேயே வாலிப மனிதனாகவும், வாலிப பெண்ணாகவும் திரும்பி விடுகிறாய். ஆம், ஐயா. நீ தொடர்ந்து ஆகிக் கொண்டேயிருக்கிறாய்...' என்று. அவர்கள் எலியாவின் வஸ்திரங்களைப் பெற்றுக் கொள்கின்றனர், அவர்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரர்களைப் பெற்றுக் கொள்கின்றனர். 'ஆம், ஐயா, சகோதரனே, தேவன் சரியாக இப்பொழுதே வெளிப்படுத்தப் பட்ட குமாரர்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். வெளிப் படுத்துதல், இவைகளைக் குறித்து அவர்கள் எல்லாரிடமும் கூறுதல். இன்றிரவு நீங்கள் ஒரு பாவியாக இருக்கிறீர்கள், நாளைக்கு நீங்கள் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரர்களாக இருக்கிறீர்கள்.' முட்டாள்தனம்! நீங்கள் வார்த்தையில் எங்கே அதைப் பெற்றுக் கொண்டீர்கள்? குழந்தைகள் மனிதர்களாகப் பிறப்பதில்லை, அவைகள் குழந்தைகளாகப் பிறந்து, மனிதர்களாக வளருகின்றன. 106148.இங்கே கவனியுங்கள், நான் ஒரு நிமிடம் இதைத் திரும்பவும் மேற்கோள் காட்டுகிறேன், எபேசியரில் நான் ஏதோவொன்றை உங்களுக்கு வாசித்துக் காட்டட்டும், 11வது வசனம், 12வது வசனம், ஏறக்குறைய 15வது வசனம், அதுதான் என்று நம்புகிறேன், இங்கு நெடுகிலும் எங்கோ ஓரிடத்தில் அது உள்ளது. நாம் 12வது வசனத்தில் துவங்குவோம். (எபேசியர் 4ம் அதிகாரம் - மொழிபெயர்ப்பாளர்.) பரிசுத்தவான்கள் சீர்போருந்தும்பொருட்டு , சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடை வதற்காகவும், மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி , கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், நாம் இனிக் குழந்தைகளாயிராமல் , மனுஷருடைய சூதும் - சூதும் , உங்களை வஞ்சிக்கிற தற்கேதுவான தந்திரமுள்ள போதகமாகிய (கவனியுங்கள், என்ன போதகம்?) பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கோண்டு (பேசி),... (மேலும், பொறுங்கள், என்ன?)... அன்புடன் சத்தியத்தைப் (அவரே சத்தியமாயிருக்கிறார்) பேசி (speaking)... கவனியுங்கள்! நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கி றீர்களா? அப்படியானால், 'ஆமென்' என்று கூறுங்கள். ளசபையார், 'ஆமென்' என்கின்றனர் - ஆசிரியர்.ன என்ன? ...அவருக்குள் வளருகிறவர்களாயிருக்கும்படியாக... என்ன, நாளைக்கா? இல்லை. ' அவருக்குள் வளருகிறவர்களாயிருக்கும்படியாக.' ...தலையாகிய கிறிஸ்துவுக்குள்... வளருகிறவர் களாயிருக்கும்படியாக - வளருகிறவர்களாயிருக்கும் படியாக... அவருக்குள் வளருகிறவர்களாயிருத்தல்! ஓ, அங்கே... 107149.நான் பிரசங்கம் பண்ணின முதலாவது பிரசங்கம் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் அங்கே எழுந்து நின்று, நான் மிக நன்றாக பிரசங்கம் பண்ணினதாக நான்-நான் எண்ணிக் கொண்டேன், வயதான சீமாட்டிகள் எல்லாரும் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்தனர், அவர்கள் சற்று அழுதனர், உங்களுக்குத் தெரியும், 'ஓ, என்னவொரு அற்புதமான பையன்' என்றனர். 150.வயதான மேய்ப்பராகிய டாக்டர் டேவிஸ் அவர்கள் ஒரு வயதான வழக்கறிஞராயிருந்தார். நான் சென்றேன், அவர், 'நான் உன்னை வீட்டில் சந்திக்க விரும்புகிறேன்' என்றார். 151.நான், 'சரி' என்றேன். அடுத்த நாள், நான் உள்ளே நடந்து சென்றேன், உங்களுக்குத் தெரியும், முழுவதும் பகட்டாரவாரம் கொண்டு, புதுப்பாணி நடையுடை தோற்றம், நான், 'டாக்டர் டேவிஸ் அவர்களே, நான் எப்படி பிரசங்கம் பண்ணினேன்?' என்று கேட்டேன். 'நான் எப்பொழுதும் கேட்டதிலேயே மிகவும் மோசமாக இருந்தது!' என்றார். நான், 'என்ன?' என்றேன். அவர், 'நான் எப்பொழுதும் கேட்டதிலேயே மோசமாக இருந்தது' என்றார். 'ஓ,' நான், 'சகோதரன் டேவிஸ் அவர்களே, எல்லாரும் அழுது கொண்டிருந்தார்களே' என்றேன். 152.அவர், 'ஆமாம், அவர்கள் அடக்க ஆராதனை களிலும் அழுகிறார்கள், குழந்தைகள் பிறக்கும் போதும் அழுகிறார்கள், மற்ற ஒவ்வொன்றிலுமே அழுகிறார்கள்' என்றார். அவர், 'பில்லி, அது என்ன, நீ ஒருபோதும் தேவனுடைய வார்த்தையில் ஒரு துளியளவும் மேற்கோள் காட்டவில்லையே. மரித்துப் போய் விட்ட யாரோ ஒரு தாயாரைக் குறித்து நீ பேசினாய், அல்லது இவ்விதமான ஏதோவொன்றைக் குறித்து பேசினாய், ஒவ்வொருவரும் அழும்படியாக ஆக்கினாய். நீ இந்த உலக காரியங்களின் பேரிலும், இந்த உலகத்தின் உணர்ச்சிகளின் பேரிலும் மறுபடியும் பிறக்கவில்லை, நீ வார்த்தையின் மூலமே பிறக்கிறாய்! பில்லி!' என்றார். 153.ஓ, அவர் சரியாக என்னிடமிருந்து வாயு கடந்து செல்ல காற்றை உடைத்து விட்டார் (cut the wind). அவர் அப்படி செய்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். பாருங்கள்? பாருங்கள்? மேலும் கீழும் குதிப்பதல்ல, உரக்க கத்துவதல்ல, அதுவல்ல அது. அது ஜீவிக்கச் செய்கிற வார்த்தையாகும். வார்த்தையானது உயிர்ப்பிக்கிறது. அனுபவங்கள் அல்ல; வார்த்தை தான். 108154.அவர், 'பில்லி, நான் முயற்சித்த முதலாவது வழக்கு எனக்கு ஞாபகம் வருகிறது. நான் தண்டவாளத்திலேயே தோற்கடித்து விட்டேன். நான், 'இந்தப் பரிதாபகரமான பெண்ணைப் பாருங்கள்' என்றேன்' என்றார். ஓ, அவர், ''அவள் எவ்வாறு காணப்படுகிறாள் என்று பாருங்கள், அவளுடைய கணவன் அவளைக் கொடுமைப்படுத்தி யிருக்கிறான்'என்றேன். நான் கொஞ்சம் அழுது விட்டு, என்னுடைய கைக்குட்டையை எடுத்தேன், நான் மற்ற வழக்கறிஞர்களைப் போன்றே நடந்து கொண்டேன். நானும் அதே உணர்ச்சியினூடாகப் போவதாக எண்ணிக் கொண்டேன். மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே, நீர் ஏன் இவளுக்கு விவாகரத்து கொடுக்கக் கூடாது. அங்கே பாரும்! அவளுடைய கணவன் அவளை பின்னால் முதுகில் அடித்ததாக அவள் கூறுகிறாள்' என்றேன். அவரால் அதைப் பார்க்கக் கூட முடியவில்லை, அவளுடைய ஆடைகளுக்கு அடியில் கீழே அது இருந்தது. 'அவர்கள் அவளை முதுகில் அடித்திருக்கிறார்கள். நீர் ஏன் அவளுக்கு... கொடுக்க மாட்டீர்' என்றேன். அந்த வயதான நீதிபதி அப்படியே அங்கே அமர்ந்து கொண்டு, கவனித்துக் கொண்டிருந்தார். 155.அப்போது மறுபக்கத்தில் நேராக உட்கார்ந்து கொண்டிருந்த அந்த வயதான வழக்கறிஞர், எழுந்து, 'மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே, உம்முடைய நீதிமன்றத்தில் இந்த முட்டாள் இன்னும் எவ்வளவு (நேரம்) நின்று கொண்டிருப்பான்?' என்றார். அப்படியே அதிகமாக தொடர்ந்து பேசிக் கொண்டிருத்தல். 156.அவ்விதமாகத்தான் அநேக ஜனங்கள் செய்கிறார் கள். அதை ஆதரிக்க அதற்குப் பின்னால் போதுமான வார்த்தை இல்லாமலே தொடர்ந்து அதிகமாகப் பேசிக் கொண்டிருத்தல். வளர்ந்து முதிர்ச்சி அடைந்த நிலைக்கு வாருங்கள் (Grow up)! 'ஓ, சகோதரன் பிரன்ஹாமே, அவன் சென்ற இரவு ஆவியில் நடனமாடினான். அவன் சரியாகத் தானே இருக்கிறான்' இல்லை, அது அவனை எனக்குச் சரியாக ஆக்குவதில்லை. இல்லை, ஐயா. வளர்ந்து, நிரூபிக்கப் பட்டு, சோதிக்கப்பட்டு, அவருக்குள் வளருகிறவர்களா யிருந்து, அனுபவமுள்ளவர்களாயிருங்கள். 109157.கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் வரலாறுகளை வாசித்துக் கொண்டிருந்தேன். நான் அதிக நேரம் எடுக்கிறேனா? நான் சபையினுடைய வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கே பின்னாலிருக்கும் சகோதரி ஆர்னால்டு சபையின் வரலாற்றைக் குறித்த ஏதோவொன்றின் பேரில் அன்றொரு நாள் என்னிடம் 'ஆமென்' (amened) என்று கூறினார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் அதை வாசித்து வந்தார்கள். பரிசுத்த மார்ட்டினுடைய நாட்களில், அங்கே ஒரு இரவில் மடாலயத்தில் (துறவி மடத்தில்), ஒரு பையன் இருந்ததைக் கண்டேன், அவன், 'கர்த்தர் என்னை பழைய ஏற்பாட்டினுடைய ஒரு பழங்கால தீர்க்கதரிசியாக ஆக்கியிருக்கிறார். புரிகிறதா? நான் பழங்கால தீர்க்கதரிசி களில் ஒருவன்' என்றான். நல்லது, அங்கேயிருந்த இச்சிறிய பள்ளியின் பிஷப்புடைய பெயரை என்னால் கூற முடிய வில்லை, இங்கேயிருக்கிற இதைப் போன்று வெறுமனே ஒரு சிறு கூட்டம். இச்சமயத்தில் அவருடைய பெயரை என்னால் கூற முடியவில்லை, ஆனால் அவர் மார்ட்டினின் கீழாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தார். அது சரியாகத் தொனிக்கவில்லை, எனவே மற்ற சகோதரர்கள் அவனைத் தனியே விட்டு விட்டனர். அவன் நேரடியாக தீர்க்கதரிசனம் உரைத்து, 'இன்றிரவு தேவன் இறங்கி வந்து, உங்கள் மத்தியில் இருக்கும்படியாக, ஒரு வெண் அங்கியை எனக்குத் தரப் போகிறார், அப்பொழுது நான் பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசிகளில் ஒருவனாய் இருப்பதை நீங்கள் அறிந்து கொள் வீர்கள்' என்றான். எனவே அன்று இரவில், 12 மணிக்கு, உண்மையில் அது சம்பவித்தது. சத்தங்கள் கேட்டன, ஜனங்கள் சுற்றிலும் போய்க் கொண்டிருந்தார்கள், அந்தப் பையனுக்கு ஒரு அங்கி கிடைத்து விட்டது, அது எவ்வளவு வெண்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு வெண்மையாக இருந்ததாக அவர்கள் கூறினார்கள். அவன் வெளியே வந்து, 'நான் உங்களிடம் சொல்லவில்லையா? இப்பொழுது நீங்கள் எல்லாரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். நான் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி' என்றான். 110158.ஆனால் அந்த வயதான பிஷப்போ அது அப்படியே சரியென்று அதற்காகப் போய்விடவில்லை. அது வார்த்தையாக இருக்கவில்லை. தீர்க்கதரிசிகள் உருவாக்கப் படுவதில்லை, அவர்கள் முன்குறிக்கப்பட்டவர்கள். ஒரு தீர்க்கதரிசி துவக்கத்திலேயே அவ்விதமாக நடந்து கொள்ள வில்லை. அது அவ்வாறு இல்லை என்று அதன் கனி நிரூபித்தது. பாருங்கள்? அது ஒரு தீர்க்கதரிசி அல்லவென்று கனிகள் நிரூபித்தன, பாருங்கள். எனவே அவன், 'நாம் மீதியுள்ள இரவை உபவாசித்து ஜெபிப்பதிலும், கீர்த்தனைப் பாடல்களைப் பாடுவதிலும் செலவழிப்போம்' என்றான். ஒரு நாள் அல்லது அவ்வண்ணமாக கழிந்தது. சற்று கழிந்து, அந்த வயதான பிஷப், ஜெபித்து, 'கர்த்தாவே, அந்தப் பையன்!' என்றார். அந்த வஸ்திரம், அவர்கள் அதைப் பார்த்தனர்... அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை, அதைப் போன்ற எதையும் கண்டதுமில்லை. எழுத்தாளர்கள் வந்து, அதைப் பார்த்தனர், அதைப்போன்ற எதையும் அவர்கள் ஒருபோதும் கண்டதேயில்லை. அங்கே அது இருந்தது. கடைசியாக, தீர்க்கதரிசியாக இருந்த ஒரு மனிதனை அவர்கள் அறிந்திருந் தார்கள், அதுதான் மார்டின். அவர்கள், 'சரி, இப்பொழுது எங்களுக்கு நிரூபித்துக் காட்ட நீ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். வேதப்பூர்வமாக நீ தவறாயிருக்கிறாய். நீ மார்டினிடம் போய், அவருக்கு முன்பாக நின்று, அதை அவரிடம் கூறுவதைக் குறித்து என்ன?' என்றார்கள். பாருங்கள்? அவன், 'ஓ, மார்டின் முன்பாக நிற்க நான் அனுமதிக்க மாட்டேன்' என்றான். 111159.நல்ல தங்கத்தை வைத்திருக்கிறவன் பரிசோதிக்கும் இயந்திரத்திற்குப் (testing machine) போக பயப்பட மாட்டான்; உ-ஊ, அது சரியே, சத்தியத்தைப் பெற்றிருக்கிறவன். ஆகையால் தான் நான் சவால் விடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் எங்கே தவறு என்று எந்த மனிதனும் வந்து எனக்குக் காண்பிக்கட்டும். மரிக்கும்படியாக நீங்கள் பெற்றிருக்கிற இந்தப் பிறப்பை எனக்குக் காண்பியுங்கள். நீங்கள் இன்னும் உலகத்தை உங்களுக்குள் வைத்திருந்தால், நீங்கள் இன்னும் உலகத்தினுடையவர்களாயிருக்கிறீர்கள். இந்தக் காரியங்களை எனக்குக் காட்டுங்கள். அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அதை பரிசோதிக்கும் இயந்திரத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். இதோ இருக்கிறது பரிசோதிக்கும் இயந்திரம். பாருங்கள்? பாருங்கள்? அது சரியே. 160.எனவே அவர்கள், 'நீ எப்படியும் போகிறாய்' என்றார்கள். ஒரு கூட்டம் சகோதரர்கள் அவனைத் தூக்கிச் சென்றனர், அப்போது அந்த அங்கி மறைந்து விட்டது. பாருங்கள்? இன்று பெந்தெகோஸ்தே ஜனங்கள் அதை எவ்வித கேள்வியுமின்றி நம்ப மாட்டார்களா? ஓ, என்னே! அது உண்மையான காரியத்தைப் போன்றே தோற்றமளித்தது, ஆனால் அது வார்த்தையின்படியாக இருக்கவில்லை. 112161.ஒருமுறை சாத்தான் மார்டினுக்குத் தோன்றினதாக அவர் கூறினார், மகத்தான பொற்கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருந்தான், அதில் இவ்விதமாக அழகாகச் செய்யப் பட்ட மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்கள் இருந்தன, அது ஜொலித்துக் கொண்டும், அழகாகவும் இருந்தது, அவன் மகத்தான பெரிய ஆளாகவும், அருமையானவனாகவும், அழகானவனாகவும், சரியாகத் தலையைச் சீவிக் கொண்டிருந்தவனாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும், மகத்தான அழகுடைய அங்கியை அணிந்தவனாகவும், அவனது கால்களில் அணிந்திருந்த அவனுடைய காலணிகள் பொன்னாகவும் இருக்க வெளியே நடந்து வந்து, 'மார்டின், என்னை உனக்குத் தெரிகிறதா?' என்று கேட்டான். 162.இப்பொழுது தரிசனங்களைக் காணாத ஜனங்கள், இது ஒருக்கால் இல்லாமல் இருக்கலாம் - இது ஒருக்கால் இல்லாமல்... இருக்கலாம். நீங்கள் ஒருக்கால் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், பாருங்கள், ஆனால் காரியங்கள் எப்படியாக வெவ்வேறு ஆவிகளில் உங்களிடம் வந்து, அவைகள் எப்படியாக வஞ்சித்துக் கொண்டிருக்கின்றன. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவைகள் வஞ்சிக்கும் என்று வேதாகமம் கூறுகிறது, பாருங்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், அந்த நோக்கத்திற்காகப் பிறந்தவர்கள். பாருங்கள்? பாருங்கள்? 113163.எனவே அவன் இந்த தெரிந்து கொள்ளப்பட்ட வனிடம் வந்து, 'மார்டின், என்னை உனக்குத் தெரிகிறதா? நான் தான் கிறிஸ்து. என்னை அடையாளம் கண்டு கொள்வாயா?' என்றான். மார்டின் தயங்கினார். அது வினோத மாகத் தோன்றியது. அவர் ஒரு நிமிடம் காத்திருந்தார், அவன் மீண்டும் சொன்னான், அவன், 'நீ என்னைக் காண வில்லையா? நான் தான் கிறிஸ்து. என்னை அடையாளம் தெரிகிறதா (recognize)?' என்றான். மூன்று நான்கு தடவைகள் அவன் அவ்வாறு அவரிடம் கூறினான். 164.கிறிஸ்து சொன்னார், அல்லது மார்டின், 'சாத்தானே, உன்னை எனக்குத் தெரியும். என்னுடைய ஆண்டவர் இன்னும் கிரீடம் தரிக்கவில்லை, ஆனால் அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு கிரீடம் சூட்டுவார்கள்' என்றார். அங்கே பின்னால் வார்த்தை இருந்தது. 165.அங்கே தான் ரோம சபையானது அதிகமான மதக்கோட்பாட்டை பெற்றுக்கொண்டது, அசுத்த ஆவிகள் உள்ளே வந்து கொண்டிருக்கின்றன, அவைகள் வார்த்தைக்கு முரணாக உள்ளன, அவர்கள் தங்களுடைய மதக்கோட் பாட்டை ஏற்றுக்கொண்டு, வேதாகமத்திலிருந்து விலகிச் செல்ல வார்த்தையை மறுதலிக்க வேண்டியிருந்தது. வார்த்தை யோடு தரித்திருங்கள்! அதுதான் இன்று ஜீவக்கயிறாக உள்ளது. அங்கே ஆவிகள் எழும்பி வரும், சற்று கழிந்து அது ஏறத்தாழ எல்லாவற்றையும் வஞ்சித்துப் போடும். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. 'யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, இம்மனிதர்கள் சத்தியத்தைக் குறித்த விஷயத்தில் நெறிகெட்ட சிந்தை (reprobated mind) உள்ளவர்களாய் இருப்பார்கள்,' இவர்கள் அற்புதங்களையும் எல்லாவித அடையாளங்களையும் செய்கிறவர்கள். ஆனால் வார்த்தையோடு தரித்திருங்கள். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்து, அவர்கள் அதை உரைத்தார்கள், நாம் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம். 166.கவனியுங்கள், ஆமாம், அவர், 'சாத்தானே, நான் உன்னை அறிவேன். என்னுடைய ஆண்டவர் இவ்விதமாக ஒரு பெரிய மனிதராக இல்லை. என்னுடைய ஆண்டவர் கரடுமுரடான பழைய வஸ்திரத்தை அணிந்து கொண்டு, தம்முடைய கரத்தில் ஆணி கடாவப்பட்ட வடுக்களை உடையவராய், கிரீடம் தரிக்காதவராய் (uncrowned), இரத்தம் தோய்ந்த தலைமயிரை உடையவராய் தூரமாகப் போயிருக்கி றார். அவர் திரும்பி வரும்போது, அவர் அவ்விதமாகவே வருவார், அவர் எப்படி போனாரோ அந்தவிதமாகவே திரும்பி வருவார் என்று வேதாகமம் கூறுகிறது' என்றார். அப்போது அந்தக் காரியம் அவரை விட்டு மறைந்து போனது. ஓ, என்னே! 114167.அவன் எப்படியாக உள்ளே வந்து, அதை அப்படியே மிக அழகாக ஆக்கி விடுகிறான், 'ஓ, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்களே. அவர்கள், அவர்கள், அவர்கள் நீ எப்போதும் கண்டதிலேயே மிகச்சிறந்த ஜனங்கள்' (என்பான்). நீங்கள் அதை நம்பி விடாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். 168.வார்த்தையானது உங்களுக்கு சலிப்பூட்டுகிறதாக இல்லை என்று நம்புகிறேன். பிறந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் ஜீவிக்கையில், கிறிஸ்துவின் உயரத்திற்குள் வளருகிறார்கள். அவர்கள் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள், அவர்களுடைய ஜீவியங்கள் ஒரு குழந்தையைப் போன்ற உருவத்திற்கு வரத் துவங்குகிறது, அது வடிவத்தை எடுத்து, வளரத் துவங்குகிறது. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், இதோ அவர்கள் முழு வளர்ச்சியடைந்தவர்களாக (full stature) இருக்கிறார்கள். ஆமென். அவ்விதமாகத்தான் காரியம் உள்ளது. நாள்தோறும், வருடத்திற்குப் பின் வருடமாக அவர்கள் அதேநிலையில் தொடர்ந்து இருக்கிறார்கள். இப்பொழுது, 'நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்!' என்ற வார்த்தைக்கு திரும்பி வருகிறார்கள். 115169.அவர்கள், 'நான் மறுபடியும் பிறந்து விட்டேன், அல்லேலூயா, நான் அவர்களைச் சேர்ந்து கொண்டேன். நான்இதைச் சேர்ந்து கொண்டேன். நான் சேர்ந்து கொண்டேன். எனக்குத் தெரியவில்லை, கடந்த வருடம் நான் இயேசுவின் நாமத்தை நம்பினேன். இப்பொழுது நான்-நான் அதை விட்டு நீங்கி விட்டேன், நான்-நான் இதை விசுவாசிக்கிறேன். நீங்கள் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டியிருந்தது என்று நான் நம்பி னேன், ஆனால் நான்-நான்... இன்னார் இன்னார் கூறி னார்கள்...' என்று கூறுகிறார்கள். அலைந்து திரிகிறவர்கள், ஒவ்வொரு உபதேசக் காற்றினாலும் அலைகழிக்கப்படு கிறவர்கள். பாருங்கள்? அவ்விதமாகத்தான் காரியங்கள் உள்ளன. 170.ஆனால் நீங்கள் ஆவியினால் பிறந்து, கிறிஸ்துவின் உயர்ந்த நிலைக்குள் வளருங்கள்! சகோதரன் டாச் (Brother Dauch) அவர்களே, உங்களுக்கு அது புரிகிறதா? கிறிஸ்து வினுடைய நிறைவான வளர்ச்சிக்கு (the stature of Christ) வளருதல்! உங்களுடைய ஜீவியத்தின் மூலமாக, அது நிரூபிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக பிறந்திருப் பீர்களானால், நீங்கள் அவ்விதமாகவே தொடர்ந்து இருப்பீர் களே, அது போல. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகப் பிறந்திருப்பீர்களானால், நீங்கள் அவ்விதமே தொடர்ந்து இருப்பீர்கள். 'நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத் திருந்தால்!' இது உங்களை கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சி (the stature of Christ) வரைக்கும் வளர்க்கிறது. யாரோ ஒரு வாலிப வழக்கறிஞர் தோற்கடிப்பதோ, அலறிக் கூச்சலிடுவதோ, அழுவதோ, இதை, அதை, மற்றதை உங்களிடம் சொல்லுவதோ, அநேக உணர்ச்சிகளை உண்டாக்கிக் கொள்வதோ அல்ல; ஆனால் கிறிஸ்துவி னுடைய நிறைவான வளர்ச்சிக்கு வளருகிற யாரோ ஒருவர் வருட முழுவதும் சோதனைகள் மூலமாகவும் அனுபவங்கள் மூலமாகவும் தகுதியுள்ளவனாக நிரூபிக்கப்பட்டு, தலைமைத்துவ நிலையில் (helm) வேறு எதுவுமல்ல! 'கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நாம் நிற்கிறோம், மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலே. ஸ்தாபனங்களும் மதக்கோட்பாடுகளும், இஸம்களும் வரலாம், போகலாம்; கர்த்தாவே, என்னைத் தாழ்மையாக வைத்திரும், நான் சரியாக வார்த்தையோடு தரித்திருந்து, வெள்ளத்தி னூடாக நான் தொடர்ந்து போவேனாக. அவள் எங்களைக் கரைக்கு வழிநடத்திக் கொண்டு போவாள்.' நிறைவான வளர்ச்சி (Full staturement). 116171.இப்பொழுது கவனியுங்கள், அது எவ்வாறு சம்பவிக்கிறது என்பதை நாம் காண்போமானால், மரணத் திற்குப் பிறகு நீங்கள் மாற்ற முடியாது. இப்பொழுது உள்ளே வந்து, எல்லா உணர்ச்சிகளையும் காரியங்களையும் பெற்றுக் கொண்டு, வெளியே ஓடி விடும் இந்த ஜனங்களைக் கவனியுங்கள், அவர்கள் நாளைக்குஇந்த விதமாய் இருக்கி றார்கள். நீங்கள் அதைக் கண்டிருக்கிறீர்களா? அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியிருக்கிறார்கள். பாருங்கள்? நீங்கள் பாருங்கள், என்ன நடக்கிறது என்று நீங்கள்-நீங்கள் பாருங்கள். இப்பொழுது அந்த ஜனங்கள் அந்நிலையிலேயே மரித்துப் போவார்களானால் என்னவாகும்? மரணம் அதை மாற்றி விடுவதில்லை. 172.எனவே, ஓ, கிறிஸ்தவர்களே, முடிவாக, இந்த வார்த்தைகள், நான் இதைக் கூறட்டும். நாம் அவரிடம், அவருடைய வார்த்தையிடம் முழு உத்தமத்தோடு திரும்பு வோம். கிறிஸ்தவர்களைப் போன்று, தாழ்மையோடு வாருங் கள், அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாய் இருங்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, நீங்கள் கொடுக்கும் கனிகளின் மூலமாக நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று நிரூபிக்கப்படுகிறீர்கள். சகோதரி பிக்கன்பா (Sister Peckenpaugh) அவர்களே, உங்களுக்கு அது புரிகிறதா? நீங்கள் கொடுக்கும் உங்கள் கனிகள் மூலமாக நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள். 'அவர்களுடைய கனிகளி னாலே அவர்களை அறிவீர்கள்.' அதுவே நிரூபணம். நீங்கள் ஒருக்கால் உங்களுடைய அஆஇ-களையும் அறிந்திராமல் இருக்கலாம், ஆனால் அப்படியிருப்பினும் நீங்கள் ஒரு சீமாட்டியாக, ஒரு கிறிஸ்தவளாக இருக்க முடியும். நீங்கள் ஒருக்கால் உலகத்தால் பகைக்கப்படலாம், (நீங்கள் செய்த ஏதோ காரணத்தினால் நீங்கள் அவ்வாறு பகைக்கப்படுவீர் களானால், நீங்கள் அப்படி இருக்க வேண்டும்), ஆனால் நீங்கள் அவர் நிமித்தமாக பகைக்கப்படுவீர்களானால், அது வித்தியாசமானது. 117173.நீங்கள் ஒருக்கால் இல்லாமல் இருக்கலாம் - நீங்கள் ஒருக்கால் ஒரு வேதசாஸ்திரியாக (theologian) இல்லாமல் இருக்கலாம். பிறவியிலேயே குருடனாயிருந்த அந்தக் குருடனைக் கவனித்துப் பாருங்கள். இயேசு அவனைச் சுகமாக்கினார். அவன் பிறவியிலேயே குருடனாகப் பிறந்திருந்தான், அவனுக்கு கண் விழிகள் கூட இல்லா திருந்தது. இயேசு அவனைச் சுகமாக்கினார், அவனைக்குணமடையச் செய்தார். அந்த மனிதனால் பார்க்க (முடிந்த) போது, பரிசேயர்கள் அவனிடம் கேள்வி கேட்டனர், அவர்கள், 'அவர் யார்?' என்று கேட்டனர். ஏதோவொன்று செய்யப்பட்டிருந்ததை அவர்களால் மறுக்க முடியவில்லை. இப்பொழுது, அம்மனிதன் ஒரு வேதசாஸ்திரி அல்ல. பிரசங்கிமார்கள் வாதிடுவது போன்று அவனால் வாதிட முடியவில்லை, கொஞ்சம் தேர்ந்த நுட்பத்தோடுள்ள காரியங்களைக் கொண்டு அவனால் அவர்களிடம் விளக்கிக் கூற முடியவில்லை. அவனுக்கு வேதாகமம் (Testament) தெரியாது. மேசியா எப்படி பிறக்க வேண்டியிருந்தது என்றோ, அவர் செய்ய வேண்டியிருந்த கிரியைகளோ அவனுக்குத் தெரியாதிருந்தது. அந்த மனிதனுக்கு அது தெரியாது. அவன் ஒரு வேதசாஸ்திரி அல்ல. ஆனால் அவன் என்ன செய்தான்? அவர்கள், 'தேவனுக்கு துதியைச் செலுத்து. நாங்கள் வேத சாஸ்திரிகள், அவன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்றார்கள். 118174.இப்பொழுது அந்த மனிதனால் அவர்களுடைய வார்த்தையை மறுக்க முடியவில்லை, ஆனால் அவன் என்ன கூறினான் என்பது இதோ இருக்கிறது, வேறு வார்த்தைகளில் கூறினால், 'அவர் ஒரு பாவியாக இருந்து, இதைச் செய்திருப்பாரென்றால், மனிதர்களாகிய உங்களோடுள்ள காரியம் என்ன? உங்கள் யாவரோடும் உள்ள காரியம் என்ன?' என்று (கூறுவது). பாருங்கள்? அவன், 'அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது, என்னால் அதைக் கூற முடியாது. ஆனால் இந்த ஒரு காரியம் எனக்குத் தெரியும், அங்கே நான் ஒருகாலத்தில் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்' என்றான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் நிரூபித்துக் கொண்டிருந்தான். அது சரியே. அவன் நிரூபித்துக் கொண்டிருந்த ஒருவனாக இருந்தான். அவனுக்கு ஏதோ சம்பவித்திருந்தது. அவனுடைய சுபாவம் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, குருடான நிலையி லிருந்து பார்வைக்கு மாறியிருந்தது. 175.தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதன், அவன் ஒருகாலத்தில் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, வார்த்தையையும், அதின் பெலனையும் மறுதலிக்கிறவனா யிருந்து, 'அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டன' என்று கூறியிருந்தாலும், அவன் மறுபடியும் பிறக்கும் போது, அவன் ஒருக்கால் ஒரு பண்டிதனாக இல்லாமல் இருக்கலாம், அவன் அதை விளக்கிக் கூற இயலாதவனாக இருக்கலாம், ஆனால் அவன் அதை விசுவாசிக்கிறான்... ஐ போன்று. 119176.இங்கேயிருக்கும் என்னுடைய கறுப்பின சகோதரர் களும் சகோதரிகளும் நான் இதைக் கூறுவதற்காக என்னை மன்னிப்பீர்களானால், தெற்கில் ஒரு வயதான நல்ல கறுப்பின சகோதரன் இருந்தார், அவர்கள் அவரைக் குறித்து ஒரு சிறு கதையைக் கூறினார்கள், அவர் ஒரு வேதாகமத்தை சுமந்து கொண்டிருந்ததாகக் கூறினார்கள், அவரால் தம்முடைய பெயரைக் கூட வாசிக்க முடியவில்லை. அவன், 'மோஸ், நீ ஏன் அந்த வேதாகமத்தை சுமந்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டான். அவர், 'அது தேவனுடைய வார்த்தை' என்றார். அவர்கள் கூறினார்கள், நல்லது, 'நீ அதை விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டார்கள். 177.அவர், 'ஆம், ஐயா, நான் நிச்சயமாகவே அதை விசுவாசிக்கிறேன். நான் அதை 'ஸ்ரீண்ஸ்ங்ழ்' லிருந்து 'ஸ்ரீண்ஸ்ங்ழ்' வரைக்கும் விசுவாசிக்கிறேன், அந்த 'ஸ்ரீண்ஸ்ங்ழ்'ஐயும் விசுவாசிக்கி றேன், ஏனென்றால் அது பரிசுத்த வேதாகமத்தில் எழுதப் பட்டுள்ளது' என்றார். 178.'அது பரிசுத்த வேதாகமம் என்று உனக்கு எப்படித் தெரியும்? அது அப்படியிருக்கிறது என்று உனக்குத் எப்படித் தெரியும்?' என்று கேட்கப்பட்டது. 179.அவர், 'நான் அப்படியே அதை விசுவாசிக்கிறேன். அவ்வளவு தான்' என்றார். அவர் கொண்டிருக்க வேண்டியிருந்தது அவ்வளவு தான். அவர் அப்படியே அதை விசுவாசித்தார். ஏனென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் அதை விசுவாசித்தார். 180.அவர்கள் அவரிடம், 'மோஸ், நீ, செய்யும்படி வேதாகமம் கூறுகிற எதையும் நீ செய்வாயா?' என்று கேட்டார்கள். 'ஆம், ஐயா.' அவர், 'வேதாகமம் அவ்வாறு கூறினால், நான் அதைச் செய்வேன்' என்றார். உங்களுக்குத் தேவை யானது இதோ இருக்கிறது. 181.அவன், 'சரி, மோஸ். இப்பொழுது, என்னவென்றால், அங்கே கல்லினால் ஆன அந்த வேலி இருந்து, அந்தக் கல் வேலி வழியாக குதிக்கும்படி கர்த்தர் உன்னிடம் கூறினால், நீ அதைச் செய்வாயா, நீ அந்தக் கல் வேலி வழியாக எப்படி குதிப்பாய்?' என்றான். 182.அதற்கு அவர், 'அந்தக் கல் வேலி வழியாக குதிக்க வேண்டுமென்று மோஸிடம் வேதாகமம் கூறுகிறதா?' என்றார். பாருங்கள்? 183.அவன், 'ஆனால் தேவன் உன்னிடம் பேசி, அந்தக்கல் வேலியின் வழியாக குதிக்க வேண்டுமென்று அவர் உன்னிடம் கூறுவாரானால், என்னவாகும்?' என்று கேட்டான். அவர், 'அது தேவனாக இருந்து, நான் குதிக்கும்படி அவர் என்னிடம் கூறுவாரானால், நான் குதிப்பேன்' என்றார். 184.அவன், 'அந்த வேலியில் ஒரு துளையும் இல்லாமலே நீ எப்படி அதனூடாகப் போவாய்?' என்று கேட்டான். 185.அவர், 'அது தேவனாக இருக்குமானால், மோஸ் அங்கே போகும் போதே அவர் அந்தத் துளையை அங்கே உடையவராயிருப்பார்' என்றான். அது சரியே. சரி! 120186.நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள தைரியமாய் இருந்து, அங்கேயே நின்று, அது அவ்வண்ணமே இருக்கிறது என்று கூறுங்கள்! இந்தச் சிறு பரிதாபகரமான பதட்டமாக இருக்கிற பெண்மணி இங்கே இருக்கிறாள். அவள் மரிக்கப் போகிறாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள், மற்ற எல்லாமே அவளுக்கு தவறாக இருக்கிறது, பாருங்கள். நீ மரித்துக் கொண்டிருக்கவில்லை! 'சகோதரன் பிரன்ஹாமே, நான் எப்படி மரிக்காமல் இருக்க முடியும்?' என்று கூறலாம். அப்படியே ஒருவிசை அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதன் மேல் அடி வைத்து நடவுங்கள். அந்த வார்த்தையின் பேரில் நின்று, என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். பிசாசு ஒரு பொய்யன் என்று அவனிடம் கூறுங்கள். இந்த வருஷங்கள் எல்லாம் உனக்கு மாதவிடாய் இருந்து வருகிறது, உனக்கு ஏறுக்குறைய 57 வயதாகிறது. அந்தக் காரியத்தை மறந்து விடு, அது பிசாசு! தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, 'அவருடைய தழும்புகளால் குணமாகிறேன்' என்று கூறி, என்ன நடக்கிறது என்று கவனித்துப் பார். அப்படியானால், உனக்கு மாரடைப்புகளும் மற்றும் ஒவ்வொன்றும் இருக்கிறது என்று நினைப்பதை நீ நிறுத்தி விடுவாய். உனக்கு எந்த மாரடைப்புகளும், அந்த எல்லா காரியங்களும் கிடையாது. அது ஒரு பொய்யாக இருக்கிறது. உனக்கு அது இல்லை. அப்படியே தேவனுடைய வார்த்தையை விசுவாசி. அது சரியே. 121187.நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, தேவன் உங்களை நிரூபிக்கிறார். அவ்வாறு தான் தேவன் தம்முடைய இயற்கை எல்லாவற்றையும் நிரூபிக்கிறார். எதைக்கொண்டு? அவர்களுடைய கனிகளைக்கொண்டு. அந்தவிதமாகத்தான் அவர் தம்முடைய ஊழியத்தை நிரூபிக்கிறார். அது சரியே. அவருடைய ஊழியக்காரர்கள் எல்லாரும் அவர் இயற்கையை நிரூபிக்கிற அதேவிதமாகவே நிரூபிக்கப்படுகிறார்கள். அது ஒரு பீச் மரம் என்று நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறீர்கள்? காரணம் என்னவென்றால், அது பீச் பழங்களைக் (peaches) கொடுக்கிறது. அது ஒரு ஆப்பிள் மரம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அது ஆப்பிள் பழங்களைக் கொடுக்கிறது. அது ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? கிறிஸ்தவனுடைய அடையாளங்கள் அதிலிருந்து பிறப்பிக்கப்படுகிறது, கிறிஸ்தவ ஜீவியம் அதிலிருந்து வருகிறது. அவர் ஒரு போதகர் என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? வார்த்தை அவரிட மிருந்து வருகிறது. அவன் ஒரு தீர்க்கதரிசி என்று உங்களுக்கு எப்படி தெரிகிறது? வார்த்தை அவன் மூலமாக வந்து, சாட்சி கொடுக்கிறது, மெய்ப்பித்துக் காட்டுவது. அது தன்னைத்தானே நிரூபிக்கிறது. அது எப்படி அவ்விதம் ஆகிறது? அது மரிக்கும் போது, அதுவாக ஆகிறது. அது சரியே. நாம் மரித்து, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக ஆகும் போது, அது நம்முடைய அழைப்போடு நம்மிடம் வருகிறது, நாம் நம்முடைய அழைப்பில் தரித்திருக்கிறோம். நாம் அவருடைய ஊழியக்காரர்களாக இருக்கும்போது, ஆவியின் கனிகள் நம்மைப் பின்தொடரு கின்றன. நாம் மறுபடியும் பிறக்கும் போது, கிறிஸ்துவினுடைய ஜீவனின் கனிகள் நம்மைப் பின்தொடருகின்றன. அது சரியே. அது ஒரு பீச் மரம் என்று உங்களுக்கு எப்படி தெரிகிறது? அதில் பீச் கனிகள் (peaches) உள்ளன. அவன் ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர் கள்? அவன் கிறிஸ்துவைப் போன்று செயல்படுகிறான், அவன் கிறிஸ்துவைப் போன்று நடந்து செல்கிறான், அவன் கிறிஸ்துவைப் போன்று பேசுகிறான், அவன் கிறிஸ்துவைப் போன்று பாவத்திற்கு மேலாக வெற்றியோடு ஜீவிக்கிறான். அவன் என்ன செய்கிறான், 'நான் என்ன செய்திருக்கிறேன் என்று பாருங்கள்' என்று கூறலாம். கிறிஸ்து அவ்விதம் செய்யவில்லை. அவர் எல்லா துதியையும் பிதாவுக்கே கொடுத்தார். அது சரியே. அவ்வாறு தான் நீங்கள் அதை அறிந்து கொள்கிறீர்கள். அவர்களுடைய கனிகளினாலே, நீங்கள் அவர்களை அறிந்து கொள்வீர்கள். என்ன... கட்டாயமாக. 188.'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ளக் கூட முடியாது என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.' 122189.எனவே இது என்னுடைய புது வருட செய்தி அல்ல, இங்கே 12:30 மணி அல்லது 1 மணிக்கு 20 நிமிடங்கள் உள்ளன, ஆனால் கிறிஸ்தவனே, தேவனை நேசிக்கிறவர் களே, இது உனக்கு நான் கொடுக்கும் புத்திமதி. நீங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வெண்கல பலிபீடத்திற்கு வந்து, நீங்கள் மறுபடியும் பிறக்க விரும்பும் போது, அப்படியே உங்களைத் தானே அங்கே அதன்மேல் கிடத்துங்கள். (அதிலிருந்து) மறுபடியும் எழும்பி விடலாம் என்று எதிர்பார்க்க வேண்டாம், நீங்கள் மரிக்கப் போகிறீர்கள். அது உங்களுடைய முடிவாக உள்ளது. அவ்வளவு தான். நீங்கள் அதைச் செய்யாமல், உங்களால் அதைச் செய்ய முடியும் என்பது போன்று நீங்கள் உணரவில்லை என்றால், அதைச் செய்ய வேண்டாம், அதை முயற்சிக்கவே வேண்டாம், அது கிரியை செய்யாது; ஆழ்ந்த உத்தமத்தோடு. இந்த பாடத்தைக் குறித்து, ஏறக்குறைய பத்து பக்கங்கள் அல்லது இன்னும் அதிகமான வேத வாக்கியங்களை இங்கே (வைத்திருக்கிறேன்), நான் நிறுத்தி விடுகிறேன். ஆனால் நீங்கள் உங்களைத்தானே தேவனுடைய நியாயாத்தீர்ப்பின் தேவனுடைய வெண்கல பலிபீடத்தின் மேல் கிடத்துங்கள், கிறிஸ்துவைப் போன்று உலகத்திற்கு அவ்வளவாக மரித்தவர் களாக ஆகி விடுங்கள். பாருங்கள்? ஏதேன் தோடத்தில் இருந்த நியாயந்தீர்க்கப்பட்ட சர்ப்பத்தைப் போன்று அவ்வளவு மரித்தவர்களாக வாருங்கள், அது வெண்கல சர்ப்பத்தின் வடிவத்தில் குறித்துக்காட்டப்பட்டிருந்தது, அதில் எந்த ஜீவனுமே இல்லாதிருந்தது. அதனுடைய ஜீவன் எல்லாமே போய் விட்டிருந்தது. கிறிஸ்து உயிரற்றவராக இருந்தார், அவர்கள் அவரை சிலுவையிலிருந்து எடுத்து, அந்தக் கல்லறையில் அவரை அடக்கம் பண்ணினார்கள். அவர்-அவர் மரித்திருந்தார். அதன்பிறகு அவர் நாம் நீதிமானாக்கப்படுவதற்காக உயிர்த்தெழுந்தார். மேலும் நாமும் நம்முடைய ஆட்டுக்குட்டியானவரோடு கூட பலிபீடத்தின் மேல் மரித்து, அவருடைய நீதிமானாக்கப்படுதலில் மறுபடியும் உயிர்த்தெழுந்து விட்டோம். நாம் அதை எப்படி அறிவோம்? காரணம் என்னவென்றால், அந்த மரித்த நிலையிலிருந்து அவரை உயிரோடெழுப்பின அவருடைய ஜீவன், அந்த அதே ஜீவனானது, நம்முடைய உலகப்பிரகாரமான மரித்த நிலையிலிருந்தும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாக நம்மை உயிர்த்தெழச் செய்கிறது, அதன்பிறகு பரிசுத்த ஆவியின் மூலமாக, நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் தேவனுடைய இராஜ்யத் திற்குள் முத்திரையிடப் படுகிறோம். 123190.'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவனால் தேவனுடைய இராஜ்யத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன்.' அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்களால் அது முடியாது என்று இயேசு சொல்லியிருக்கிறார். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 191.இப்பொழுது, 'ஓ கர்த்தாவே, எனக்கு ஒரு உணர்ச்சியைத் தாரும்' என்று கூறிக்கொண்டு, கண்மூடித் தனமாக நடந்து சென்று விடவேண்டாம், அப்படி செய்யா தீர்கள், 'கர்த்தாவே, நான் உம்மிடம் கூறுகிறேன்.' வேண்டாம். அப்படியே, 'கர்த்தாவே, என்னைக் கொன்று, உலகத்தை என்னை விட்டு எடுத்துப் போடும். நான்-நான்-நான் இன்னும் உலக காரியங்களை நேசிக்கிறேனே' என்று கூறுங்கள். நான் சிருஷ்டியையோ, சூரிய அஸ்தமனத்தையோ, அழகையோ, அதைப் போன்ற காரியங்களையோ அர்த்தப்படுத்தவில்லை, நான் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் இச்சையைக் குறித்தும், அசுத்தத்தைக் குறித்தும், உலக ஒழுங்கைக் குறித்துமே எண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றைக் குறித்தும். அப்படியே, அவர்கள் அப்படியே மரிக்கிறார்கள், அப்படியே தாமாகவே மரிக்கிறார்கள், நீங்கள் எதையும் பெற்றிருக்கவில்லை... அவர்கள் அதற்கு மேலும் உங்களைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு துர்நாற்ற மாக ஆகி விடுகிறார்கள், 'உ, ஜனங்கள் அவைகளில் எப்படி ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண மாட்டேன்.' நீங்கள் உரக்கக் கத்துகிறீர்கள். நீங்கள் அதை அதிகமாகக்காணும்தோறும், நீங்கள் மோசமானதைப் பெற்றுக்கொள்கி றீர்கள்! ஆம், ஐயா. அதனோடு சமரசம் செய்து கொள்ள உங்களால் முடியாது. சமரசம் செய்து கொள்ள இடமே யில்லை. அங்கே உலகமானது இருக்கும் போது, நீங்கள் அங்கே அதில் உங்களைத் தானே பொருத்திக்கொள்ள இடமில்லை. நீங்கள் அந்தக் காரியங்களுக்கு மரித்திருக்கி றீர்கள். நீங்கள் ஒருமுறை உலகத்திற்கு மரித்து விட்ட பிறகு, மறுபடியும் அக்காரியங்களில் பங்கு கொள்ள உங்களால் எப்படி முடியும்? அதைச் செய்ய முடியாது. எனவே அதைச் செய்ய வேண்டாம். உலகத்தின் காரியங்களுக்கு மரித்து விடுங்கள். 124192.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருங்கள். மறுபடியும் பிறந்து விடுங்கள், அப்பொழுது, நீங்கள், 'அது மிகக் கடினமான காரியம்' என்று சொல்ல வேண்டியிருக்காது, ஸ்திரீகளாகிய நீங்கள், 'நான் என்னுடைய தலைமயிரை நீளமாக வளர்ப்பது மிகக் கடினமாக காரியமாக இருக்கிறது' என்றும். மனிதனாகிய நீ, 'என்னுடைய கோபத்தை விட்டு விடுவதென்பது எனக்கு மிகக்கடினமாக உள்ளது' என்று கூற வேண்டியிருக்காது. 'பையனே, நான் அப்படியே என்னுடைய மனைவியிடம் கூற வேண்டியிருக்கிறது. பையனே, நான் அவளிடம் சென்று, அவளைக் குலுக்கி, 'நான் ஒரு கிறிஸ்தவன் என்று எனக்குத் தெரியும், இதைச் செய்ய வேண்டாம், ஆனால் நீ வாயை மூடிக்கொண்டு, கீழே உட்கார்' என்று கூறுவேன்.' ஊ-உ, அவ்வாறு செய்யாதீர்கள். புரிகிறதா? 193.நீங்கள் அவளைச் சுற்றிலும் உங்கள் கரத்தைப் போட்டுக்கொள்ள முடிந்து, 'இனிய இருதயமே, அது ஒரு கிறிஸ்தவனாக ஆகிக் கொண்டிருக்கவில்லை' என்று கூறிய ஒரு நேரத்தைக் காண நீங்கள் விரும்பினீர்கள். அந்த விதமாகத்தான் நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள், இல்லையா? உங்களால் அவ்விதமாக இருக்க முடியும். பாருங்கள்? ஒரு மனிதன் உங்களுடைய ஒரு பக்க முகத்தில் அறையும் போது, நீங்கள் அவனை ஒரு சிறு கத்தியால் குத்த வேண்டியதில்லை. பாருங்கள்? ஒரு மனிதன் உங்களை ஒரு பக்க முகத்தில் அறையும் போது, 'சகோதரனே, நீ எதற்காக அப்படி செய்தாய்?' என்று கேட்கலாம். பாருங்கள்? அவ்விதமாகத் தான் காரியங்கள் உள்ளன. அதுதான் கிறிஸ்தவம். யாராவது ஒருவர் உங்களைக்குறித்து தீமையான எதையாகிலும் கூறும் போது, அதைக் குறித்து பெரிதாகக் காண்பித்துக் கொள்ள முயற்சி செய்வதற்குப் பதிலாக, ஏதோவொரு இடத்திற்கு நழுவிச் சென்று, 'பரலோகப் பிதாவே, அந்த மனிதன் சாவுக்குரிய ஒருவன். நீர் அவனை விட்டு அந்த ஆவியை எடுத்துப் போட வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அவனை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டாம். நீர் அவனுடைய ஜீவனை இரட்சிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்' என்று கூறுங்கள். 125194.அதைப் பார்த்து, 'கர்த்தாவே, நான் அதைக் கூறியிருக்க வேண்டியதில்லை என்று எனக்குத் தெரியும்' என்று கூற வேண்டாம். நல்லது, நீங்கள் ஒருக்கால் அதை உங்களுடைய உதடுகளால் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய இருதயத்தில் அதை பேசியிருக் கலாம். பாருங்கள்? அது உங்களுடைய இருதயமாக இருக்கிறது, அது தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது, பாருங்கள். நீங்கள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறக்கும் போது, நீங்கள் உண்மையில் ஒவ்வொருவரையும் நேசிப்பீர்கள். இப்பொழுது, நீங்கள் அவர்களுடைய வழிகளையும், அதைப் போன்ற காரியங் களையும் நேசிக்கக் கூடாது, அதில் பங்கு கொள்ள விரும்ப வேண்டாம். உலகத்தின் காரியங்களிலிருந்து விலகியிருங்கள், ஆனால் நீங்கள் உங்களைத்தானே மாசற்றவர் களாகக் காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டிய ஒரே வழி என்னவென்றால், அது உள்ளிருந்து வெளியே வருகிறது, அந்தப் புறா தன்னுடைய சிறகுகளை சரி செய்வது போன்று, நீங்கள் பாருங்கள். அவன் அவைகளைச் சரிசெய்ய வேண்டியதில்லை, 'இப்பொழுது இன்று நான் கட்டாயம் இவை எல்லாவற்றையும் துடைத்து அகற்றியே ஆக வேண்டும்' என்று கூற வேண்டியதில்லை, பிறகு அதைப் போன்று செய்ய வேண்டியதில்லை. இல்லை, அது அதற்குள்ளே எண்ணையைப் பெற்றிருக்கிறது, ஏனென்றால் அது ஒரு புறாவாக இருக்கிறது, அது அப்படியே அதைச் சுத்தமாக வைத்திருக்கிறது. புரிகிறதா? அது சரியே. 126195.நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்களா? நீங்கள் அவ்விதமாக அவரை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? இந்தப் புது வருடத்திற்கு முந்தைய தினத்தன்று அதுதான் உங்களுக்கான என்னுடைய அறிவுறுத்தலாக உள்ளது. நான் இந்தச் சிறு கூடாரத்தினருக்கு வற்புறுத்துகிறேன் (persuade). நான் உங்களை எவ்வளவாய் நேசிக்கிறேன், இந்தச் சிறு கூட்ட ஜனங்களை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நான் சிலசமயங்களில் எப்படியாக உள்ளே வந்து, இந்தக் கட்டிடத்தினூடாக நடந்து சென்று, அப்படியே பார்க்க விரும்புகிறேன். நான் எப்போதுமே எதைக் காண ஏங்குகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆவியினால் நிறைந்து, பாவமானது அதைச் சுற்றிலும் கூட இருக்க முடியாத ஒரு சபையைத் தான் காண ஏங்குகிறேன். ஒரு அங்கத்தினர் ஏதாவது தவற்றைச் செய்தவுடனே, ஆவியான வர் சரியாக அதை அழைப்பார். அப்பொழுது அதை அறிக்கையிடும் முன்பாக அவன் தன்னைத்தானே கிறிஸ்தவர்களோடு சேர்த்துக்கொள்ளவே பயப்பட்டு, அவன் அதைச் சரி செய்து விடுவான், ஏனெனில் நீங்கள் கூடி வரும்போது, அவன் சரியாக அந்தக் கூட்டத்திலேயே அழைக்கப்படுவான். நீங்கள் அங்கே அதைக் காணும்போது, அது அழகாக இருக்காதா? அப்போது, அசுத்தமானது உள்ளே வந்து, உங்கள் மத்தியில் உட்காரும் போது, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட ஒரு விதத்தில் பேசி, அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி, பாருங்கள், அவர்களிடம் கூறுவார். இப்பொழுது, அது ஒருவர் மேல் கிரியை செய்யுமானால், அது மற்றவர் மேலும் கிரியை செய்யும். நீங்கள் பாருங்கள்? புரிகிறதா? ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருந்து, நீங்கள் எல்லாருமே ஒரே பிரிவினராக இருந்து, ஒரே நபராக, அப்படியே ஒரே நபராக இருக்கிறோம். தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கும் இந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக நாம் எல்லாரும் இருப்பது போன்று, எலலாரும் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர் களாக இருந்து, அதே ஆவியினால் நிறையப்பட்டு, அதே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களாக இருப்பது போன்று இருப்பது, அது அற்புதமாக இருக்காதா? இப்பொழுது, நாம் அதைக் கொண்டிருக்க முடியும், தேவன் அதை நமக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆனால் முதலாவது, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, அவரோடு கூட உயிர்த்தெழ வேண்டும். 127196.இப்பொழுது ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். இங்கே கொஞ்சம் கைக்குட்டை களும் கூட வைக்கப்பட்டு இருக்கின்றன. 197.பரிசுத்தமுள்ள தேவனே, கர்த்தாவே, இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும்போது, புனிதத்துவமாக இருப்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். நாங்கள் தேவனுடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். நாங்கள் தேவனுடைய வீடாகிய, கிறிஸ்துவின் சரீரத்தோடு சேர்ந்து உள்ளே கூடியிருக்கிறோம். சரீரத்தின் அங்கத்தினர்கள் ஒன்றாக கூடியிருக்கிறார்கள். ஒருவர் ஓரிடத்திலிருந்தும், மற்றவர் வேறொரு இடத்திலிருந்தும் வந்து, ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். மேலும் இன்று, இந்த ஞாயிறு பள்ளிப் பாடத்தில், நீண்ட நேரமாகி விட்டது, மற்றும் நேரத்தை நீட்டித்துக் கொண்டிருந்து விட்டோம். ஆனால், பிதாவே, அது இந்த விதமாக இருக்க வேண்டும் என்றும், பிறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் என்றால் என்ன அர்த்தம் என்பதையும், மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன அர்த்தம் என்பதையும் நாங்கள் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் உம்மால் நியமிக்கப்பட்டது என்று விசுவாசிக்கிறேன். நாங்கள் முதலாவது காரியங்களை முதலாவதாக வைத்திருக்க வேண்டும், மறுபடியும் பிறக்க வேண்டும் என்றால், நாங்கள் மரித்தாக வேண்டும். நீர் உம்முடைய பிரமாணங்களை ஒருபோதும் மாற்ற மாட்டீர். இயற்கையின் பிரமாணம் இன்னும் வழங்கப்பட்டுத்தான் (வருகிறது). இயற்கையின் பிரமாணத்தில், எந்த விதையாவது மறுபடியும் பிறக்க வேண்டுமானால், அது முதலில் மரித்தாக வேண்டும். மறுபடியும் பிறக்க வேண்டுமானால், நாங்களும் கூட மரித்தாக வேண்டும் என்று உணருகிறோம். கர்த்தாவே, இன்று, அநேகர், நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அநேகர் தாங்கள் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட அனுபவங்களின் பேரில் சார்ந்திருந்து கொண்டு, தாங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறதாக உரிமை கோருகி றார்கள். ஆனால் அது... என்று அவர்களுடைய ஜீவியத்தின் கனிகள் காண்பிக்கின்றன. அவர்கள் தவறான மரத்திலிருந்து தோன்றியிருக்கிறார்கள். 128198.பிதாவே, இந்தக் காலையில் ஒரு செய்தி கொடுப்பீர்களா என்று சகோதரன் நெவில் என்னிடம் பேசி கேட்டுக்கொண்டதினால், நான் ஞாயிறு பள்ளியைப் போதிக்க அதுவே காரணம். ஆகையால், பிதாவே, நான் அதை அன்போடும், என்னுடைய முழு இருதயத்தோடும் போதித் திருக்கிறேன், ஜனங்கள் நிச்சயமாக அதை அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் கொண்டிருந்த ஏதோ கொஞ்சம் அனுபவத்தின் மேல் இளைப்பாறக் கூடாது என்றும், ஆனால் அவர்களுடைய அனுதின ஜீவியத்தின் மேல் பயபக்தியோடு இளைப்பாற வேண்டும் என்றும் அவ்வாறு செய்தேன்; அவர்கள் சபையில் இருக்கும் போதுள்ள சமயங்களில் அவர்கள் எவ்வாறு ஜீவிக்கிறார்கள், வெளியில் பெரும் அழுத்தம் (strain) வரும் போது, அவர்கள் எப்படியாக ஜீவிக்கிறார்கள். தொல்லை எழும்பும் போது அவர்கள் உதவிக்காக சிலுவையை நோக்கி ஓடிப்போகிறார்களா அல்லது அவர்கள் தங்கள் சொந்த ஆவியிலும் சொந்த எண்ணங்களிலும் நடக்கிறார்களா? அவர்கள் சிடுசிடுப்புண் டாக்கும் போது, இவர்களும் அவ்விதம் திருப்பி சிடுசிடுப்போடு நடந்து கொள்கிறார்களா? பிதாவே, அதுதான் இந்தக் கேள்வி. எங்களில் எவரும் மற்றவர்களை இரட்சிப்பது என்பது முற்றிலும் கூடாத காரியமாக இருப்பதை நாங்கள் காணும் போது, தேவன் அதற்குரிய ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார், எல்லாவற்றிற்கும் போதுமான ஒரு-ஒரு பலியை உண்டு பண்ணியிருக்கிறார், நாங்கள் வரக் கூடிய ஒரே வழி அதுதான். எந்த சபையின் மூலமாகவோ, எந்த மதக் கோட்பாட்டின் மூலமாகவோ, எந்த ஸ்தாபனத்தின் மூலமாகவோ, எந்த உணர்ச்சியின் மூலமாகவோ வர முடியாது, ஆனால் கிறிஸ்துவினுடைய வழியின் மூலமாகவே வர முடியும். முதலாவது மனிதன், அந்த நீதிமான் மரித்தான், அவன் தன்னுடைய ஆட்டுக்குட்டியோடு கூட பலிபீடத்தின் மேல் மரித்து போனான். இதே மணி நேரத்தில், மற்ற ஒவ்வொரு நீதிமானும் கிறிஸ்து இயேசுவாகிய தன்னுடைய ஆட்டுக்குட்டியானவரோடு கூட தேவனுடைய வெண்கல பலிபீடத்தின் மேல் மரித்தாக வேண்டியிருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அவரோடு கூட மரித்து, புதிதாக, ஒரு புதிய ஜீவனுக்குள் உயிர்த்தெழுகிறோம். இங்கேயுள்ள எந்த இருதயமும் இதைத் தவற விட்டு விட வேண்டாம். இதை அருளும், கர்த்தாவே. 129199.கர்த்தாவே, இன்றிரவு பிரசங்கம் பண்ணும்படியாக, தொடர் கூட்டங்களை இங்கே துவங்கும்படி, நாங்கள் மீண்டும் இன்று பிற்பகல் 7:30 மணிக்கு திரும்பி வருகையில், இன்று நாங்கள் இதைச் சிந்திக்கட்டும். கர்த்தாவே, இன்றிரவு வல்லமைமிக்க செய்திகளோடு இருக்கும் உம்முடைய ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும். எங்களுடைய ஆத்துமாக்கள் தாமே நிரப்பப்படுவதாக. உள்ளே வரும்படியாக இப்பொழுது வரை காரோட்டி (drove) வந்திருக்கும் இந்த ஜனங்கள் தாமே, அங்கு... இந்த புது வருட தினத்திற்கு முந்தைய தினத்தினூடாக தேவனுடைய வல்லமையுள்ள சுவிசேஷத்தோடு கூட மிகவுமாக நிரப்பப் படுவார்களாக, அவர்கள் இங்கிருந்து சந்தோஷத்தோடும், களிகூர்ந்து கொண்டும் போவார்களாக. இதை அருளும், கர்த்தாவே, அடுத்த வருடத்திற்காக அவர்களுக்கு ஆவிக் குரிய ஆகாரத்தை அருளுவீராக. இதை அருளும். 200.எங்களுக்கு விரோதமாக தீங்கு செய்தவர்களுக்கு நாங்கள் மன்னிப்பது போன்று, எங்களுடைய தப்பிதங் களையும் (trespasses) எங்களுக்கு மன்னித்தருளும். நீர், 'நீங்களும் அவனவன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், உங்கள் பரம பிதாவும் உங்களுக்கு மன்னிக்க மாட்டார்' என்று சொல்லியிருக்கிறீர். எனவே, கர்த்தாவே, நாங்கள் ஒவ்வொருவரையும் மன்னிக்கிறோம். இந்தக் காலையில், நாங்கள், விசுவாசத்தினாலே, எங்கள் ஆத்துமாக்களை பலிபீடத்தின் மேல் கிடத்துகிறோம், கர்த்தாவே, உலகப்பிரகாரமான எல்லா ஜீவனையும் எங்களை விட்டு எரித்துப்போடும். கர்த்தாவே, எங்களுடைய பலியிலிருந்து புகையானது மேலே எழும்பி, உம்முடைய நாசியில் இனிமையான வாசனையாக முகரப்படுவதாக. இதை அருளும், கர்த்தாவே, நாங்கள் தகன ஆட்டுகுட்டியை (burnt lamb) வைக்காமல் இருக்கையில், ஆனால் நாங்கள் பாவிகளாக எங்களைத்தானே அங்கே மேலே வைக்கிறோம், பாவிகளாக தகனம் பண்ணப்பட்டு (burned), ஆட்டுக்குட்டிகளாக ஒரு புதிய பிறப்பிற்குள் மாற்றப்படும்படியாக வைக்கிறோம். இதை அருளும், கர்த்தாவே. 130201.பிறகு எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்; கொடிய வியாதிகளிலிருந்தும் கொடிய மனச்சோர்விலிருந்தும் எங்களை இரட்சித்துக்கொள்ளும். இந்தக் காலையில், கட்டிடத்திலுள்ள ஒவ்வொருவரையும் சுகமாக்கியருளும். கர்த்தாவே, இன்றைக்கு ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும் சுகமடைவார்களாக. நான் இந்த வார்த்தைகளை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன், ஜனங்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் மலைகள், அவைகள் எல்லாம் இன்றே பெயர்ந்து போவதாக. அது வியாதியாக இருக்குமானால், அது இச்சையாக இருக்குமானால், கட்டுங்கடங்கா உணர்ச்சியாக அது இருந்தாலும், அது இந்த உலகத்திலுள்ள எதுவாக இருந்தாலும், அது வழியை விட்டு விலகிப் போவதாக, தேவனுடைய வார்த்தை தாமே உள்ளே வந்து, அவர்களுடைய ஜீவியத்தில் வெளிப்படுவதாக. தீமையி னின்று எங்களை இரட்சித்தருளும்; கர்த்தாவே, ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவை களே. ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் (purchased) என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். இப்பொழுது ஒருவர் மற்றவரின் கரத்தைக் குலுக்குங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான்... அப்படியே சுற்றிலும் திரும்பி, 'என் சகோதரனே, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!' என்று கூறுங்கள். முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் (purchased) என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். (தொடர்ந்து இசைத்துக்கொண்டிருங்கள்.) 131202.இந்த கடந்த வருடத்தில், உங்கள் எல்லாருடைய இரக்கத்திற்காகவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அநேகமாக இன்றிரவு 7:30 மணிக்கு என்னுடைய செய்தியைக் கொண்டு வருவேன். சார்லி, நெல்லி, ராட்னி, மற்றும் அவருடைய மனைவி ஆகியவர்களுடைய தயவுக்காக நான் நன்றி கூற விரும்புகிறேன், வேட்டையாடும் பருவ காலத்தில், நான் அங்கே இருந்த போது, நான் அவர்களுடைய தகப்பன் அல்லது அவர்களுடைய சகோதரன் என்பது போன்று அவர்கள் என்னை நடத்தினார்கள். என்னிடம் மிகவும் தயவாக இருந்து வருகிற ஜனங்களாகிய உங்கள் எல்லாருக்கும் நான் நன்றி கூறுகிறேன். சகோதரன் மற்றும் சகோதரி டாச், சகோதரன் ரைட், மேலும் சகோதரன் பென், மற்றும் அநேகர், ஜனங்களாகிய உங்கள் எல்லாருக்கும்-எல்லாருக்கும், சகோதரன் பாமர் மற்றும், உங்களுக்குத் தெரியும், ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிற உங்கள் எல்லாருக்கும், சுற்றிலுமுள்ள ஒவ்வொரு இடத்திலுமிருந்து வந்திருக்கிற எல்லாருக்கும் நன்றி கூறுகிறேன். 203.தற்செயலாக, மார்ஜியின் தகப்பனார், அவர்கள் நேற்று அழைத்து, அவர் வியாதிப்பட்டிருந்ததாகக் கூறினார்கள். மார்ஜியும் ரோட்னியும் இங்கேயிருக்கிறார்களா? அவர்கள் இல்லையா? அந்த வயதானவருக்கு எப்படி இருக்கிறது?ளகூட்டத்திலிருக்கிற ஒரு சகோதரன், 'அவர் நிச்சயமாக சற்று நலமாகவே இருக்கிறார்' என்று கூறுகிறார். - ஆசிரியர்.] நாம் அப்படியே மெதுவாக ஜெபிப்போம். 132204.பரலோகப் பிதாவே, ஒரு சில வாரங்களுக்கு முன்பு, மேலே கென்டக்கியிலுள்ள சாலையின் மேலே பின்புற பகுதியில் சிறு நாட்டுப்புற தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தகப்பனார் தம்முடைய தளர்த்தியான மேலாடையையும், அவருடைய தேய்ந்து போன நீல நிற சட்டையையும் அணிந்தவராய் அங்கே வெளியே உட்கார்ந்திருந்தபடி நடுங்கிக் கொண்டிருந்தார். நான் அவரைக் கரத்தால் பற்றிப் பிடித்துக்கொண்டு, அவர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். ஒரு சிறு வயதான தாயார் கொஞ்சம் பிஸ்கட்டுகளையும் குழம்பையும் கொண்டிருக்கும்படியாக என்னை உள்ளே அழைத்திருந்தார்கள். கர்த்தாவே, அவர்கள் உம்முடைய வார்த்தைக்கு மாத்திரமே மரியாதை கொடுத்தார்கள். இப்பொழுது, அவர் அரிதாகவே இங்கிருக்கிறார், அவர் எங்களை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார். கர்த்தாவே, அவர் ஒரு பாவியாக மரிக்க விடாதேயும். ஒருக்கால் அது எங்களுடைய... இருக்கலாம். கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனுடைய தவறாக அது இருக்கலாம். அந்தப் பரிதாபத்திற்குரிய வயதான மனிதருக்கு அந்த மண்ணாங்கட்டிகளை அடித்து, (உடைப்பதைத்) தவிர வேறு எதுவும் தெரியாது, அவர் தம்முடைய பிள்ளைகளின் ஜீவனத்திற்காக அதைச் செய்து கொண்டிருக்கிறார், ஆனால் அவருக்குள்ளே ஒரு நல்ல கனிவான ஆவி இருப்பதைக் கண்டு கொண்டேன். அவர் ஒரு பாவியாக மரிக்க விடாதேயும். கர்த்தாவே, அவருடைய மகள் எங்களில் ஒருவராக இருக்கிறாள். எப்படியாக சிறு வயதுடைய மார்ஜி, அந்தச் சிறு தோள்கள் எப்படியாக வலித்துக் கொண்டிருக்கின்றன, அவள் எப்படியாக எனக்கு பணிவிடை செய்திருக்கிறாள், மேலும் நான் அங்கே தூங்குவதற்காக அவள் எப்படியாக எனக்கு ஒரு படுக்கையைச் செய்ய முயற்சித்துக் கொண் டிருக்கிறாள், மேலும் மேஜையில் ஒரு-ஒரு காலை உணவைக் (கொடுத்திருக்கிறாள்), அவளும் நெல்லியும் சார்லியும் அவர்கள் எல்லாரும், தாய் காக்ஸ் அவர்களும் அதைச் செய்திருக்கிறார்கள். 'அவள் போனில் அழுது கொண்டிருக் கிறாள். அவளுடைய தகப்பனார் மரித்துக் கொண்டிருக்கி றார்' என்று அவர்கள் கூறினார்கள். அது அவளுடைய தகப்பனார். 133205.கர்த்தாவே, சற்று முன்பு, அந்த ஆக்ஸிஜன் கூடாரத்திற்கு (oxygen tent) வந்தீர், அந்த கூடாரத்தை தட்ட வேண்டாம், ஆனால் அவருடைய இருதயத்தின் அந்த வாசல் கூடாரத்தைத் தட்டும். கர்த்தாவே, ஒருக்கால் எங்களில் சிலர் அவரிடம் போகும்படியாக எங்கள் கடமையை நிறை வேற்றாமல் இருந்திருக்கலாம். உம்முடைய மற்ற ஊழியக் காரர்களில் சிலர் ஒருக்கால் அவருடைய வாலிப நாட்களில், அவருக்கு சுயநினைவிருந்த போது (mind was alert), ஒருக்கால் அது எங்களுடைய தவறாக இருக்கலாம், கர்த்தாவே, நாங்கள் அவரிடம் வற்புறுத்திச் (சொல்லாமல்) போயிருக்கலாம். அப்படியானால், கர்த்தாவே, எங்களை மன்னித்தருளும், அவரை உம்முடைய இராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்ளும். இதை அருளும், பிதாவே. இப்பொழுது, நாங்கள் அவரை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். கூடுமானால், அல்லது இது உம்முடைய மகத்தான திட்டமாக இருக்கு மானால், நீர் அவரை எழுப்புவீரானால், கர்த்தாவே, ஒருக்கால் எங்களில் சிலர் அவரிடம் பேச இன்னும் ஒரு தருணத்தைக் கொண்டிருப்பார்கள். எனினும், எங்களுடைய ஊக்கமாக விண்ணப்பம் அவருடைய ஆத்துமாவுக்குத்தான், கர்த்தாவே, ஏனென்றால் அதி சீக்கிரத்தில் அது அதனுடைய பிரயாணத்தை எடுத்துக்கொள்ளப் போகிறது, அது அவ்வித மாகவே இருப்பது போன்று தோன்றுகிறது, அதோ வெளியே அங்கிருக்கிற அறிந்திராத அதற்குள் கடல் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார், ஓ, கப்பலோட்டி இல்லாமலே, அதில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார், அந்த மூடுபனியி னூடாகவும், அதோ அங்கிருக்கிற மறைபனியினூடாகவும், அவருக்கு வழிகாட்ட யாருமே இல்லாமலும் அவர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய வழியைத் தவற விட்டு விடுவாரே, கர்த்தாவே. வழியை அறிந்து வைத்திருக்கிற அந்த கப்பலோட்டி (Pilot) தாமே இந்தக் காலையில் அவரிடம் வந்து, அந்தப் பழைய சீயோன் கப்பலின் பக்கத்தில் அதற்கு எதிராக, அவருடைய சிறு கப்பலை நங்கூரம் பாய்ச்சுவாராக. (அப்படியானால்), அவர் பிரயாணம் செய்கிற போது, அவர் நிச்சயமாக பாதுகாப்போடு கரையில் இறங்குவார். இதை அருளும், பிதாவே. இப்பொழுது, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் நாம் நம்முடைய கரங்களை உயர்த்துவோம். முதலில் அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் (purchased) என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 134206.இந்தக் காலையில் நான் இருந்தது போல அல்ல, இன்றிரவு செய்தியில் சற்று துரிதமாக இருக்க முயற்சிப்பேன். இப்பொழுது அமைதியாக இங்கிருந்து புறப்பட்டுப் போகிறேன். உங்கள் எல்லாரையும் என்னோடு கூட வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்கள் எல்லாருக்கும் ஒரு நல்ல விருந்து கொடுக்க முடிந்தால், அதுவே எனது விருப்பம். என்னால் கூடுமானால், நான் நிச்சயமாக அதைச் செய்வேன். ஆனால் கர்த்தரோ தம்முடைய நன்மையிலும் தயையிலும் ஒரு-ஒரு உண்மையான ஆகாரத்தை, ஆவிக்குரிய பிரசங்கத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நம்புகிறேன், நீங்கள் அதைக் கண்டு, நீங்கள் நேசிக்கும் உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சிக்குத்தக்கதாக வளருவீர்கள். இப்பொழுது, நாம் இந்தக் கட்டிடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கையில், நாம் வெளியே போகும் போது, ஜெபத்திற்காக நிற்போம், நாம் இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல் என்ற நம்முடைய பாடலைப் பாட விரும்புகிறோம், நீங்கள் அதற்குக் கீழ்ப்படிவதில் நிச்சயமுடையவர்களாயிருங்கள். [சகோதரன் நெவில், 'நான் அறிவிக்க விரும்புகிற ஒரு அறிவிப்பு என்னிடம் உள்ளது' என்று கூறுகிறார் - ஆசிரியர்.](என்ன? நீர் சென்று சபையோரை வெளியே அனுப்பி வையும்.) இப்பொழுது, சற்று நேரத்தில் நாம் அறிவிப்பைக் கொடுக்கப் போகிறோம், நாம் நம்முடைய பாடலைப் பாடுகையில், சீக்கிரத்தில் அறிவிப்புகள் கிடைத்து விடும். சரி. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், வருத்தமும் துக்கமும் மிக்க பிள்ளையே; சந்தோஷம் ஆறுதல் அது உனக்களிக்கும், செல்லுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், (விலையுயர்ந்த நாமம்), ஓ எவ்வளவு இனிமை! (ஓ எவ்வளவு இனிமை!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! (எவ்வளவு இனிமை!) பூலோகத்தின் நம்பிக்கையும், பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடகமாக; இப்பொழுது கவனியுங்கள், என்ன. உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது, (அப்போது என்ன செய்வாய்?) அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்; விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ எவ்வளவு இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 135207.இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்து இதை ஒவ்வொரு மனிதனுக்கும் கூறுகிறார் என்று விசுவாசிக்கிறேன், அவருடைய முதலாவது உபதேசத்தில், 'ஒருவன் ஜலத்தினால் பிறவாவிட்டால்' என்று கூறுகிறார், (அது வார்த்தையாக உள்ளது, வார்த்தையைக் கொண்டு தண்ணீரினாலே கழுவப்படுதல்), 'ஆவியினாலும் பிறவா விட்டால்' (அது பரிசுத்த ஆவியாக உள்ளது, பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்), 'அவனால் பரலோக இராஜ்யத்தைக் காண முடியாது.' நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? 'ஜலத்தினால்,' வார்த்தையின் மூலம் தண்ணீரினாலே கழுவப்படுதல், வார்த்தையும் சத்தியமும், அவரே சத்தியமாயிருக்கிறார். 'ஜலத்தினாலும் ஆவியினாலும்,' வார்த்தையை உறுதிப்படுத்தி, தேவனை எனக்குள்ளாக ஜீவிக்கும்படி செய்ய, ஆவியானது வார்த்தை யோடு கூட வந்து கொண்டிருக்கிறது. புரிகிறதா? அது நடக்கும் வரையில், நம்மால் பரலோக இராஜ்யத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது. அப்படியானால் அது சம்பவிக்கத் தொடங்கும் போது, வார்த்தையானது நமக்குள்ளிருப்பதை காண்கிறோம், வார்த்தையினாலும் ஆவியினாலும் பிறந்து, தன்னைத்தான் வெளிப்படுத்தி, வார்த்தையை விட்டு நான்